இனி இன்டர்நெட் தேவையில்லை.. PF பேலன்ஸை தெரிந்து கொள்வது சுலபம்.. இதோ எளிய வழிமுறைகள்..
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதுவும் EPFO பயனர்களுக்கு சமீபத்தில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்தது. அதேபோல் இந்த அமைப்பு விரைவில் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்த உள்ளது.
அதேபோல் ஓய்வூதியத்திற்காகச் சேமிக்க விரும்பும் நபர்களுக்கு இபிஎப்ஓ திட்டம் உதவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கும் நபர்கள் தங்களுடைய சேமிப்புகளை அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக இதைக் கண்காணிக்க இணைய வசதி தேவையில்லை. அதாவது இணையதளமே இல்லாமல் உங்களுடைய PF பேலன்ஸை தெரிந்து கொள்ள முடியும். இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

உங்களுடைய பிஎப் பேலன்ஸை தெரிந்து கொள்ள மொபைல் போனில் தனியாக எந்தவொரு அப்ளிகேஷன் தேவைப்படாது. அதேபோல் உங்கள் மொபைல் டேட்டா கூட தேவையில்லை. சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த பிஎப் பேலன்ஸை எளிமையாகத் தெரிந்துள்ள முடியும்.
மிஸ்டு கால் வசதி:
உங்களது பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையான வழிகளில் ஒன்று இந்த மிஸ்டு கால்டு வசதி. அதாவது நீங்கள் இபிஎப்ஓ இணையதளத்தில் பதிவு செய்த மொபைல் நம்பரில் இருந்து 9966044425 என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும். பின்பு ஒரு சில வினாடிகளில் அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
அதன்பிறகு உங்கள் PF பேலன்ஸ் விவரங்களுடன் ஒரு SMS உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். குறிப்பாக இந்த சேவையைப் பயன்படுத்தி பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்ள யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. அதேபோல் உங்களது மொபைல் நம்பர் UAN கணக்குடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குறைந்தது ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது பேங்க் விவரங்கள் போன்ற ஏதேனும் ஒரு KYC ஆவணத்தைக் கொண்டு அக்கவுண்டை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த சேவையை இபிஎப்ஓ அமைப்பு கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்குகிறது. எனவே இபிஎப்ஓ அமைப்பின் கீழ் உறுப்பினராக இருப்பவர்கள் தங்களிடம் பேசிக் பீச்சர் மொபைல் போன்களில் இருந்தும் கூட இந்த வசதியைப் பெறமுடியும்.
எஸ்எம்எஸ் வசதி:
உங்களது பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி எஸ்எம்எஸ் தான். அதாவது 7738299899 என்ற நம்பருக்கு SMS அனுப்ப வேண்டும். இதன் மூலம் உங்களுடைய PF பேலன்ஸ், கடைசியாக நீங்கள் செய்த பங்களிப்பு மற்றும் கேஒய்சி ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் அனைத்து உங்களுக்கு தெரியவரும்.
அதுவும் பிஎப் பேலன்ஸை தெரிந்து கொள்ள EPFOHO UAN என்ற மெசேஜ் ஃபார்மெட்-ஐ பயன்படுத்த வேண்டும். பல்வேறு மக்களுக்கு மொழி பிரச்சனை இருக்கும். ஆனால் கவலை வேண்டாம். அதாவது மெசேஜை உங்களுடைய பிராந்திய மொழியில் பெற விரும்பினால் நீங்கள் மெசேஜ் ஃபார்மேட்டின் கீழ், மெசேஜ் பெற விரும்பும் மொழியின் முதல் 3 எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ஒரு உதாரணமாக நீங்கள் ஹிந்தி மொழியில் மெசேஜ் பெற விரும்பினால் EPFOHO UAN HIN என்ற ஃபார்மெட்டைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் EPF அமைப்பின் கீழ் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மெசேஜை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








