உங்கள் PF பேலன்சை எப்படி ஆன்லைனில் சரி பார்ப்பது? எளிமையான 4 வழி இதோ!
பிஎஃப் கணக்கின் இருப்பை சரிபார்ப்பதில் நிறைய ஊழியர்களுக்கு பிரச்சனை இருக்கிறது. உங்கள் PF கணக்கின் இருப்பை நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் சரிபார்க்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனுமதிக்கிறது.
எப்படி உங்கள் PF கணக்கின் பேலன்சை தெரிந்துகொள்வதென்று தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். உண்மையை சொல்ல போனால், 4 எளிய வழிகளில் உங்கள் PF கணக்கின் இருப்பை உங்களால் அறிந்துகொள்ள முடியும். இதற்கு உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனே போதுமானது. சரி, எந்த வழியில்.. எப்படி உங்கள் PF கணக்கின் இருப்பை அறிந்துகொள்வதென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உமாங் போர்டல் மூலம் உங்கள் PF இருப்பை சரிபார்ப்பது எப்படி?
சம்பளம் பெறும் ஊழியர்கள் UMANG போர்ட்டல் மூலம் EPFO இன் ஆன்லைன் சேவைகளை அணுகலாம். உமாங் போர்ட்டல் மூலம் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் PF கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஆப் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். அல்லது www.umang.gov.in மூலம் அணுகலாம்.
எஸ்எம்எஸ் மூலம் உங்கள் PF இருப்பை எப்படி சரிபார்ப்பது?
சம்பளம் பெறும் பணியாளர்கள் தங்கள் PF கணக்கு இருப்பை எளிய SMS முறை மூலம் சரிபார்க்கலாம். இதற்காக, ஊழியர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO என்று டைப் செய்து, |பின்னர் அவர்களின் UAN எண்ணை உள்ளிடவும். இந்த செய்தியை 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
சம்பளம் பெறும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு இருப்பை அறிந்துகொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இந்த எண்ணை அழைத்தவுடன் அது தானாகவே துண்டிக்கப்படும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலில் PF கணக்கின் இருப்பு விவரம் உங்களுக்கு SMS ஆக அனுப்பப்படும்.

இணையதளம் வழியாக எப்படி PF பேலன்சை அறிவது?
பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் PF கணக்கின் இருப்பை EPFO இணையதளத்தில் இருந்தும் சரிபார்க்க முடியும். இதற்கு, உங்களிடம் முதலில் UAN எண் விபரங்கள் இருக்க வேண்டும். பாஸ்வோர்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் லாகின் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இணையதளத்தில் உங்கள் EPF இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும் என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.
மூன்றாவது கட்டத்தில், நீங்கள் epfoservice.in/epfo பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இதற்குப் பிறகு நீங்கள் இருப்புத் தகவல் விருப்பத்திற்குச் செல்ல வேண்டும். நான்காவது கட்டத்தில், நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் EPFO அலுவலக இணையதளத்தின் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்தபடியாக, உங்கள் PF கணக்கு எண், பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
பின்னர் நீங்கள் சப்மிட் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் PF இருப்பு திரையில் காண்பிக்கப்படும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் PF கணக்கின் இருப்பை எளிமையாக அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








