Just In
- 27 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 46 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 48 min ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Movies
ஓடிடியில் வெளியாகும் முன்னே லீக்கான துணிவு HD பிரின்ட்.. நெட்பிளிக்ஸில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
- News
கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது தெரியாம WhatsApp-ல் இனி சாட் செஞ்சா சிரிப்பாங்க.! கெத்தா உங்க அவதார்-அ உடனே உருவாக்குங்க.!
வாட்ஸ்அப் புதிய அம்சங்களை பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிடுகிறது. அந்த வரிசையில் சமீபத்திய புது அம்சமாக வாட்ஸ்அப் நிறுவனம் 'அவதார்'களை (WhatsApp Avatar) உருவாக்கி ஷேர் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இப்போது அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைப்பதனால், எப்படி உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உங்களைப் போன்ற அவதாரை உருவாக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

உங்களை போன்ற சொந்த அவதார் பொம்மைகளை இப்போது வாட்ஸ்அப் இல் உருவாக்கலாமா?
வாட்ஸ்அப் பயனர்கள் மற்றும் மக்கள் தங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சிறந்த முறையில் வெளிப்படுத்த அவதாரங்கள் (WhatsApp Avatar) உதவும் என்று வாட்ஸ்அப் இந்த உரிமையாளர் நிறுவனமான மெட்டா கூறியுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் (WhatsApp messaging apps) இல் இனி அவரவர் தங்களைப் போன்ற சொந்த அவதாரை உருவாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனம் வழங்கும் 36 தனிப்பயன் ஸ்டிக்கர்களில் (WhatsApp sticker) உங்கள் அவதாரை பயன்படுத்தலாம்.

உங்கள் விருப்பம் போல எல்லாவற்றையும் டிசைன் செய்யலாம்.!
மெட்டா (Meta) நிறுவனம் இப்போது முதற்கட்டமாக இந்த அவதார்களை வாட்ஸ்அப் மேடையில் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் நிறுவனம் இன்னும் ஏராளமான ஸ்டைல் (WhatsApp Avatar Style) மேம்பாடுகளைச் சேர்ப்பதாக வாட்ஸ்அப் அதன் வலைப்பதிவு இடுகையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல், தோல் நிறத்தை மாற்றுவது, கண்கள், மூக்கு, காது, வாய் என்று ஒவ்வொன்றையும் உங்களை போல நீங்கள் உருவாக்கலாம்.

இந்த புது அப்டேட்டை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மெட்டா நிறுவனம் ஏற்கனவே இந்த புதிய அப்டேட்டை அனைத்து சாதனங்களுக்கும் வழங்கத் தொடங்கியுள்ளது.
அதாவது வரும் நாட்களில் இந்த அம்சம் பொதுவாக எல்லா வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அவதார் அம்சத்தை நீங்களும் பயன்படுத்த விரும்பினால், உடனே உங்கள் வாட்ஸ்அப் ஆப்ஸை அப்டேட் (WhatsApp Update) செய்யுங்கள். கீழே வரும் முறைப்படி உங்களுக்கான அவதாரை உருவாக்குங்கள்.

