Mobile-ல கேமரா இருக்கா? இப்படி சுத்தம் செஞ்சா உங்க கேமரா வேஸ்டாகிடும்.. எப்படி சுத்தம் செய்தால் பாதுகாப்பானது?
மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் (Smartphone) கேமராக்கள் (camera) இப்போது டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமரா அளவிற்கு மாறிவருகிறது. பல மொபைல் கேமராக்கள் இப்போது ப்ரொஃபெஷனல் கேமரா அளவிலான தரைத்தை வழங்க துவங்கியுள்ளன. ஆகையால் இவற்றை சரியாக பராமரிப்பது இப்போது மிக முக்கியமாகிவிட்டது.
ஆம் மக்களே, உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா (smartphone camera) அல்லது மொபைல் கேமராவின் (mobile camera) தரம் குறையாமல் இருக்க, அதை எப்படி சரியான முறையில் பராமரிக்க (mobile camera maintenance) வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதேபோல், எந்தெந்த தவறான முறையில் மொபைல் கேமராக்களை சுத்தம் செய்ய கூடாது என்பதை பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

உங்க மொபைல்ல கேமரா இருக்கா? அப்போ இப்படி சுத்தம் செய்யவே கூடாது.. இல்லாட்டி உங்க கேமரா வேஸ்டாகிடும்:
மொபைல் போன் (mobile phone) என்ற ஒரு தனி சாதனமும், கேமரா என்ற ஒரு தனி சாதனமும், தொழில்நுட்ப காலத்தில் ஒன்றாக்கப்பட்டு, ஒரே டிவைஸில் மொபைல் உடன் கேமரா அம்சத்தை இணைத்து வழங்கும் கருவியாக ஸ்மார்ட்போன் சாதனங்கள் உருமாறி வருகிறது. முதலில் சிங்கிள் VGA கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கேமரா போன்கள் (camera phones) இப்போது பலகட்ட பரிணாம வளர்ச்சியை (Mobile camera evolution) கடந்துவிட்டன.
உண்மையை சொல்ல போனால் இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில் 200MP கேமரா போன் (200MP camera phone), 5 கேமரா (5 camera smartphone), குவாட் கேமரா (Quad camera mobile), ட்ரிபிள் கேமரா (Triple camera phone), டூயல் கேமரா (dual camera smartphone) என்று பல வகைகளில், பல கேமரா குவாலிட்டியுடன் பல விலை புள்ளிகளில் இப்போது ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய ஸ்மார்ட்போன் கேமராக்கள் இப்போது DSLR கேமராவுக்கு (DSLR camera) நிகரான செயல்பாட்டை கொண்டுள்ளன. ஒவ்வொரு கேமரா லென்ஸ்களையும் (camera lens) ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கி வருகின்றன. ஆகையால், இவற்றை சரியான முறையில் பரமிப்பது முக்கியமாகியுள்ளது. நார்மலாக ஒரு கண்ணாடியில் படிந்துள்ள தூசியை (dust) துடைப்பது போல அலட்சியமாக ஸ்மார்ட்போன் கேமராக்களை சுத்தம் செய்ய கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மையும் கூட.

எப்படி உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை சுத்தம் செய்ய வேண்டும் (how to clean smartphone camera):
உங்களிடம் கேமரா அம்சத்துடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த பராமரிப்பு செயல்முறையை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமானது மக்களே. சரி, இப்போது எப்படி உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை சுத்தம் செய்ய வேண்டும் (how to clean smartphone camera) மற்றும் எப்படி சுத்தம் செய்ய கூடாது என்று இரண்டு முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
முதலில் நீங்கள் என்ன தவறை செய்யவே கூடாது என்பதை பற்றி பார்த்துவிடலாம். உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை சுத்தம் செய்யும் பொழுது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் (Things to avoid while cleaning your smartphone camera):
- ஸ்மார்ட்போன் கேமரா லென்ஸ்களை சுத்தம் செய்யும் பொழுது நேரடியாக கிளீனிங் சொலுஷனை அப்ளை செய்ய கூடாது.
- ஊக்கு அல்லது சிம் கார்டு எஜெக்டர் போன்ற கூர்மையான கருவிகளை பயன்படுத்தக்கூடாது.
- அதிகம் அழுத்தம் கொடுத்து லென்ஸ்களை துடைக்க கூடாது. இது கீறல்களை உருவாக்கும்.
- உங்கள் விறல் மற்றும் கைகளை கேமரா லென்ஸில் வைக்கவே கூடாது.
- உங்கள் கையில் இருக்கும் எண்ணெய் கேமராவில் படிந்துகொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது.
ஸ்மார்ட்போன் கேமராவை எப்படி சரியான முறையில் சுத்தம் செய்து பராமரிப்பது? (How to properly clean and maintain a smartphone camera) இதோ வழி:
- மொபைல் கேமரா லென்ஸை மைக்ரோஃபைபர் துணி கொண்டு துடைக்க வேண்டும்.
- படிந்த அழுக்கை சுத்தம் செய்ய, துணியில் கிளீனிக் சொலுஷன் வைத்து பிறகு லென்ஸ் மீது தடவி துடைக்கலாம்.
- லென்ஸை சுத்தம் செய்யும் பொழுது வட்ட வடிவில் கைகளை நகர்த்தி துடைப்பது சிறந்தது.
- மெருதுவான பிரிஸ்டல் கொண்ட பிரஷ் வைத்து சுத்தம் செய்து துடைக்கலாம்.
- கேமராவில் நேரடியாக தூசி மற்றும் கீறல்கள் படியாத படி கவர் கேஸ் பயன்படுத்தலாம்.
இந்த முறையை பின்பற்றி உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் மொபைல் கேமராக்களை சரியாக பராமரித்து வந்தால்,கேமரா கிளாரிட்டி புதுசு போலவே நீண்ட நாட்களுக்கு வரும்.


Click it and Unblock the Notifications








