Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் தான் முதல் நிறுவனமாக 5ஜி (5G) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, ஏர்டெல் நிறுவனம் 8 நகரங்களில் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. ஏர்டெல் வழங்கும் இந்த புதிய ஏர்டெல் 5ஜி (Airtel 5G) சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்? 5ஜி சேவையைத் துவங்க உங்களுக்கு புதிய சிம் தேவையா? இல்லையா?

airtel 5G பற்றி மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் என்ன தெரியுமா?

airtel 5G பற்றி மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் என்ன தெரியுமா?

உங்கள் லொகேஷனில் airtel 5G கிடைக்கிறதா? இல்லையா?, என்னென்ன பேண்ட் அளவில் ஏர்டெல் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குகிறது? எப்போது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனது 5G சேவை பயன்பாட்டிற்குக் களமிறக்கும் என்பது போன்ற விஷயங்களை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

5G சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மக்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கான தெளிவான விளக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஏர்டெல் 5ஜி என்னென்ன பேண்டுகளை ஆதரிக்கிறது?

ஏர்டெல் 5ஜி என்னென்ன பேண்டுகளை ஆதரிக்கிறது?

முதலில் Airtel நிறுவனம் என்னென்ன அலைவரிசையில் தனது 5ஜி சேவையை வழங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம். பாரதி ஏர்டெல் இப்போது
n8: 900 MHz
n3: 1800 MHz
n1: 2100 Mhz
n78: 3300 MHz
n258: 26GHz ஆகிய பேண்ட்களில் இந்தியாவில் தனது 5G சேவையை வழங்குகிறது.

SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?

Jio 5G நெட்வொர்க்கை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

Jio 5G நெட்வொர்க்கை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

ஏர்டெல் நிறுவனமானது தற்போது உள்ள அனைத்து இயக்க நகரங்களிலும் அதிக 5G இணைய வேகத்தை வழங்குவதை உறுதி செய்வதற்காக சப்-ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அதிவேக அதிர்வெண் பேண்ட்களை பயன்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவையைச் சிறப்பானதாக்க நோக்கியா, சாம்சங் மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, அதிநவீன 5ஜி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 5ஜி சேவையை யாரெல்லாம் இப்போது பயன்படுத்தலாம்?

ஏர்டெல் 5ஜி சேவையை யாரெல்லாம் இப்போது பயன்படுத்தலாம்?

ஏர்டெல்லின் தனிப்பட்ட பயனர்கள் புதிய 5G சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கட்டாயமாக அந்த பயனர்களிடம் இருக்கும் தற்போதைய ஸ்மார்ட்போன் 5G ஆதரவை ஆதரிக்க வேண்டும்.

அதற்கு, Airtel பயனர்கள் முதலில் அவர்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் 5ஜி சேவையை ஆதரிக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை உடனே உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதி செய்ய இரண்டு எளிய வழிகள் உள்ளது.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

உங்கள் டிவைஸ் 5G சப்போர்ட் உடன் வருகிறதா இல்லையா?

உங்கள் டிவைஸ் 5G சப்போர்ட் உடன் வருகிறதா இல்லையா?

முதல் வழிமுறைப்படி சோதனை செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனின் பாக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். இதில், உங்கள் டிவைஸ் 5ஜி சப்போர்ட் (5G Support) உடன் வருகிறதா இல்லையா என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த பாக்சில் எங்காவது 5G என்ற வார்த்தை தெரிகிறதா என்று சோதனை செய்யுங்கள். ஸ்மார்ட்போன் பெட்டியின் பின்புறத்தில் உள்ள லேபிள்களைப் பார்த்து, 5G பேண்டுகளைத் தேடுங்கள்.

நீங்கள் இன்னும் 5G இன் எந்த அறிகுறிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் போன் 5G செயல்பாட்டை ஆதரிக்காது என்பது பொருள்.

5G ஸ்மார்ட்போன் இருந்தாலும் இப்போதே 5ஜி ருசியை ருசிக்க முடியாதா?

5G ஸ்மார்ட்போன் இருந்தாலும் இப்போதே 5ஜி ருசியை ருசிக்க முடியாதா?

மற்றொரு எளிமையான வழி என்றால், உங்கள் ஸ்மார்ட்போனின் Settings >> Wi-Fi & Network >> SIM & Network >> Preferred network type >> 2G/3G/4G/5G என்ற விருப்பம் இருக்கிறதா என்று செக் செய்யலாம். இப்படி செக் செய்து, உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் 5G இணக்கமான ஸ்மார்ட்போன் இருந்தாலும் உடனே உங்களால் 5ஜி இன் ருசியை ருசித்துவிட்டு முடியாது. 5G இயக்கப்பட்ட இடத்தில் நீங்கள் வசித்தாலும், உங்களுக்கு இன்னும் செயலில் உள்ள 5G ரீசார்ஜ் திட்டம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?

புதிதாக 5G சிம் கார்டு வாங்க வேண்டுமா?

புதிதாக 5G சிம் கார்டு வாங்க வேண்டுமா?

5ஜி சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சரி, ரீசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், 5ஜி சேவையை நம்மிடம் இருக்கும் அதே சிம் கார்டு உடன் செயல்படுத்தலாமா? அல்லது 5ஜி சேவைக்காக புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா? என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது.

தனியாக 5ஜி சிம் வாங்க வேண்டியதில்லை என்பதே இதற்கான விடையாக உள்ளது.

எந்த பகுதிகளில் இப்போது 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது?

எந்த பகுதிகளில் இப்போது 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது?

உங்களிடம் இருக்கும் 4ஜி சிம் கார்டு மூலம் 5ஜி சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால், உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி, அடுத்தபடியாக எந்த பகுதியில் எல்லாம் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர், குருகிராம், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் ஏர்டெல் தனது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் லொகேஷனில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறதா? எப்படி செக் செய்வது?

உங்கள் லொகேஷனில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறதா? எப்படி செக் செய்வது?

அடுத்த சில வாரங்களில் 5G சேவை பல பகுதிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, உங்கள் லொகேஷனில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்று இப்போது பார்க்கலாம். நீங்கள் ஏர்டெல் பயனர் என்றால், கண்டிப்பாக உங்களிடம் Airtel Thanks App இருக்கும் தானே. இந்த ஆப்ஸ் உங்கள் லொகேஷனில் 5G கிடைக்குமா இல்லையா என்பதைத் தெளிவாகத் தெரிவித்துவிடும். டிரை செய்து பாருங்கள். 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுக்க 5ஜி சேவை கிடைக்குமென்று ஏர்டெல் உறுதியளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How To Check Your Location Supports Airtel 5G and Do You Need New SIM To Use Services

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X