சீக்ரெட் போல்டர் உருவாக்கி பிரைவேட் விஷயங்களை எப்படி மறைப்பது? யார் கண்ணுக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்!
உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில், உங்களுடைய பிரைவேட் தகவல்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்த முடியவில்லையா? அப்படியானால், இந்த ட்ரிக்கை பயன்படுத்தி, உடனே ஒரு சீக்ரெட் போல்டரை உருவாக்குங்கள். இதன் மூலம் உங்கள் பிரைவேட் தகவல்கள் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைத்துவைக்கப்படும்.
சரி, இதை எப்படி செய்வதென்று பார்க்கலாமா? உங்களிடம் விண்டோஸ் (Windows OS) இல் இயங்கும் லேப்டாப் (Laptop) அல்லது கம்ப்யூட்டர் (Computer) இருந்தால், இந்த சீக்ரெட் ட்ரிக்கை நீங்கள் பயன்படுத்தலாம். இதைத் தொடங்குவதற்கு, முதலில் உங்களுடைய போல்டரை உருவாக்க விரும்பும் இடத்தை உங்கள் சாதனத்தில் ஓபன் செய்யவும். இது உங்கள் டெஸ்க்டாப்பாகவோ அல்லது எந்த போல்டராகவோ இருக்கலாம்.

நீங்கள் போல்டரை உருவாக்க விரும்பும் பகுதியில், ரைட் கிளிக் செய்யவும். ஒரு புதிய போல்டரை உருவாக்க, மெனுவிலிருந்து "New Folder", என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புது போல்டர் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் உருவாகும். புதிய போல்டர் உருவாக்கப்பட்டவுடன், அதன் மீது ரைட் கிளிக் செய்து, மெனுவிலிருந்து 'Rename' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, 'Alt' கீயை அழுத்திப் பிடித்து, உங்கள் கீபோர்டில் உள்ள நம்பர்பேடை பயன்படுத்தி '0160' எண்ணை டைப் செய்யவும். முக்கிய குறிப்பு, உங்கள் கீபோர்டில் உள்ள மேற்பகுதியில் காணப்படும் சிம்பல் மற்றும் எண்கள் உள்ள கீகளை பயன்படுத்தினால், இந்த ட்ரிக் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளவும்.ஆகையால், நம்பர் பேடை (Numberpad) பயன்படுத்தவும். '0160' என டைப் செய்த பிறகு, அழுத்தி பிடித்த 'Alt' கீயை விடுவிக்கவும்.
போல்டரின் ரீநேம் அம்சத்தை நீங்கள் இப்போது பார்க்க வேண்டும், பெயர் இருந்த இடத்தில் ஒரு வெற்று இடம் காண்பிக்கப்படும். போல்டரின் இந்த புதிய பெயரைச் சேமிக்க 'Enter' ஐ அழுத்தவும். அடுத்தபடியாக, போல்டரின் ஐகானை நாம் மாற்ற வேண்டும். இதை செய்ய, நீங்கள் முதலில், நீங்கள் ஐகானை மாற்ற வேண்டும். நீங்கள் விரும்பும் போல்டரை செலெக்ட் செய்து ரைட் கிளிக் செய்யவும்.

மெனுவிலிருந்து, 'Properties' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் விளைவாக, பல டேப்கள் கொண்ட புதிய விண்டோ ஓபன் செய்யப்படும். பிறகு 'Customize' டேப் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். போல்டர் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும், மற்றும் செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பல விருப்பங்களைக் கொண்ட புதிய விண்டோ உங்களுக்கு காண்பிக்கப்படும்.
Folder icons விருப்பத்தில் இருந்து "Change icon" கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இது தேர்வு செய்ய பல்வேறு ஐகான்களுடன் புதிய விண்டோவை திறக்கும். நான்கு பிளாங்க் (blank icon) ஐகான்களைக் காணும் வரை வலதுபுறமாக ஸ்க்ரோல் செய்யவும். இந்த ஐகான்கள் முற்றிலும் காலியாக உள்ளன, அவற்றில் வடிவமைப்பு அல்லது படம் எதுவும் இருக்காது, இந்தபிளாங்க் ஐகான்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஐகானின் சிறிய முன்னோட்டத்தைக் காண்பீர்கள். பிளாங்க் ஐகானைத் தேர்ந்தெடுத்ததும், அதை போல்டரில் பயன்படுத்த 'OK' என்பதைக் கிளிக் செய்யவும். போல்டரின் ஐகான் அகற்றப்பட்டதை நீங்கள் இப்போது பார்ப்பீர்கள். போல்டர் இப்போது உங்கள் பிளாங்க் மற்றும் வைட் ஐகானாக தோன்றும். இதன் மூலம், பெயர் மற்றும் ஐகான் இல்லாத ஒரு போல்டரை வெற்றிகரமாக உருவாக்கலாம்.
உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த போல்டரை நீங்கள் கிளிக் செய்தால், அல்லது செலக்ட் விண்டோவில் அதைச் சேர்க்கும் வரை அல்லது உங்கள் மவுஸ் பாயிண்டரை அதன் மேல் நகர்த்தும் போது மட்டுமே இந்த போல்டரை உங்களால் காண முடியும். மற்ற நேரங்களில் இதை உங்களால் காண முடியாது. இப்படி செய்தால், உங்கள் போல்டர் சீக்ரெட் ஆக மறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications








