உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?

|

ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும், காலக்கெடுவைச் சந்திக்கத் தவறினால் தாமதக் கட்டணமும் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான முந்தைய காலக்கெடு செப்டம்பர் 30, 2021 ஆகும். இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2022 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

பான் - ஆதார் இணைக்க இறுதி நாள் இன்று

பான் - ஆதார் இணைக்க இறுதி நாள் இன்று

இதற்கிடையில், உங்கள் பான் எண்ணுடன் ஏற்கனவே உங்கள் ஆதார் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அதன் நிலையை அறிந்துகொள்ள இந்த பதிவின் இறுதியில் உள்ள நேரடி இணைப்பு லிங்க் ஐ கிளிக் செய்து பயன்பெறுங்கள். உங்களின் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், வரும் ஏப்ரல் 1, 2022 ஆம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் என்ன சிக்கல்கள் வரும்?

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் என்ன சிக்கல்கள் வரும்?

இந்தியாவில் உள்ள அனைத்து பான் கார்டுகளுக்கும் இந்த இறுதி காலக்கெடு வருகின்ற மார்ச் 31, 2022 வரை மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதற்குள் உங்களின் PAN அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் காலக்கெடு முடிந்ததும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான, நேரத்தில் உங்கள் பான் எண் உடன் ஆதார் தகவல்கள் இணைக்கப்படவில்லை என்றால் என்னென்ன சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கூகிள் மேப்ஸ் இல் சிக்கிய ராட்சத பாம்பின் எலும்புக்கூடு: அடேங்கப்பா எவ்வளவு நீளம்! உண்மையில் இது என்ன தெரியுமாகூகிள் மேப்ஸ் இல் சிக்கிய ராட்சத பாம்பின் எலும்புக்கூடு: அடேங்கப்பா எவ்வளவு நீளம்! உண்மையில் இது என்ன தெரியுமா

இதை உடனே செய்யாவிட்டால் PAN செயலிழந்துவிடுமா?

இதை உடனே செய்யாவிட்டால் PAN செயலிழந்துவிடுமா?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் படி, ஜூலை 1, 2017 அன்று பான் எண்ணைக் கொண்ட ஒவ்வொரு நபரும் ஆதாரைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும், அதேபோல் இவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். இதற்காக இந்த விதிமுறை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதியை பின்பற்றாவிட்டால், அந்த நபரின் PAN செயலிழந்துவிடும்.

பான் எண் செயலிழந்தால் என்ன நடக்கும்?

பான் எண் செயலிழந்தால் என்ன நடக்கும்?

பான் எண் செயலிழந்தால், தனிநபர் பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. "நிரந்தர கணக்கு எண் செயலிழந்துவிட்ட ஒரு நபர், சட்டத்தின் கீழ் தனது நிரந்தர கணக்கு எண்ணை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது மேற்கோள் காட்டவோ தேவைப்பட்டால், அவர் நிரந்தர கணக்கு எண்ணை வழங்கவில்லை, தெரிவிக்கவில்லை அல்லது மேற்கோள் காட்டவில்லை என்று கருதப்படும். சட்டத்தின் விதிகளின்படி வழக்குப் பதிவு செய்யப்படும்.

18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..

PAN எண் முடக்கப்பட்டால் என்ன சிக்கல்களைச் சந்திக்க வேண்டும்?

PAN எண் முடக்கப்பட்டால் என்ன சிக்கல்களைச் சந்திக்க வேண்டும்?

மேலும், நிரந்தர கணக்கு எண்ணை வழங்காமல், தெரிவிக்காமல் அல்லது மேற்கோள் காட்டாமல் இருப்பதற்காகச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவர் பொறுப்பாவார்," என்று CBDT சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. வங்கிக் கணக்கு தொடங்குதல், பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகளை வாங்குதல் மற்றும் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைகள் செய்தல் போன்ற பல நோக்கங்களுக்காக PAN அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272B படி ரூ.10,000 அபராதமா?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272B படி ரூ.10,000 அபராதமா?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272B இன் படி, தனி நபர் அவரின் PAN அட்டையை வருமான வரிச் சட்டத்தின்படி குறிப்பிடப்படவிட்டாலோ அல்லது வழங்கப்படவிட்டாலோ ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்ள விதிகளின் கீழ், அத்தகைய ஒவ்வொரு விதி மீறலுக்கும் ஒவ்வொரு முறை தனித்தனியாக அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை விளக்கிய டாக்ஸ்மேன், டிஜிஎம் நவீன் வாத்வா கூறுகையில்,

இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..

கவனத்திற்கு ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.10,000 அபராதம்

கவனத்திற்கு ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.10,000 அபராதம்

"ஒவ்வொரு தவறுக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். Mr A இன் PAN செயலிழந்துவிடும் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு ஹோட்டலுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துகிறார், மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு நாணயத்தை வாங்குவதற்கு ரொக்கமாகப் பணம் செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் வருமான வரித்துறை இவருக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கலாம், அதாவது ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.10,000 என்று மொத்தமாக இரண்டு சேவைக்கு ரூ. 20,000 அபராதம் வசூலிக்கப்படும்." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

காலக்கெடுவைத் தவறவிட்டால் ரூ.1,000 மிகாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்

காலக்கெடுவைத் தவறவிட்டால் ரூ.1,000 மிகாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்

பட்ஜெட் 2021 இல், மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் 234H என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகும் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் தனிநபர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே ஒரு நபர் காலக்கெடுவைத் தவறவிட்டால், அவர் ரூ. 1,000 க்கு மிகாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பான் ஆதாரை இணைக்கும் காலக்கெடு குறித்து Taxbuddy.com நிறுவனர் சுஜித் பாங்கர் கருத்துத் தெரிவிக்கையில், "பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும்,

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?

செயல் இழந்த PAN எண்ணை என்ன செய்வது?

செயல் இழந்த PAN எண்ணை என்ன செய்வது?

ஆதார் எண் உடன் PAN இணைப்பை எப்படிச் சரிபார்ப்பது? இந்த இணைப்பை விரைவில் முடிப்பது நல்லது. பான் மற்றும் ஆதாரை இணைப்பது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முன்கூட்டிய ரசீது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆதார் இணைக்கும் செயல்முறை முடிந்ததும் உங்கள் செயல்படாத பான் கார்டுகள் இணைப்பிற்குப் பிறகு செயல்படத் துவங்கும். உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உடனே இந்த ஆதார்-பான் இணைப்பு லிங்க்-ஐ கிளிக் செய்து சோதனை செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How To Check PAN and Aadhaar Link Status Online Last Call Today To Link Your PAN With Aadhaar : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X