புகைப்படங்களின் அளிவினை மாற்ற ஆன்லைன் ஹெல்ப்!

இதற்கு முதலில் பெரிய அளவில் உள்ள புகைப்படத்தினை, தேவையான அளவுக்கு கொண்டு வர வேண்டும். இப்படி புகைப்படங்களின் அளவை மாற்றுவது எப்படி? என்பதற்கு சில வழிமுறைகளும் இங்கு உள்ளது.
புகைப்படங்களை மாற்ற நிறைய ஆன்லைன் வலைத்தளங்கள் உதவுகின்றன. கூகுள் பிக்காசா போன்றவற்றின் மூலம் எளிதாக புகைப்படத்தின் அளவினை மாற்ற முடியும். இந்த கூகுள் பிக்காசாவில் எந்த புகைப்படத்தின் அளவினை மாற்ற வேண்டுமோ, அந்த புகைப்படத்தினை வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட் செய்வது, காப்பி செய்வது, வண்ணங்களை மாற்றுவது என்று பல வசதிகள் இதன் டூல்ஸ் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதிகளை பயன்படுத்தி புகைப்படங்களின் அளவினை எளிதாக மாற்றலாம். ஒரு புகைப்படத்தினை நகர்த்த வேண்டும் என்றால், அதற்கும் இதில் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உள்ள டூல்களை பன்படுத்தி புகைப்படத்தின் அளவினை எளிதாக மாற்றிய பின்பு சேவ் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இது போல் புகைப்படத்தின் அளவு பெரியதாக இருப்பின், இ-மெயிலில் அந்த ஃபோட்டோக்களை அனுப்ப முடிவதில்லை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் வசதிகளின் மூலம், புகைப்படங்களின் அளவினை விரும்பிய படி மாற்றிவிட்டு, அதன் பிறகு இந்த புகைப்படங்களை இ-மெயிலில் பகிர்ந்து கொள்ளலாம்.
இங்கு ஆன்லைனில் புகைப்படங்களை மாற்ற ரீசைஸ்2மெயில், ஷ்ரிங்க்பிக்சர்ஸ் மற்றும் ரீசைஸ்பிக் என்று மூன்று வலைத்தளங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பாக புகைப்படங்களின் அளவினை மாற்றி, இ-மெயிலில் பகிர்ந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications