Smart TV இருக்கா? இனி சுத்தம் செய்யும் போது தவறி கூட இப்படிச் செய்யாதீர்கள்.. அலெர்ட் ஆகிக்கோங்க.. ஏன்?
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) அறிமுகம் செய்கின்றன. அதுவும் தற்போது 43 இன்ச், 50 இன்ச் டிவிகள் மேம்பட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் அவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது நாம் அதிகம் செலவு செய்து வாங்கும் இந்த ஸ்மார்ட் டிவிகளின் திரையைச் சரியான முறையில் சுத்தம் செய்யாத பட்சத்தில் அதில் கீறல்கள் விழுவதற்கும், திரையில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளன. எனவே டிவியின் திரைக்கு எந்தவித பாதகமும் ஏற்படாமல் டிவியை எப்படி சுத்தம் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

முதலில் டிவியை ஆஃப் செய்த பின்பு தான் சுத்தம் செய்ய வேண்டும். அதாவது டிவியை ஆஃப் செய்த பின்பு திரை (screen) கறுப்பாக இருக்கும்போதுதான் அதில் தூசிகள் தெளிவாகத் தெரியும் என்பதால் தான், டிவியை ஆஃப் செய்த நிலையில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஸ்மார்ட் டிவியின் திரையில் அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட சுத்தம் செய்யும் திரவங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை நீங்கள் கேட்ஜெட் கிளீனிங் லிக்விட் வைத்திருந்தாலும், அதை நேரடியாகத் திரையில் ஸ்பிரே செய்து துடைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் திரையில் அந்த திரவத்தின் அடையாளம், சுத்தம் செய்ய அடையாளம் தங்கிவிடும். மேலும் திரையும் பாதப்படையாக்கூடும். மேலும் ஒரு சில திரைகள் நீர்/திரவம் படுவதால் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக உங்கள் ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை லேசான ஈரப்பதத்துடன் வைத்து துடைக்க வேண்டும். குறிப்பாக மிகவும் மென்மையாகத் தான் துடைக்க வேண்டும், அழுத்தி துடைக்க கூடாது. மேலும் டிவியின் இதர பக்கங்கள் மற்றும் போர்டுகளில் இருக்கும் தூசியினை நீங்க ஏர் ப்ளோவர் பயன்படுத்தலாம்.
உங்களிடம் LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்பிளேவாக இருந்தாலும், டிவி திரையைச் சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணியை மட்டும் பயன்படுத்துதல் நல்லது. டிவி திரையைச் சேதப்படுத்தாமலும், கைரேகைகள் மற்றும் தூசி, அழுக்கைச் சுத்தம் செய்யவும் இந்த வகை துணிகள்தான் சிறப்பானவை என்பதைக் கவனத்தில் கொள்க.
அதேபோல் ஸ்மார்ட் டிவியில் உள்ள கறைகளை நீக்க விரல் நகங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இதனால் திரையில் கீரல்கள் ஏற்படும். மேலும் தண்ணீரை நேரடியாக ஸ்மார்ட் டிவியின் திரையில் தெளிக்க வேண்டாம். ஏனெனில், தண்ணீர் டிவியின் உள்ளே சென்று, அதை சேதப்படுத்திவிடும். அதேபோல் முகம் துடைக்கும் துண்டுகள், நியூஸ் பேப்பர், காட்டன் துணிகள் அல்லது பாலிஸ்டர் துணிகளைக் கொண்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கவே கூடாது. இவை அனைத்தும் டிவியின் ஸ்க்ரீனை சேதப்படுத்தும்.
மேலும் டிவியின் திரையைச் சுத்தம் செய்யும்போது, முதலில் ஒரு திசையில், செங்குத்தாக அல்லது கிடைமட்டமாகத் துடைக்க வேண்டும். அடுத்ததாக, எதிர் திசையில் செய்ய வேண்டும். இதனால் திரையில் எந்த இடமும் விடுபடாமல் சத்தம் செய்ய முடியும். அதுவும் மைக்ரோ ஃபைபர் துணியில் துடைக்கும் போது, ஒரு கட்டத்துக்கு மேல் பின்பக்கம் திருப்பி துடைக்கவும், இல்லையெனில் துடைத்ததால் துணியில் ஒட்டியிருந்த தூசி மீண்டும் திரைக்குச் சென்றுவிடும்.
டிவி ஸ்க்ரீனை துடைத்த பிறகு, அதை நன்றாக உலர விட வேண்டும். அதை சரியாக காயவிடாத பட்சத்தில் ஒரு சில ஈரமான புள்ளிகள் மீண்டும் ஒரு கறையாக மாறிவிடும். பிறகு நீங்கள் டிவியின் ஸ்க்ரீனை துடைத்ததற்குப் புண்ணியமே இல்லாமல் போய் விடும்.
photo credit: tomsguide, Future


Click it and Unblock the Notifications








