Home
News

இவ்ளோ நாள் Gpay யூஸ் பண்றோம்.. ஆனா இது FREE-னு தெரியாம போச்சே.. உங்க CIBIL ஸ்கோர் எவ்ளோ?

இந்தியாவில் கூகுள், போன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் வாங்குவது முதல் மின்சார கட்டணம் செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது வரை இந்த UPI செயலிகள் தான் அதிகம் பயன்படுகின்றன.

அதேபோல் இந்த யுபிஐ செயலிகள் வந்த பிறகு தான் சில்லறை தொல்லை, அடிக்கடி ஏடிஎம் போகும் தொல்லை குறைந்துவிட்டது என்றே கூறலாம். மேலும் பணப் பரிமாற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்பானவை ஆகவும், நாம் எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறோம் என்பதைக் கண்காணிப்பது போன்ற பல அம்சங்களையும் இந்த அசத்தலான யுபிஐ செயலிகள் வழங்குகின்றன.

Gpay வழியா.. Free-ஆ CIBIL ஸ்கோர் செக் செய்வது எப்படி?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இப்போது கூகுள் பே (Google Pay) செயலி மூலம் உங்களுடைய சிபில் ஸ்கோர் (CIBIL score) எவ்வளவு என்று தெரிந்துகொள்ள முடியும். அதாவது சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களுடைய கடன் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு மதிப்பெண் ஆகும்

அதாவது நீங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய முழுமையான தகவல்கள் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் உங்களது கடனின் இஎம்ஐ, கிரெடிட் கார்டு பயன்பாடு போன்ற தகவல்களையும் இதில் பார்க்கலாம். குறிப்பாக இந்த முழுமையான பகுப்பாய்வின் அடிப்படையில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நீங்கள் எந்தவொரு வங்கியிலும் கடன் வாங்குவதற்கு இந்த சிபில் ஸ்கோர் ரொம்ப முக்கியம். மேலும் இந்த சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் தான் வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கும்.. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் தயங்காமல் கடன் வழங்கும்.

ஒருவேளை நீங்கள் ஏதேனும் கடனைச் சரியாக செலுத்தாமல் பிரச்சனையைச் சந்தித்திருந்தால் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தாலும் வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கு தயக்கம் காட்டும். அதேபோல் இந்த சிபில் ஸ்கோர் எவ்வளவு என்று பார்க்க நிறைய வழிகள் உள்ளன. சில இணையதளங்களுக்குச் சென்று பணம் செலுத்த வேண்டியிருக்கும். அங்கு நீங்கள் முழுமையான விவரங்களைப் பெறலாம். இதுதவிர சில இணையதளங்களில் நீங்கள் இலவசமாகவே சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது கூகுள் பே செயலியில் கூட நீங்கள் இலவசமாக சிபில் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இதற்கான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் உங்களது போனில் கூகுள் பே செயலியைத் திறக்கவும்.

வழிமுறை-2: அடுத்து கூகுள் பே செயலி திறந்ததும் கீழே ஸ்க்ரோல் (Scroll Down) செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாகச் சரிபார்க்கவும் (Check your CIBIL score for free) எனும் விருப்பம் இருக்கும் அதை தேர்வு செய்து உங்களது சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.

வழிமுறை-4: ஒருவேளை நீங்கள் புதிய யூசராக இருந்தால் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இ-மெயில் ஐடி, பான் கார்டு போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு கூகுள் பே செயலியில் யுபிஐ பின் பதிவிடாமல் ஒரு கிளிக் மூலம் பேமண்ட் செய்யும் புதிய UPI LITE சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது வரை எந்தவொரு யுபிஐ பேமண்ட் ஆக இருந்தாலும் பின் பாஸ்வேர்டு கொடுத்துத் தான் பேமெண்ட் செய்வோம். ஆனால் இனிமேல் பின் பதிவிடாமல் பேமெண்ட் செய்ய முடியும். சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் பதிவிடாமல் யார் வேண்டுமானாலும் பேமன்ட் செய்ய முடியும். தற்போது இதே சேவையை தான் கூகுள் பே அறிமுகம் செய்து இருக்கிறது.

Gpay வழியா.. Free-ஆ CIBIL ஸ்கோர் செக் செய்வது எப்படி?

இந்த யுபிஐ லைட் சேவை கணக்கு பயன்படுத்தும் பயனர்கள் ஒரு நாளைக்கு 2 முறை ரூ.2000 தொகையை இக்கணக்கில் லோடு செய்துகொண்டு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கும் கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும். சிறிய மற்றும் அதிவிரைவு கட்டண அனுபவத்தை அணுக இந்த யுபிஐ லைட் சேவை உதவும் என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூகுள் பே பயனர்கள் முதலில் தங்கள் சுயவிவரப் பக்கத்திற்கு (profile page) சென்று Activate UPI LITE என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதை இணைக்கும் செயல்முறை முடிந்ததும், பயனர்கள் தங்கள் UPI LITE கணக்கில் ரூ. 2,000 வரை பணத்தைச் சேர்க்க முடியும். அதேபோல் இதில் ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.4,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பரிவர்த்தனையை முடிக்க பயனர்கள் Pay PIN-Free என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Check CIBIL Score Free on Google Pay App: Simple Tips : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X