உங்கள் ஏரியாவில் BSNL 4G கிடைக்கிறதா? உடனே இப்படி செக் செய்து பாருங்கள்.. உங்க ஏரியாவில் எது பெஸ்ட் நெட்வொர்க்
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களை வீழ்த்தும் முயற்சியில் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) களமிறங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களை ஓவர் டேக் செய்ய இதுதான் மிகச்சரியான நேரம் என்பதை அறிந்த பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது இந்தியாவின் பல இடங்களில் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை மிகவும் வேகமாக அறிமுகம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, இப்போது பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் வேகமாக அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் விரிவுபடுத்தி வருகிறது. இப்போது எந்த ஏரியாவில் எந்த நெட்வொர்க் சிறப்பான கவரேஜ்ஜை வழங்குகிறது என்பதை கண்டறிவதில் மக்களுக்கு சிக்கல் எழுகிறது. அதேபோல், எந்த ஏரியாவில் இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்கிறது என்பதை கண்டறிவதிலும் குழப்பம் நீடிக்கிறது.

உங்கள் ஏரியாவில் BSNL 4G கிடைக்கிறதா? உடனே இப்படி செக் செய்யுங்க:
இந்த குழப்பத்திற்கு தீர்வாக அமையும் மொபைல் ஆப்ஸ் தான் ஓபன்சிக்னல் (Opensignal) என்ற மொபைல் ஆப்ஸ். இந்த Opensignal மொபைல் ஆப்ஸை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஏரியாவில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் கிடைக்கிறதா? இல்லையா? என்பதை உங்களால் சில நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி பிஎஸ்என்எல் மட்டுமின்றி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் சிக்னல் வலிமையையும் உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
உண்மையை சொல்ல போனால், இது ஒரே கல்லில் நான்கு மாங்காய் என்ற பலே நன்மையை வழங்குகிறது. இந்த ஓபன்சிக்னல் ஆப்ஸ் மூலம் நீங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் எல்லா மொபைல் டவர்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம். உங்கள் பகுதிக்கு அல்லது உங்கள் வீட்டு அருகில் சிறப்பான நெட்வொர்க் கவரேஜை தரும் நெட்வொர்க் எது என்பதையும் நீங்கள் இந்த ஆப்ஸ் மூலம் அறிந்துகொள்ளலாம் மக்களே.
இந்த ஆப்ஸை பயன்படுத்தி உங்கள் ஏரியாவில் பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் இதோ.
இந்த செயல்முறையை பின்பற்றி உங்கள் ஏரியாவில் எந்த நெட்வொர்க் வலிமையானது என்று தெரிந்துகொள்ளுங்க:
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Opensignal ஆப்ஸை இன்ஸ்டால் செய்யவும்.
- பிறகு, Opensignal ஆப்ஸில் உங்கள் லொக்கேஷன் அனுமதி வழங்கவும்.
- உங்கள் பகுதியில் சிக்னல் சர்ச் செய்ய கோரப்படும் அனுமதிகளை வழங்கவும்.
- All Operator என்ற விருப்பத்தை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- இந்த விருப்பம் மொத்தமாக உங்கள் பகுதியில் உள்ள Jio, Airtel, BSNL, VI, நெட்வொர்க் டவர்களை காண்பிக்கும்.
- 4 நெட்வொர்க் டவர்களில் இருந்து கிடைக்கும் சிக்னல் வலிமையையும் இந்த ஆப்ஸ் காண்பிக்கும்.
- BSNL 4G மட்டும் தேட விரும்பினால், மேற்கணப்படும் விருப்பங்களில் இருந்து BSNL மட்டும் தேர்வு செய்யவும்.
- 3G அல்லது 4G அல்லது 5G போன்ற விருப்பங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
இதன்படி, உங்கள் ஏரியாவில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கிடைக்கிறதா இல்லையா என்பதை ஆப்ஸ் தெளிவாக காண்பிக்கும். இதேபோல், மற்ற நெட்வொர்க்குகளின் வலிமையையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








