ஓஹோ பிளாக் பண்ணிட்டிங்களா?- வாட்ஸ்அப் பிளாக் செய்த நபர்கள் அறிவது எப்படி?

|

சமூகவலைதள பயன்பாடு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் ஏதேனும் ஒரு சமூகவலைதளத்தில் கணக்கு வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஆகும். இதில் வாட்ஸ்அப் கணக்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

கடைசியாக பார்த்தார்களா இல்லையா?

கடைசியாக பார்த்தார்களா இல்லையா?

வாட்ஸ்அப்-ல் தங்களுக்கு தேவையில்லாத நபர்களிடம் இரும் பெறும் மெசேஜ், வாட்ஸ் அழைப்புகள் உள்ளிட்ட பதிவுகள் பெறுவதை தடுக்க பிளாக் செய்வது வழக்கம். அதேபோல் பிறர் தங்களை பிளாக் செய்துள்ளார்களா என்பது தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளது. அது அந்த குறிப்பிட்ட தொடர்பு கடைசியாக பார்த்தார்களா இல்லையா என்பது மறைக்கப்பட்டிருக்கும் மேலும் குறிப்பாக அந்த நபரின் டிபி எனப்படும் அவர்கள் வைத்திருக்கும் புகைப்படத்தை பார்க்க இயலாத நிலை ஏற்படும்.

வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பு

வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பு

அதேபோல் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் ஒரே டிக்கில் நீடிக்கும். இரண்டாவது டிக்கோ அல்லது அவர்கள் பார்த்ததற்கு உண்டான அறிகுறியோ காட்டப்படாது. பிளாக் செய்யவில்லை என்றால் இரட்டை டிக் கண்டிப்பாக காண்பிக்கும். இதுபோன்ற காரணங்களால் பிளாக் செய்யப்பட்ட தகவல் உறுதிப்படுத்த முடியாத பட்சத்தில் அந்த தொடர்புக்கு வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பை முயற்சி செய்யவும். நீங்கள் அழைப்பு செய்ய முடியாவிட்டால் அந்த நபர்களால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதேபோல் ஒரு தொடர்புக்கு நீங்கள் குறிப்பிட்ட அனைத்து அறிகுறைகளையும் சந்தித்தால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று கருதப்படுவீர்கள்.

தகவல் பகிர்வு தளம்

தகவல் பகிர்வு தளம்

இந்த தகவல் ஆனது அறிந்துக் கொள்வதற்கு மட்டுமே நீங்கள் ஒருவரை முறையோடு பிளாக் செய்யும் பட்சத்தில் அது தங்கள் கடமையாகும். காரணம் பல்வேறு முறைகேடு நபர்களை பலர் பிளாக் செய்வது வழக்கம். சமூகவலைதளங்கள் என்பது தகவல் பகிர்வு தளம் மட்டுமே கூடுதல் பிரச்சனைகளை முறையோடு அதிகாரிகளிடம் அணுகுவது சிறந்த வழியாகும்.

உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து ஸ்டிக்கர்கள்

உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் உலக சுகாதார அமைப்பு உடன் இணைந்து ஸ்டிக்கர்களை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதலாக ஒரு அம்சத்தை பதிவு செய்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை விளக்கும் வகையிலும், கொரோனா அழைப்புதவி அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கிறது.

புதிய ஸ்டிக்கர் பேக்

புதிய ஸ்டிக்கர் பேக்

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஸ்டிக்கர் பேக் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்களை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் உலகெங்கிலும் வெளியிடப்பட்டு வருவதால் அதை போடுவதற்கு புதிய ஸ்டிக்கர் பேக் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கோவிட்-19 தடுப்பூசிகள் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என கருதப்பட்டாலும், தற்போதைக்கு தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும், உடல் ரீதியாக சமூகஇடைவெளி கடைபிடிக்க வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்பு

உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்பு

கோவிட்-19 குறித்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடனும், உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 ஹெல்ப்லைன்கள்

கோவிட்-19 ஹெல்ப்லைன்கள்

அதேபோல் வாட்ஸ்அப்பில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 ஹெல்ப்லைன்களும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் மற்றும் பதிவுகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி என உருவாக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் பேக் 23 குறிப்பிட்ட ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்த மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த மக்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to Check If Someone Blocked in Whatsapp?- Here the Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X