ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

|

நம்மில் பெரும்பாலான மக்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது, அதன் சிறப்பம்சம் அல்லது அந்த ஸ்மார்ட்போனின் விலையை மட்டுமே கருத்தில்கொண்டு ஒரு மாடலை தேர்வு செய்து வாங்குகிறார்கள். ஆனால், நாம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. இருப்பினும், நம்மில் உள்ள பலருக்கும், அது என்ன என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்

நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்

ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் முன், அதன் விலை மற்றும் சிறப்பம்ச தகவல்களைப் பற்றி மட்டும் கருத்தில்கொள்ளலாம், அந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்குப் பிந்தைய சேவை, மறுவிற்பனை மதிப்பு மற்றும் கதிர்வீச்சு அளவு போன்ற சில முக்கிய விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்திட வேண்டும். புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், நாம் இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அந்த சாதனத்தின் கதிர்வீச்சு அளவாகும்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய கதிர்வீச்சு

நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய கதிர்வீச்சு

ஆம், நம்மில் பெரும்பாலானோர் இந்த முக்கிய விஷயத்தைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் கூட நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதே வேதனை. நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய கதிர்வீச்சின் அளவு பற்றி நமக்குச் சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.

SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?

கதிர்வீச்சின் அளவை நாம் ஏன் கருத்தில்கொள்ள வேண்டும்?

கதிர்வீச்சின் அளவை நாம் ஏன் கருத்தில்கொள்ள வேண்டும்?

ஸ்மார்ட்போனுடன் அதிக காலத்தை செலவிடும் நமக்கு, அதன் மூலம் எழும் கதிர்வீச்சின் அளவு பற்றி அறிந்துகொள்வதும் முக்கியமானது. ஏன் ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து எழும் கதிர்வீச்சின் அளவை நாம் கருத்தில்கொள்ள வேண்டும் என்று சிலர் நினைக்கலாம், காரணம் இருக்கிறது. முன்பே சொன்னது போல, அதிகப்படியான கதிர்வீச்சு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

SAR வேல்யூ என்றால் என்ன? இதற்கும் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிற்கும் என்ன தொடர்பு?

SAR வேல்யூ என்றால் என்ன? இதற்கும் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிற்கும் என்ன தொடர்பு?

இதை நீங்கள் நீண்ட நாள் கவனிக்காமல் பயன்படுத்தும் போது, சரும கோளாறு முதல் கேன்சர் ஏற்படும் அபாயம் வரை செல்லக்கூடும் என்பதனால், கதிர்வீச்சின் அளவை கண்காணிப்பது அவசியமாகிறது. ஸ்மார்ட்போன் மூலம் எழுப்பப்படும் கதிர்வீச்சின் அளவு SAR மூலம் கணக்கிடப்படுகிறது. 'ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்' என்பதன் சுருக்கமே "SAR' என்பதாகும். அதாவது, ஒரு ஸ்மார்ட்போன் டிவைஸ் தொடர்பில் இருக்கும்போது,

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

எஸ்.ஏ.ஆர் எப்படி கணக்கிடப்படுகிறது?

எஸ்.ஏ.ஆர் எப்படி கணக்கிடப்படுகிறது?

அதில் இருந்து வெளியாகும் "எலக்ட்ரோ மேக்னடிக்' அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே "எஸ்.ஏ.ஆர்' என்று அழைக்கப்படுகிறது. இது, போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் எந்த அளவில் உட்கொள்ளும் என்ற அளவைக் குறிக்கிறது. இது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் "வாட்ஸ் பெர் கிலோ கிராம்' என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது.

SAR வேல்யூ அதிகமாக இருந்தால் என்னவாகும்?

SAR வேல்யூ அதிகமாக இருந்தால் என்னவாகும்?