3D அவதாரங்கள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் என்ன சொல்கிறார்?
"நாங்கள் வாட்ஸ்அப்பில் அவதாரங்களைக் (WhatsApp Avatar Feature) கொண்டு வருகிறோம்! இப்போது நீங்கள் வாட்ஸ்அப் சாட்களில் உங்கள் அவதாரத்தை ஸ்டிக்கராகப் பயன்படுத்தலாம். எங்கள் எல்லா பயன்பாடுகளிலும் விரைவில் கூடுதல் ஸ்டைல்கள் வரும்" என்று Meta இன் CEO மார்க் ஜுக்கர்பெர்க் Facebook இல் அறிவித்தார். மெட்டாவின் 3டி அவதாரங்கள் (3D avatar) ஸ்னாப்சாட்டின் பிட்மோஜி (Snapchat Bitmoji) மற்றும் ஆப்பிளின் மெமோஜி (Apple Memoji) போன்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் அவதார் உருவாக்குவது எப்படி ?
How to create WhatsApp Avatar:
- வாட்ஸ்அப் அவதாரத்தை உருவாக்க, "Settings" என்பதற்குச் சென்று "Avatar" என்பதைத் தேடவும்.
- Avatar > Create Your Avatar என்பதைத் தட்டி, அதை உருவாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
- தோல் தொனி (skin tone), சிகை அலங்காரம் (hairstyle), மூக்கு (nose) போன்ற பல்வேறு தனிப்பயனாக்குதல் விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
- இறுதியில் "Done" என்பதை கிளிக் செய்யவும்.
- "Settings" என்பதைத் தட்டி, உங்கள் ப்ரொபைல் பிக்ச்சர் புகைப்படத்தைத் தட்டவும்.
- படத்தை மாற்ற திரையில் "பென்சில் (Pencil)" விருப்பத்தைக் காண்பீர்கள்.
- உங்கள் டிஜிட்டல் அவதாரை ப்ரொபைல் படமாக வைக்க "Use Avatar" என்பதை கிளிக் செய்யவும்.
- வாட்ஸ்அப் சாட்டை திறந்து "Stickers" விருப்பத்திற்குச் செல்லவும்.
- ஐபோன்களில், ஸ்டிக்கர் விருப்பம், நீங்கள் செய்தியை உள்ளிடும் சாட் பாக்சில் இருக்கும்.
- ஆண்ட்ராய்டு பயனர்கள் சாட் பாக்சில் உள்ள ஈமோஜி சின்னத்தைத் தட்டுவதன் மூலம் ஸ்டிக்கர்களை அணுகலாம்.
- பின்னர் கீழே உள்ள "GIF" க்கு அடுத்துள்ள ஸ்டிக்கர் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- நீங்கள் ஏற்கனவே அவதாரை உருவாக்கியிருந்தால், நீங்கள் ஒரு பேக்கைக் காண்பீர்கள்.
- நீங்கள் அனுப்ப விரும்பும் அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து Send என்பதைத் தட்டவும்.
- நீங்கள் அவதாரை உருவாக்கவில்லை எனில், புதிய பக்கம் ஒன்று தோன்றும், அதில் ஒன்றை உருவாக்கும்படி கேட்கும். 'Get Started' என்பதைத் தட்டி, உங்கள் அவதாரத்தை உருவாக்கலாம்.

WhatsApp அவதாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
How and where can we use WhatsApp Avatars: உங்கள் அவதாரைச் சேமித்தவுடன், WhatsApp தானாகவே புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கும்.
அவதார்களை வாட்ஸ்அப்பில் ப்ரொபைல் படமாகப் (WhatsApp profile picture) பயன்படுத்தலாம் அல்லது ஸ்டிக்கர் பேக்கில் (WhatsApp sticker pack) இருந்து தேர்ந்தெடுத்து சாட் பட்டியலில் உள்ள தொடர்புகளுக்கு (WhatsApp contact) அனுப்பலாம்.
உங்கள் வாட்ஸ்அப் ஸ்டோரிஸ்-களிலும் (WhatsApp stories) அவதாரங்களை இடுகையிடலாம்.

வாட்ஸ்அப்பில் உங்கள் அவதாரத்தை எப்படி ப்ரொபைல் பிக்ச்சராக மாற்றுவது?
How to make your avatar as your profile photo on WhatsApp:

உங்கள் அவதாரத்தை வாட்ஸ்அப் சாட்டில் அனுப்புவது எப்படி?
How to send your avatar on WhatsApp Chat:

WhatsApp ஸ்டிக்கர் பேக்கில் எப்படி அவதாரை உருவாக்குவது?
How to send your avatar as WhatsApp stickers:
இந்த முறைகளில் இனி நீங்களும் கெத்தாக புதிய வாட்ஸ்அப் அவதார் அம்சத்தை உங்கள் சாட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470