PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!

|

PDF என்பது மாணவர்கள் முதல் தொழில் வல்லுனர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆவண முறையாகும். பிடிஎஃப் கோப்புமுறை தேவை அதிகரித்திற்கும் நேரத்தில் பல பிடிஎஃப் மாற்றிகள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒருவர் பிடிஎஃப் கோப்புகளை கன்வெர்ட் செய்ய வேண்டும் என்றால் அதை எளிதாக மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

பிரதானமாக இருக்கும் பிடிஎஃப்

பிரதானமாக இருக்கும் பிடிஎஃப்

PDF கோப்பில் மாற்றங்களை மேற்கொள்வது என்பது எளிதான விஷயம் அல்ல. இதன்காரணமாகவே பிடிஎஃப் ஆவணத்தை வேர்ட் டாக்குமென்டாக மாற்றும் தேவை அதிகமாக உள்ளது. திருத்தம் செய்யமுடியாததாக இருக்கும் பிடிஎஃப் டாக்குமென்டை திருத்தம் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக மாற்றுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

வேர்ட் கோப்புகளாக மாற்றுவது எப்படி

வேர்ட் கோப்புகளாக மாற்றுவது எப்படி

பிடிஎஃப் கோப்புகளை வேர்ட் கோப்புகளாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இந்த முறையை ஸ்மார்ட்போன்களிலும், கணினியிலும் பயன்படுத்தலாம். இதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

PDF கோப்பை வேர்ட் டாக்குமென்டாக பதிவிறக்கம் செய்யலாம்

PDF கோப்பை வேர்ட் டாக்குமென்டாக பதிவிறக்கம் செய்யலாம்

Www.hipdf.com என்ற வலைதளத்திற்கு செல்லவும். அதன்பின் பிடிஎஃப் டூ வேர்ட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். கோப்பு அப்லோட் என்பதை கிளிக் செய்து உள்ளே நுழையவும் அதன்பின் தங்களது சாதனத்துக்குள் சென்று கோப்புகளை கிளிக் செய்து ஓபன் செய்யவும். பதிவேற்றம் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். பின் மாற்றவும்(Convert) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் எடுக்கும் பின் பதிவிறக்கவும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த கோப்புகளை வேர்ட் டாக்குமென்டாக ஓபன் செய்யலாம்.

Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?

பயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

பயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

இதே பயன்பாட்டை ஆஃப்லைனில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். கணினியிலும் இந்த பயன்பாட்டை பெறலாம். இதற்கு Wondershare PDFelement என்ற பயன்பாட்டை கிளிக் செய்ய வேண்டும். இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து அதில் காட்டும் வழிமுறைகளை பின்பற்றி பிடிஎஃப் கோப்பை அப்லோட் செய்து வேர்ட் டாக்குமென்டை பதிவிறக்கம் செய்யலாம்.

ஸ்கேன் செய்த பிடிஎஃப் கோப்புகள்

ஸ்கேன் செய்த பிடிஎஃப் கோப்புகள்

இருப்பினும் பிடிஎஃப் கோப்புகளில் சில மாற்று முறைகள் உள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை எடிட் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை எடிட் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக இலவசமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

மைக்ரோசாஃப்ட் வேர்ட் பயன்பாடு

மைக்ரோசாஃப்ட் வேர்ட் பயன்பாடு

இதை மேற்கொள்ள உங்கள் கணினியில் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டை பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவவும். கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட்டை லாக்இன் செய்து திறந்து வைக்கவும், இதை திறந்து ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை பதிவேற்றம் செய்யவும். பின் மைக்ரோசாப்ட் வேர்ட் தாமாகவே ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்பை வேர்ட் டாக்குமென்டாக மாற்றம் செய்யும். இதை வேர்ட் டாக்குமென்டாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Convert PDF file to Word File in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X