Aadhaar அட்டைக்கு எக்ஸ்பயரி தேதி இருக்கா? UIDAI சொன்ன தகவல் இதுதான்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் அரசாங்க உதவித்தொகை பெறுவது முதல் பேங்க் பரிவர்த்தனை வரை என அனைத்திற்கும் ஆதார் (Aadhaar) கார்டு பயன்படுகிறது. குறிப்பாக வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது. இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதார் அட்டை எத்தனை வருடங்கள் செல்லுபடியாகும்? இதற்கு எக்ஸ்பயரி தேதி இருக்கிறதா? என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
10 ஆண்டுக்கு ஒரு முறை:
இந்திய தனித்துவ அடையாள அணையம் (UIDAI) தெரிவித்த தகவலின்படி, ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்குள் பலர் தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றி இருப்பார்கள், அதன்படி சிலர் மொபைல் நம்பரை மாற்றி இருப்பார்கள், சிலர் வீடு மாறி இருப்பார்கள்.

எனவே இதுபோன்ற சூழ்நிலையில் ஆதார் அட்டையைக் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும். ஆனால் மாற்றம் இல்லாமல் இருந்தால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் எந்தவித புதுப்பிப்பையும் செய்ய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் அவை செல்லது என்று வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பொய். மேலே கூறப்பட்டுள்ள சில காரணங்களுக்காகத்தான் இந்த புதுப்பிப்பு தேவைப்படுகிறது.
குழந்தைகளின் ஆதார் கார்டு
அதேபோல் குழந்தைகளுக்கும் பால் ஆதார் அல்லது பால்ய ஆதார் என்ற பெயரில் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. அதாவது குழந்தைக்கு 5 வயதாகும்போது ஒரு முறையும், அடுத்து 15 வயதாகும்போது ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏன் ஆதார் புதுப்பிப்பு செய்யவேண்டும் என்றால், அதாவது குழந்தை பிறந்து 5 வயதாகும்போது அவர்களுடைய முகம், கை ரேகை, கருவிழி போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், எனவே தான் இந்த புதுப்பிப்பு தேவைப்படுகிறது. கட்டாயம் குழந்தைகளின் ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பித்தே ஆகவேண்டும்.
ஆதார் எக்ஸ்பயரி தேதி?
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஆதார் அட்டைக்கு எந்த ஒரு எக்ஸ்பயரி தேதியும் இல்லை. அதாவது இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது என்றால், அந்த ஆதார் நம்பர் தான் குழந்தையின் வாழ்நாள் காலம் முழுவதும் பயன்படும். இந்த ஆதாரில் விவரங்களை மாற்றம் செய்யலாம் ஆனால் ஆதார் அட்டைக்கு எக்ஸ்பயரி தேதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்கள் ஆதார் அட்டையில் வரும் 2025 ஜூன் 14-ம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்தால் ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதல் செலவாகலாம்.
குறிப்பாக முன்பு ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் கடைசி தேதி என்று இதற்கு 2024 டிசம்பர் 14- ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதாவது தற்போது ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள 2025 ஜூன் 14-ம் தேதி தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








