Home
News

iPhone மற்றும் Android போனை எப்படி வீட்டில் சுத்தம் செய்வது? சுத்தம் செய்யாவிட்டால் ஆயுள் குறையுமா?

ஸ்மார்ட்போன்கள் எப்போதும் நமது கரங்களுடன் இருக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதனால், அதை மிகவும் கவனத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. இதற்கு உங்கள் மொபைலை, நீங்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. சரியாக பராமரிப்பது உங்கள் போனின் ஆயுட்காலத்தை நீடிக்க உதவும்.

சாதாரண ஸ்மார்ட்போன்களை பராமரிப்பதே மிகவும் முக்கியம் என்றால், பல ஆயிரங்களை கடந்து, லட்ச ரூபாய்க்கு வாங்கும் ஐபோனை நாம் எவ்வளவு பத்திரமாக பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்? கட்டாயம், பராமரிப்பு முறைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானது. உங்களிடம் ஐபோன் சாதனம் இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.

iPhone மற்றும் Android போனை எப்படி வீட்டில் சுத்தம் செய்வது?

உங்கள் ஐபோனை தொடர்ந்து சுத்தம் செய்வது அதன் செயல்பாடு மற்றும் பொது சுகாதாரத்தை பராமரிக்க உதவும். ஒரு சுத்தமான ஐபோன் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சாதனத்தின் செயல்திறனுக்கு தீங்கு விளைவிக்கும் தூசி மற்றும் அழுக்கு குவிவதைத் தடுக்கவும் உதவுகிறது. உங்கள் ஐபோனை சுத்தம் செய்வதற்கான ஐந்து டிப்ஸ் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்கள் ஐபோனை சுத்தம் செய்வதற்கு முன், தண்ணீர் அல்லது கிளீனிங் சொலுஷன் மூலமாக ஏற்படும் சேதம் அல்லது ஷார்ட் சர்க்யூட்களைத் தடுக்க அதை முதலில் OFF செய்வது நல்லது. உங்கள் ஐபோனை OFF, ஸ்லீப்/வேக் பட்டனை அழுத்திப் பிடிக்கவும், பின்னர் "ஸ்லைடு டு பவர் ஆஃப்" பட்டனை ஸ்வைப் செய்யவும்.

மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது உங்கள் ஐபோனின் திரை மற்றும் உடலைச் சுத்தம் செய்ய சிறந்த வழியாகும். இது மென்மையானது என்பதனால் உங்கள் போனின் டிஸ்பிளே மற்றும் பாடியை சேதப்படுத்தாமல் இருக்கும். கைரேகைகள், அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை அகற்ற துணியால் மெதுவாக துடைப்பது அவசியம். போர்ட்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சுத்தம் செய்ய மென்மையான பிரஷ் பயன்படுத்தலாம்.

iPhone மற்றும் Android போனை எப்படி வீட்டில் சுத்தம் செய்வது?

உங்கள் ஐபோனை சுத்தம் செய்ய ப்ளீச் அல்லது அம்மோனியா போன்ற கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த இரசாயனங்கள் சாதனத்தின் கலர், டிஸ்பிளே மற்றும் உள் கூறுகளை சேதப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, சிறிய அளவு தண்ணீர் அல்லது மின்னணு சாதனங்களுக்காக உருவாக்கப்பட்ட கிளீனிங் சொலுஷன்களை பயன்படுத்தலாம்.

கேமரா லென்ஸைச் சுற்றியுள்ள விளிம்புகள் அல்லது போர்ட்கள் போன்ற எளிதில் தூசி அடையக்கூடிய பகுதிகளை சுத்தம் செய்ய மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். ஏதேனும் அழுக்கு அல்லது தூசி அல்லது குப்பைகள் இடுக்குகளில் சிக்கி இருந்தால், அவற்றை அகற்ற இந்த முறை சிறந்தது. நினைவில் கொள்ளுங்கள் சாஃப்ட் பிரஷ்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

உங்கள் ஐபோனுக்கான கேஸைப் பயன்படுத்தினால், அதைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும் அவசியம். அழுக்கு அல்லது தூசியை அகற்ற மைக்ரோஃபைபர் துணி அல்லது மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். ஃபோன் கேஸ்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளீனிங் சொலுஷன் உடன் நீங்கள் அழுக்குகளை நீக்கலாம்.

உங்கள் கையில் இருக்கும் போனில், பல விதமான அழுக்குகள் படிந்திருக்கும் என்பதனால் அவற்றை குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களுக்கும் ஆரோக்கியமானது. உங்கள் போனின் ஆயுளை நீடிக்கக்கூடியது. ஆண்ட்ராய்டு போன்களையும் இதே முறையில் நீங்கள் சுத்தம் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to clean iPhone and Android phone at home Does not cleaning shorten the lifespan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X