Just In
- 13 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 13 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 14 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 15 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- News
ராமஜெயம் வழக்கு : உண்மை கண்டறியும் சோதனை இன்று நிறைவு.. ‘கொலையாளி யார்’.. மர்ம முடிச்சு அவிழுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லோரட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Movies
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!
உங்கள் லிவிங் ஏரியா அறைக்கு ஒரு மாபெரும் டிவியை (TV) வாங்கத் தயாராகிவிட்டீர்களா? இனி தியேட்டரே செல்ல வேண்டாம் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை (smart tv) EMI இல் ஆவது வாங்கி, ஹாலில் மாட்டிவிடலாம் என்று பிளான் செய்கிறீர்களா? அப்போ கட்டாயமாக இந்த பதிவை நீங்கள் படித்தே ஆக வேண்டும். பெரியது எப்போதும் சிறப்பாக இருக்காது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் அறைக்கு ஏற்ற டிவி சைஸ் எது? இதற்கென்று தனி ஃபார்முலாவே இருக்கிறதா?
காரணம், ஒவ்வொரு அறையின் அளவிற்கும் ஏற்றார் போல டிவி வாங்குவது தான் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியாக சொல்ல போனால், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த டிவியை தேர்வு செய்ய சில வழிமுறைகள் உள்ளது - இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எந்த அளவு ரூமில், எந்த இன்ச் மாடல் டிவி சிறப்பாக செயல்படும் என்று ஒரு ஃபார்முலாவே இருக்கிறது.

உங்களுக்கு எந்த அளவு டிவி சரியானது?
உங்கள் அறை எவ்வளவு பெரியது, நீங்கள் அமர்ந்து டிவி பார்க்கும் தூரம்? மற்றும் உங்கள் படுக்கையின் இருப்பிடம் எங்குள்ளது? என்பது போன்ற சில காரணிகளைப் பொறுத்து நீங்கள் வாங்க போகும் ஸ்மார்ட் டிவியின் அளவை நீங்கள் கணக்கிட வேண்டும்.
"உங்களுக்கு எந்த அளவு டிவி சரியானது?" என்று நீங்கள் யோசித்தால், கட்டாயமாக இந்த பதிவை ஒருமுறை முழுமையாக படித்தால் போதும், மற்றவர்களுக்கும் நீங்கள் ப்ரோ போல டிப்ஸ் வழங்கலாம்.

ஸ்டாண்டர்ட் டிவி அளவுகள் என்றால் என்ன?
ஒரு டிவியின் அளவு அதன் நீளத்தைக் குறிக்கிறது. இது டிவி திரையின் மேல்-இடது முதல் கீழ்-வலது மூலையில் குறுக்காக அளவிடப்படுகிறது.
ஒரு புது டிவியை ஷாப்பிங் செய்யும்போது இதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம் - 55' இன்ச் டிவியின் பரிமாணங்கள் (குறுக்காக அளவிடப்படுகிறது), எடுத்துக்காட்டாக, சுமார் 49 அங்குல அகலமும் 29 அங்குல உயரமும் இருக்கும். இது தான் 55' இன்ச் என்று கூறப்படுகிறது.

உங்கள் அறைக்கு ஏற்ற சரியான சைஸ் டிவியை வாங்குவது எப்படி சிறப்பானது?
நீங்கள் இப்போது சந்தையில் 24' இன்ச் முதல் 24 அடி வரை பெரிய டிவிகளை வாங்கலாம். ஆனால், பெரும்பாலான மக்கள் 32' முதல் 82' இன்ச் மாடல்களுக்கு இடையேயான டிவிகளை மட்டும் தான் தேர்வு செய்கிறார்கள்.
நிலையான அளவு அல்லது எல்லோரும் எதை அதிகம் வாங்குகிறார்கள் என்பதைக் காட்டிலும், உங்கள் பட்ஜெட்டில், நீங்கள் விரும்பும் அம்சங்கள் உடன், உங்கள் அறைக்கு ஏற்ற சரியான சைஸ் டிவியை வாங்குவது தான் புத்திசாலித்தனம்.

உங்கள் அறைக்குச் சரியான டிவியை எப்படி தேர்வு செய்வது?
டிவியை வாங்கத் தொடங்கும் முன், அது எந்த அறையில் இருக்கும் என்பதை முதலில் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். டிவி இருக்க போகும் அறையின் தளவமைப்பும் அளவும் மிகவும் முக்கியம்.
ஒரு பெரிய 97' இன்ச் டிவியில் கால்பந்தைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டாலும், அது ஒரு சிறிய, குறுகிய இடத்தில் பொருந்தாது அல்லது பார்ப்பதற்கு வசதியாக இருக்காது என்பதே உண்மை.

