PF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? இனி சில நொடிகளில் சுலபமாக தெரிஞ்சுக்கலாம்.. இதோ வழிமுறைகள்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் பல்வேறு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பிஎஃப் தொகையை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதிகள் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் நமது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பணி ஓய்வு பெற்ற பின்னர் தான் எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதாவது தற்போது ஏதேனும் ஒரு அவசர பணத் தேவை ஏற்படுகிறது என்றாலும் விண்ணப்பம் செய்து ஒரு குறிப்பிட்ட அளவிலான பிஎஃப் பணத்தை நாம் எடுத்துப் பயன்படுத்த முடியும்.

அதேசமயம் உங்களது பிஎஃப் கணக்கில் உங்களுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் நிறுவனம் சார்பாக பங்களிப்பு செய்ய வேண்டிய தொகையும் வரவு வைக்கப்படுகிறதா என்பதைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
குறிப்பாக உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை எஸ்எம்எஸ், மிஸ்டு கால் போன்ற வழிகளை பயனடுத்தி எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். சரி இப்போது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
1. உங்களது பிஎஃப் கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து பின் வரக்கூடிய முறையில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதாவது EPFOHO UAN ENG என்ற முறையில் இந்த 7738299899 எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். குறிப்பாக நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய உடனே பிஎஃப் அமைப்பு உங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரத்தை எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைத்து விடும்.
2.அதேபோல் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போது. அடுத்த சில நொடிகளில் உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் முறையில் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரம் தெரிய வந்துவிடும்.
3. உங்களது போனில் Umang செயலி பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இபிஎப்ஓ என கிளிக் செய்து பாஸ்புக் என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதில் உங்களது யுஏஎன் நம்பரை உள்ளீடு செய்தால் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரும் ஏப்ரல் மாதம் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய மொபைல் செயலி மூலம் EPFO சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை யுபிஐ வழியாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO அமைப்பு அறிமுகப்படுத்த உள்ள புதிய மொபைல் செயலி ஆனது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. சந்தாதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுவதற்குத் தகுதியான பிஎஃப் தொகையை மொபைல் செயலி மூலம் எளிதாகப் பார்க்க முடியும் என தகவல் வெளிவந்துள்ளது.
பிஎஃப் பணத்தை மாற்றுவதற்கான பரிவர்த்தனையை முடிக்க பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் யுபிஐ பின் நம்பரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இது வங்கி கணக்குகளுக்கு இடையில் நிதியின் பாதுகாப்பான பரிமாற்றத்தை உறுதி செய்யும். தற்போது புதிய செயலியைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நிவர்த்தி செய்து வருகிறது EPFO அமைப்பு. இதனால் அந்த செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும்போது, EPFO சந்தாதாரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








