டெக் டிப்ஸ்: Word டாக்குமெண்ட்-ஐ சில நொடிகளில் PDF ஆக மாற்றுவது எப்படி?

|

நம்முடைய ஸ்மார்ட்போனில் இன்று நாம் எண்ணில் அடங்காத பல விஷயங்கள் செய்து வருகிறோம். உதாரணமாக அழைப்புகளில் உரையாடுவது, சாட் செய்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வது மற்றும் அனுப்புவது, முக்கியமான ஆவணங்களை போன் மூலமாகவே பகிர்வது போன்ற பல விஷயங்களை நாம் நம்முடைய ஸ்மார்ட்போன் மூலமாகச் செய்து முடிக்கிறோம். இதில், நம்மில் பெரும்பாலானோர் செய்யும் ஒரு பொதுவான விஷயமென்றால் அது, ஆவணங்களைப் பகிர்வது தான்.

வோர்ட் (Word) டாக்குமெண்டை எப்படி pdf ஆக மாற்றுவது?

வோர்ட் (Word) டாக்குமெண்டை எப்படி pdf ஆக மாற்றுவது?

சில சமயங்களில், அவற்றை நாம் மொபைலில் இருந்தே எடிட் செய்து, மீண்டும் திருத்தங்களுடன் பல்வேறு நோக்கங்களுக்காகப் பகிர்ந்து வருகிறோம். ஆனால், இன்னும் நம்மில் சிலருக்கு ஒரு வோர்ட் (Word) டாக்குமெண்டை எப்படி pdf ஆக மாற்றுவது என்பது தெரியாமல் திணறுகிறோம். இந்த சிக்கலை சந்தித்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. ஒரு வோர்ட் டாக்குமென்டோ எப்படி பிடிஎஃப் (PDF) டாக்குமெண்ட்டாக மாற்றுவது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

PDF ஃபார்மட்டிற்கு மாற்ற உதவும் ஆப்ஸ்

PDF ஃபார்மட்டிற்கு மாற்ற உதவும் ஆப்ஸ்

உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து ஒரு ஆவணத்தை pdf ஆக உருவாக்குவது என்பது உண்மையிலேயே மிகவும் சுலபமான காரியம் தான். இதைச் சுலபமாகச் செய்து முடிக்க உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு முதல் விஷயம், ஒரு நல்ல பயன்பாடாகும். ஆம், வோர்ட் ஃபார்மட்டில் உள்ள ஆவணத்தை PDF ஃபார்மட்டிற்கு மாற்ற உதவும் ஆப்ஸ் உங்களுக்குத் தேவை. உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு ஆவணத்தைத் திருத்த அனுமதிக்கும் சில இன்பில்ட் ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்த வேலையை எப்படி சுலபமாக ஸ்மார்ட்போனிலேயே முடிப்பது?

இந்த வேலையை எப்படி சுலபமாக ஸ்மார்ட்போனிலேயே முடிப்பது?

ஆனால், ஆவணத்தைத் திருத்துவதற்கும் மாற்றுவதற்கும் உங்கள் சாதனத்தில் ஒரு சரியான பயன்பாட்டை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கூடுதல் மென்பொருளை எதையும் பயன்படுத்தாமல், இந்த வேலையை எப்படி சுலபமாக முடிப்பது என்பதை அறிந்துகொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளைச் சரியாகப் பின்தொடருங்கள். இந்த பதிவின் இறுதியில், Word to PDF மாற்றம் உங்களுக்குச் சுலபமானதாக மாறிவிடும்.

வெப் பிரௌசர் மூலம் ஸ்மார்ட்போனிலேயே PDF உருவாக்குவது எப்படி?

வெப் பிரௌசர் மூலம் ஸ்மார்ட்போனிலேயே PDF உருவாக்குவது எப்படி?

 • முதலில் உங்களின் வெப் பிரௌசரை ஓபன் செய்யுங்கள்.
 • கூகுள் சர்ச் சென்று "Image to pdf creator" ​​என டைப் செய்யவும்.
 • வெப் பக்கம் திறக்கப்பட்டதும், நீங்கள் மாற்ற விரும்பும் இமேஜ் அல்லது படத்தைப் பதிவேற்றவும்.
 • பதிவேற்றிய பின், Create PDF என்பதைக் கிளிக் செய்யவும்.
 • இப்போது உங்களுக்குப் பதிவிறக்கம் செய்யும் விருப்பம் காண்பிக்கப்படும்.
 • Download என்பதைக் கிளிக் செய்யவும்.
 • சில நொடியில் உங்களிடம் இருந்த இமேஜ் டாக்குமெண்ட் PDF ஆக மாற்றப்பட்டது.
 • யூடியூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி?- சேனல் தொடங்கி பிரபலமடைய எளிய வழிமுறைகள்- இனி ஒரே வருமானம் தான்!யூடியூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி?- சேனல் தொடங்கி பிரபலமடைய எளிய வழிமுறைகள்- இனி ஒரே வருமானம் தான்!

  Google docs மூலம் PDF உருவாக்குவது எப்படி?

  Google docs மூலம் PDF உருவாக்குவது எப்படி?

  • இதேபோல், Google docs மூலம் கூட நீங்கள் உங்கள் ஆவணத்தை pdf ஃபார்மட்டிற்கு மாற்றலாம்.
  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Google docs பயன்பாட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • இப்போது Google docs இல் வேர்ட் டாக்குமெண்ட் அல்லது எக்செல் பைல்களைப் பதிவேற்றவும்.
  • இப்போது இந்த ஃபைல்களை Google drive இல் பதிவேற்ற முயற்சிக்கவும்.
  • இப்போது Google drive இல் இருந்து நீங்கள் மாற்ற விரும்பும் ஆவணத்தை சர்ச் செய்யுங்கள்.
  • பின்னர் அதை docs இல் பதிவேற்றவும்.
  • பிளஸ் (+) ஐகானை கிளிக் செய்வதன் மூலம் PDF ஐ உருவாக்கும் இடுகைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்.
  • இது தான் மிக முக்கியமான ஸ்டேப்

   இது தான் மிக முக்கியமான ஸ்டேப்

   • பின்னர் புதிய டாக்குமெண்ட் (new document) அல்லது புதிய டெம்ப்ளேட் (new template) தேர்ந்தெடுக்கவும்.
   • தேவையான தகவலை டாக்குமென்டில் சேர்க்கவும் அல்லது தேவைகளுக்கு ஏற்ப எடிட் செய்யவும்.
   • இப்போது மேல் வலது மெனுவில் மூன்று புள்ளிகளைக் காண்பீர்கள்.
   • அதை கிளிக் செய்யவும்.
   • Share and Export விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
   • இப்போது Save as என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
   • இது தான் மிக முக்கியமானது, ஃபார்மட் தேர்வில் PDF என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
   • இறுதியாக 'இதை' மட்டும் செய்யுங்கள்

    இறுதியாக 'இதை' மட்டும் செய்யுங்கள்

    • பின்னர் OK என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இப்போது PDF எக்ஸ்போர்ட் செய்யவும்.
    • இப்போது மேலே அமைந்துள்ள Download பட்டனை கிளிக் செய்யவும்.
    • இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் PDF வடிவில் மாற்றப்பட்ட ஆவணத்தைப் பெறுவீர்கள்.
    • இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் எளிதாக PDF டாக்குமெண்டை உங்கள் போனிலேயே உருவாக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to convert a word document to PDF from your smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X