Home
News

ஆன்லைனில் ஆதார் எண் வைத்தே PAN card முகவரியை மாற்றலாம்: இதோ எளிய வழிமுறைகள்.!

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பான் எண் இல்லாவிட்டால் இன்றைய காலக்கட்டத்தில் நிதி ரீதியிலான எந்தவொரு சேவைகளையும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல் பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது. இது தவிர வங்கி பணப்பரிவர்த்தனை, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது பான் கார்டு.

ஆன்லைனில் ஆதார் எண் வைத்தே PAN card முகவரியை மாற்றலாம்.!

மேலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதுவும் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார்- பான் இணைக்கப்பட வேண்டும். ஆனால் உங்களது பான் கார்டில் திருத்தம் இருந்தால் அதை சரி செய்து பின் இணைந்தால் மிகவும் நல்லது. அதன்படி இப்போது ஆன்லைனில் உங்களது ஆதார் எண் வைத்தே பான் கார்டின் முகவரியை மாற்றலாம். இப்போது இதை எவ்வாறு செய்வது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் மத்திய அரசின் இணைய தளமான UTI Infrastructure Technology and Service Ltd என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து pan card service என்பதைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண், இமெயில் ஐடி, மொபைல் எண் போன்றவற்றைப் பதிவிட வேண்டும்.

வழிமுறை-2 அதன்பின்பு ஆதார் கொண்டு பான் கார்டு முகவரி மாற்ற வேண்டும் என்றால் Aadhaar Base e-KYC Address Update என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து இப்போது கேப்ட்சா கோடை பதிவிட்டு, Terms and conditions ஆப்ஷனுக்கு பதிலளிக்கவும். பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்

ஆன்லைனில் ஆதார் எண் வைத்தே PAN card முகவரியை மாற்றலாம்.!

வழிமுறை-3 குறிப்பாக உங்களது ஆதார் இணைக்கப்பட்ட இ-மெயில் ஐ.டி மற்றும் மொபைல் எண்ணிற்கு ஓடிபி (OTP) அனுப்பப்படும். இந்த ஒடிபி-ஐ பதிவிட்டு மீண்டும் Submit கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் பான் கார்டு முகவரி மாற்றம் தொடர்பான விவரங்கள் உங்களது மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐடி-க்கு வரும்.

பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் இதற்குக் கால அவகாசமும் வழங்கப்பட்டது. கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தாலும் நிறையப் பேர் பான் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தனர்.

ஆன்லைனில் ஆதார் எண் வைத்தே PAN card முகவரியை மாற்றலாம்.!

இந்நிலையில் கடைசியாக வெளியாகியிருந்த அறிவிப்பில் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து தான் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தைக் கையில் எடுத்தது மத்திய அரசு.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Change PAN Card Address Using Aadhaar Number? Here are simple tips : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X