சரியான டிவி சைஸை கண்டுபிடிக்க இந்த ஃபார்முலாவை யூஸ் பண்ணுங்க.!
"உங்கள் அறைக்கு ஏற்ற எந்த அளவு டிவியைப் பெற வேண்டும்?" என்பதை அறிந்துகொள்ள டிவி பார்க்கும் தூர சூத்திரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
முதலில், டிவியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உட்கார நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை அங்குலங்களில் அளவிடவும்.
படுக்கையறையில் டிவியை வைக்க போகிறீர்கள் என்றால், உங்கள் சாதாரண பார்வை நிலையில் உங்கள் தலையின் நிலையில் இருந்து அளவிட முயற்சிக்கவும்.

இந்த ஃபார்முலாவை உடனே ட்ரை செய்து உங்கள் அரைக்கான டிவி சைஸை தெரிந்துகொள்ளுங்கள்.!
அடுத்து, உங்களுக்கு வந்த அளவை மூன்றால் வகுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் விரும்பும் திரை அளவு உங்களுக்கு காண்பிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் டிவியை வைக்கத் திட்டமிடும் இடத்தில் இருந்து உங்கள் படுக்கை 120 அங்குலங்கள் தள்ளி இருந்தால், உங்கள் திரையின் அளவு குறைந்தது 40 அங்குலமாக இருக்க வேண்டும். மிகவும் எளிமையான கணக்கு தான் ட்ரை செய்து பாருங்கள்.

எந்த இடத்தில்.. என்ன ஆங்கிளில் டிவியை வைத்தால் சிறந்தது?
எந்த அளவு டிவியை வாங்குவது என்று தீர்மானிக்கும் போது, அதை எப்படி? எங்கு? அறையில் வைக்க போகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.
டேபிளில் டிவியை வைக்க ஸ்டாண்டைப் பயன்படுத்தினால், குறைந்த தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
அதுவே நீங்கள் டிவியை சுவரில் மாற்றினால், பார்க்கும் தூரத்திற்கு ஒரு அடி அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.

சிறிது நேரம் எடுத்து கவனித்து உங்கள் டிவியை ப்ளேஸ் செய்வது சிறப்பானது.!
உங்கள் டிவியை எங்கு வைத்தாலும் சரி, திரை நேராகவும் கண் மட்டத்திலும் இருக்க வேண்டும் (15 டிக்ரீ).
உங்கள் டிவியை சுவற்றில் ஏற்றினால், அது மிக உயரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி சரியாக அளவு பார்த்து பொருத்தினால், அதிகமாக சிரமப்பட்டு டிவியை பார்க்க வேண்டியதில்லை.
டிவியை ஒருமுறை மாற்றிவிட்டால் அது அங்கேயே இறுதி வரை இருக்க போகிறது என்பதனால், சிறிது நேரம் எடுத்து கவனித்து அதை நிலைநிறுத்துவது சிறப்பானது.

உங்கள் டிவி ஸ்க்ரீன் ரெசொலூஷன் எவ்வளவு முக்கியமானது?
டிவியின் ரெசொலூஷன் மிகவும் முக்கியமானது. எந்த அளவிலான டிவியைப் பெறுவது என்பதை தீர்மானிக்கும் போது ஸ்க்ரீன் ரெசொலூஷனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் டிவியில் அதிக பிக்சல்கள் இருந்தால், படம் கூர்மையாக இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். மிகவும் பிரபலமான மூன்று டிவி தீர்மானங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரியான இடத்தில் டிவியை பொருத்த தவறாதீர்கள்.!
ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் மிகவும் பொதுவான விருப்பம், முழு HD டிவிகள் தான், இது 1920 x 1080 தீர்மானம் கொண்டவை. அடுத்தபடியாக இருப்பது, 4K TV என்று குறிப்பிடப்படும் அல்ட்ரா HD இன் 3840 x 2160 தெளிவுத்திறன் பிக்சல்களாகும்.
இதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மில்லியனாக நான்கு மடங்கு அதிகரிக்கிறது. இது முழு HD ஐ விட 4 மடங்கு அதிகமாகும். இறுதியாக இருப்பது 8K டிவி விருப்பமாகும். இது 7680 x 4320 பிக்சல், இது கிட்டத்தட்ட 32 மில்லியன் பிக்சல்களாக 4K ஐ விட நான்கு மடங்கு அதிக ரெசொலூஷன் கொண்டதாக உள்ளது.
இந்த முறைகளை கருத்தில்கொண்டு ஸ்மார்ட் டிவியை சரியான அளவில் வாங்கி, சரியான இடத்தில் பொருத்தங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470