இனி அந்த பிரச்சனை இருக்காது: Tata sky வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

|

Tata Sky நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது பதிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட விஷயங்களை மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரபலமான DTH நிறுவனங்களில் ஒன்றான, Tata sky

பிரபலமான DTH நிறுவனங்களில் ஒன்றான, Tata sky

பிரபலமான DTH நிறுவனங்களில் ஒன்றான, Tata sky நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் சேனல்களையும் வழங்கி வருகிறது. தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஏற்ப வசதியை அடிப்படையாகக் கொண்டு டிடிஹெச் திட்டங்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி வருகிறது.

கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது

கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது

Tata sky நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்வதற்கென கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டங்களில் பிராந்திய பொதிகள், க்யூரேட்டட் பொதிகள் போன்ற சில சேவைகளை தேர்வு செய்வது அதன் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

மிகவும் பயனுள்ள ஒரு இலவச அறிவிப்பு

மிகவும் பயனுள்ள ஒரு இலவச அறிவிப்பு

அதேபோல் ஊரடங்கு உத்தரவின் காலத்தில், டாடா ஸ்கை நிறுவனம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் போது தனது சிறப்பு சலகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு இலவசத்தை தற்போது அறிவித்துள்ளது டாடா ஸ்கை நிறுவனம்.

emergency free credit facility

emergency free credit facility

இப்போது டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது.இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை

இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை

குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாதவர்களுக்கும், டீலர்களிடம் சென்று ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தினை கொண்டவர்களுக்கும் இந்த சலுகைளை அறிமுகம் செய்துள்ளது.

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்

மிஸ்டு கால் கொடுத்தால் போதும் டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த இலவச சேவையை பெறும் வாடிக்கையாளர்கள், ஆக்டிவேட் செய்தபின்னர் வரவு வைக்கப்பட்ட தொகையானது கழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையைப் பெற பயனர்கள் வெறுமனே 080-61999922 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள்

மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள்

அதேபோல், Tata Sky-க்கு மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் கொண்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக ​​அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறந்த ஆதரவு அமைப்பு மற்றும் சுய உதவி விருப்பங்கள் டாடா ஸ்கை நிறுவனங்கள் வழங்குகிறது. இந்த வாடிக்கையாளர் ஆதரவு மையத்தை வாடிக்கையாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை கொண்டு அனுக முடியும் என தெரவிக்கப்படுகிறது.

Tata Sky கணக்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு மொபைல் எண்

Tata Sky கணக்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு மொபைல் எண்

ஒருவேளை உங்கள் Tata Sky கணக்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு மொபைல் எண் தவறாக இருந்தால் அதை எப்படி மாற்றுவது உள்ளே எப்படி நுழைய முடியும் என குழப்பம் ஏற்படலாம். இதற்கான ஒரே வழி என்ன என்பது குறித்து பார்க்கலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் என்றால் என்ன?

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் என்றால் என்ன?

டாடா ஸ்கை நிறுவனத்தில் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், தங்களது டிஜிட்டல் அடையாள அட்டை போன்றதாகும் என கூறப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டு தங்களுக்கு தேவைப்படும் விருப்பங்களை எளிதாக அணுக முடிவதோடு, தொகுப்புகள் அல்லது சேனல்களை எளிதில் சேர்க்கவும், சேவைகளை செயல்படுத்தவும், செயலிழக்கச் செய்யவும், SMS அனுப்புவதன் மூலம் காட்சி அம்சங்களை வாங்கவும் முடியும்.

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்னை எப்படி மாற்றுவது ?

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்னை எப்படி மாற்றுவது ?

 • MyTataSky வலைத்தளத்தை பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.
 • முதல் கட்டமாக MyTataSky இணையதளத்தில் பதிவு செய்யுங்கள், Go to the My Account சுயவிவரப் பகுதியைத் தேர்வுசெய்ய வேண்டும்
 • இங்கு நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண் அல்லது அதை மாற்று எண்ணைக் காண முடியும்.
 • இல்லையெனில் இங்கே Edit Profile என்ற வார்த்தையை கிளிக் செய்து புதியதைத் தட்டச்சு செய்யலாம்.
 • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணாக தங்களுக்கு விருப்பமான தொலைபேசி எண்னை பதிவு செய்து Save செய்து கொள்ளலாம்.
 • தொடர்ந்து நீங்கள் செய்யப்பட்ட மொபைல் எண் மாற்றப்பட்டது என்று SMS வரும்.
 • Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

  TATA SKY ஹெல்ப்லைனை எண்

  TATA SKY ஹெல்ப்லைனை எண்

  அதேபோல் ஆப்லைனில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவதற்கு, TATA SKY ஹெல்ப்லைனை எண்ணையும் அழைக்கலாம். ஹெல்ப்லைன் எண்ணை மாற்றுவதற்கு ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு எண் வழங்கப்படும். கணக்கை சரிபார்க்க வாடிக்கையாளர் சேவை அதிகாரி தங்களது பெயர், முகவரி, பழைய மொபைல் எண் மற்றும் பிற விவரங்கள் குறித்த விவரங்களை சரிபார்த்து மாற்றம் செய்து தருவார்.

Best Mobiles in India

English summary
here the steps to change register mobile number in tata sky

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X