ஆதார் அட்டையில் உங்கள் போட்டோ பிடிக்கலையா? இதை செய்தால் போதும்.. சுலபமாக மாற்றலாம்!
இந்தியாவில் அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் பெறுவதற்கு ஆதார் (aadhaar) அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. அதுவும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் நன்மையைப் பெறுவது முதல், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, என பல விஷயங்களுக்கு இப்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டில் புகைப்படம் சரியாகவும், தெளிவாகவும் இருப்பது இல்லை. இதனால் விமான நிலையம் முதல் வங்கி வரையில் அதிகாரிகள் ஒரு முறைக்கு இரு முறை ஆதார் கார்டுக்கு உரிமையாளர்களை உறுதி செய்ய வேண்டி உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் கார்டில் சரியான புகைப்படத்தை மாற்றினாலே போதுமானது.

அதேபோல சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். எனவே தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்து பயன்படுத்தத் தோன்றும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதாரில் புகைப்படம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கப்போகிறோம்.
ஸ்டெப்-1:https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப்-2: அதன்பின்பு நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் அளிக்கவும்.
ஸ்டெப்-3: ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்தையும் சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
ஸ்டெப்-4: அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. அதேபோல் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு எந்தவித டாக்குமெண்ட் கொடுக்க தேவையில்லை. குறிப்பாக அங்கு பணியில் இருக்கும் ஆதார் சேவை மைய அதிகாரி நேரடியாக வெப் கேமராவை கொண்டு உங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஆதார் கார்டில் புகைப்படத்தைப் புதுப்பித்த பிறகு அதை பதிவிறக்கம் செய்ய UIDAI இணையதளத்திற்குச் செல்லவும். அடுத்து My Aadhaar என்பதை தேர்வு செய்து Download Aadhaar என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறயீட்டை உள்ளிடவும். அடுத்து Send OTP பொத்தனை கிளிக் செய்யவும்.
அதன்பின்பு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை உள்ளிட வேண்டும். அதன்பின்பு உங்கள் ஆதார் கார்டை எளிமையாகப் பதிவிறக்கம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








