Home
News

உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்.!

பான் கார்டு அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகிறது. குறிப்பாக இப்போது இந்தியாவில் ஆதார் அட்டையைப் போன்று இந்த PAN அட்டையும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய மக்கள் தங்களது நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் இணைக்காதவர்கள் மார்ச் இறுதிக்குள் இணைக்க வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

குறிப்பாக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கத் தவறினால் பான் கார்டு செயலிழக்க நேரிடும். அதன்பின்பு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து தான் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தைக் கையில் எடுத்தது மத்திய அரசு.

அதேபோல் இப்போது கொடுக்கப்பட்ட காலக்கெடு இன்னும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தபோதிலும் உங்களது பான் கார்டு இன்னும் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டலில் சரிபார்க்கலாம். இப்போது அதற்கான வழிமுறைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

வழிமுறை-1
முதலில் உங்களது பான் விவரங்களை சரிபார்க்க வருமான வரித் துறையின் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/verifyYourPAN என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.

வழிமுறை-2
அடுத்து உங்களது பான் எண், பான் கார்டில் இருக்கும் முழுப் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். குறிப்பாக எல்லா விவரங்களையும் உள்ளிட்ட பின்பு சமர்ப்பித்தால் உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.

உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

வழிமுறை-3
அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டுச் சமர்பித்ததும் உங்களது பான் கார்டு ஆக்டிவ் நிலையில் இருக்கிறதா அல்லது காலாவதி ஆகிவிட்டதா என்ற செய்தியை அந்த வலைத்தளம் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு சாத்தியமானால் மட்டுமே ஒருவரின் வருமானத்தை அரசால் கண்டுபிடிக்க முடியும். அத்துடன் அதற்கான வரியையும் விதிக்க முடியும். அதேபோல் பான் கார்டு ஆதார் எண்ணை இணைத்தால் யாரும் வருமான வரித்துறையில் ஏமாற்ற முடியாது. பணம் எப்படி வந்தது? அது எப்படி வெளியேறியது என்பதை எளிமையாகக் கண்டுபிடிக்க முடியும். இதற்குத்தான் அரசு இந்த முயற்சியைச் செய்தது.

மேலும் நமது நாட்டு சட்டத்தின் படி ஒரு நபர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து இருந்தால் அவர் அபராதம் செலுத்த நேரிடும். பின்பு அவருடைய பான் கார்டு கேன்சல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்கு இந்திய வருமான வரி துறையால் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?

இப்போது உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனே ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் விருப்பத்துடன் இதைச் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டீர்கள். தற்போது இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பங்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to check whether your PAN card is valid or not: Here are simple tips.! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X