இந்த SAR வேல்யூ குறைவாக இருந்தால், உங்கள் போன் மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம். குறைந்த அளவு கதிர்கள் உங்கள் சாதனத்தில் இருந்து வெளியேற்றப்படும் போது, அது உடலுக்குள் ஊடுருவினாலும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கதிர்கள் உங்கள் டிவைஸில் இருந்து வெளியேறினால் அது உங்கள் உடலுக்குத் தீங்கு விலைக்கும் என்று கூறப்படுகிறது.

பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?

ஏன் ஸ்மார்ட்போனை காதிற்கு அருகில் வைத்து பயன்படுத்தக் கூடாது?

ஏன் ஸ்மார்ட்போனை காதிற்கு அருகில் வைத்து பயன்படுத்தக் கூடாது?

இந்தக் கதிர்கள், உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றது, குறிப்பாக நீங்கள் உங்கள் காதுக்கு அருகில் வைத்து நீண்ட நேரம் உரையாடும் போது, இதன் தாக்கம் உங்கள் மூலையில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தான், ஸ்மார்ட்போன்களை காதுகளில் இருந்து தள்ளி வைத்துப் பயன்படுத்த அறிவுரைக்கப்படுகிறது. அதேபோல், உங்கள் போனில் குறைந்தளவு சார்ஜ் இருந்தால், நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

சார்ஜ் குறைவாக இருக்கும் போது 'இதை' செய்யவே கூடாது

சார்ஜ் குறைவாக இருக்கும் போது 'இதை' செய்யவே கூடாது

காரணம், சார்ஜ் குறைவாக இருக்கும் நேரத்தில் ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் கதிர்களின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும் என்பதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சார்ஜ் குறைவாக இருக்கும் போது ஸ்மார்ட்போன்களை காதுக்கு அருகில் வைத்து பயன்படுத்தக் கூடாது, கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது உங்கள் போன் எவ்வளவு SAR அளவை கொண்டுள்ளது என்று செக் செய்யலாம்.

100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்

SAR மதிப்பீட்டை எப்படி கண்டுபிடிப்பது?

SAR மதிப்பீட்டை எப்படி கண்டுபிடிப்பது?

சில ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஸ்மார்ட்போனின் பெட்டியுடன் வரும் பயனர் கையேட்டில் SAR மதிப்பீட்டைக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், சில ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் இணையதளத்தில் விவரக்குறிப்பு பிரிவில் SAR மதிப்பை எழுதுகிறார்கள். இருப்பினும், ஸ்மார்ட்போன் பயனர்களை அனுமதிக்கும் ஒரு எளிய தீர்வு உள்ளது. இந்த முறையைப் பின்பற்றி உங்கள் சாதனத்தின் SAR மதிப்பைச் சரிபார்க்கலாம்.

உங்கள் போனின் SAR விபரத்தை பார்க்க இதை செய்யுங்கள்

உங்கள் போனின் SAR விபரத்தை பார்க்க இதை செய்யுங்கள்

  • உங்கள் ஸ்மார்ட்போனின் டைலர் பேட் ஓபன் செய்யுங்கள்.
  • இப்போது, அதில் *#07# என்று டைப் செய்யுங்கள்.
  • இப்போது உங்களின் பச்சை நிற அழைப்பு பட்டனை பிரஸ் செய்யுங்கள்.
  • உங்களுடைய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே இப்போது தானாகவே SAR மதிப்பீட்டைக் காண்பிக்கும்.
  • பாதுகாப்பான SAR மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

    பாதுகாப்பான SAR மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

    பாதுகாப்பான SAR மதிப்புக்கான தரநிலை 1.6 W/kg ஆகும். அதாவது உங்கள் உடலில் 1 கிலோவிற்கு 1.6 W/kg ஆகும். அதை விட அதிகமாக இருக்கும் எதுவும் உங்கள் உடல் திசுக்களுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, மொபைலை வாங்கும் போது, SAR மதிப்பு 1.6 W/Kg அளவிற்குள் உள்ளதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

    இதேபோல், *#06# என்று டைப் செய்தால் உங்கள் IEMI நம்பர் விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to check the radiation level of your smartphone and What is SAR value : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X