Home
News

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆவணம் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஆதார் அட்டை என்பது முக்கியமானது மற்றும் கட்டாயமானது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய அடையாள அட்டை ஆவணத்தில் மக்களின் முகம் தெளிவாக இருப்பதில்லை என்பது நீண்ட நாள் குறையாகக் கூறப்பட்டு வருகிறது.

அடையாள அட்டையில் தெளிவாக அடையாளம் தெரியாத முகங்கள்

அடையாள அட்டையில் தெளிவாக அடையாளம் தெரியாத முகங்கள்

நாட்டின் முக்கிய அடையாள அட்டையில், அந்தந்த தனிநபரின் முக அடையாளமே தெளிவாக இல்லாமல் இருப்பதும், ஆதார் அட்டையில் உள்ள முகத்தைப் பார்த்து நண்பர்கள் கிண்டல் செய்யும் விதத்திலேயே ஆதார் புகைப்படங்கள் அமைந்துள்ளது. இது ஒரு புறம் வேடிக்கை கூத்தாக இருந்தாலும், இதை நாம் சரியாக மாற்றிக்கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் முக்கிய கடமையாகும். உண்மையைச் சொல்லப் போனால், இதை ஆதார் ஆணையமே ஆரம்பத்தில் சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், போதிய நேரமும், சரியான புகைப்படக் கருவிகளும் வழங்கப்படாத காரணத்தினால் தெளிவான புகைப்படங்களை ஆதரில் பதிவிட முடியாமல் போனது.

ஆதாரில் புகைப்படம் தெளிவாக இருந்தாலும் ஏன் அப்டேட் செய்யப்பட வேண்டும் தெரியுமா?

ஆதாரில் புகைப்படம் தெளிவாக இருந்தாலும் ஏன் அப்டேட் செய்யப்பட வேண்டும் தெரியுமா?

இப்போது இதை மாற்றம் செய்துக்கொள்ள, ஆதார் ஆணையம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தெளிவு இல்லாத பழைய புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்றம் செய்ய வாய்ப்பளிக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைச் சரியாகப் பின்பற்றுங்கள். சிலரின் புகைப்படங்கள் தெளிவாக இருந்தாலும், ஆதார் அவற்றை மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இதற்குப் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் உள்ளது.

உங்கள் அடையாளத்தை ஆதாருடன் அப்டேட் செய்வது முக்கியமா?

உங்கள் அடையாளத்தை ஆதாருடன் அப்டேட் செய்வது முக்கியமா?

முக்கிய அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படும் ஆதிரை பெரும்பாலானோர் பல ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்து வங்கியிருப்பீர்கள், உங்களின் முகம் இந்த காலகட்டத்திற்குள் மாற்றம் பெற்றிருக்கும். அதனால் தற்போதுள்ள அடையாளத்தை உங்கள் ஆதாருடன் அப்டேட் செய்வது முக்கியமானது. இதை எளிமையாகச் செய்ய இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இப்போது சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற அனுமதிக்கிறது. இதன் வதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதாகப் புதுப்பிக்கலாம்.

ஆன்லைனில் கிடைக்கும் ஆதார் அப்டேட் சேவைகள் என்னென்ன?

ஆன்லைனில் கிடைக்கும் ஆதார் அப்டேட் சேவைகள் என்னென்ன?

அறிமுகமில்லாதவர்களுக்கு, UIDAI ஆனது இந்தியர்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் மற்றும் அனைத்து திருத்தக் கோரிக்கைகளையும் கவனித்துக் கொள்ளும் நிறுவனமாகச் செயல்படுகிறது. உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் அல்லது பிற விவரங்களையும் மாற்ற நீங்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்றாலும் கூட, உங்களுடைய முக அடையாளத்தை மாற்றம் செய்ய நீங்கள் முழுமையாக ஆன்லைனில் மட்டும் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியாது.

பாதுகாப்பு நலன் கருதி ஆதார் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையா இது?

பாதுகாப்பு நலன் கருதி ஆதார் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையா இது?

பாதுகாப்பு நலன் கருதி ஆதார் மையம் இந்த சேவையை நேரடி சேவையாக மட்டுமே வழங்குகிறது. உங்கள் புதிய அப்டேட் புகைப்படத்தை நீங்கள் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று அங்குள்ள பயோமெட்ரிக் முறைகளைப் பின்பற்றி மாற்றம் செய்ய வேண்டும். ஆதார் போட்டோ புதுப்பிப்புகளுக்கு விண்ணப்பிக்க அட்டைதாரர்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்குச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் புகைப்படத்தை மாற்ற, அட்டைதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு கூட ஆதார் மையங்களுக்குச் செல்லலாம்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தைப் புதுப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தைப் புதுப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

  • UIDAI இன் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • போர்ட்டலில் இருந்து ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • நீங்கள் முழு படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை.
  • புகைப்படத்தை மாற்றுவதற்குத் தேவையான பொருத்தமான பிரிவுகளை மட்டும் நிரப்பவும்.
  • அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
  • உங்களின் புகைப்படத்தை யார் எடுப்பார் தெரியுமா?

    உங்களின் புகைப்படத்தை யார் எடுப்பார் தெரியுமா?

    • ஆதார் நிர்வாகி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.
    • ஆதார் பதிவு மையம் / ஆதார் சேவா கேந்திராவில் நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்.
    • புகைப்படத்தை மாற்றும் சேவைக்கு நீங்கள் ரூ. 25 + GST செலுத்த வேண்டும்.
    • புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டையும் பெறுவீர்கள்.
    • UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தவும்.
    • ஆதார் புகைப்படத்தை மாற்றுவோரின் முக்கிய கவனத்திற்கு

      ஆதார் புகைப்படத்தை மாற்றுவோரின் முக்கிய கவனத்திற்கு

      • அதிகாரப்பூர்வ இணையதளத்தில், புதிய URNஐப் பயன்படுத்தி உங்கள் புகைப்பட மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்கலாம்.
      • உங்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே, UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
      • மேம்படுத்தல் செயல்முறை 90 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
      • புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

        புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

        • உங்கள் ஆதார் எண்ணைப் பெற https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html ஐப் பார்வையிடவும்.
        • கீழ் தோன்றும் மெனுவிலிருந்து 'Download Aadhaar' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
        • உங்கள் ஆதார், பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடி எண்ணை உள்ளிடவும்.
        • கேப்ட்சாவை நிரப்பி 'Send OTP' பட்டனைக் கிளிக் செய்யவும்.
        • உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வழங்கப்பட்ட OTP ஐ உள்ளிட்டு உங்கள் புதிய ஆதார் அட்டையைப் பதிவிறக்கவும். நீங்கள் அதை அச்சிடவும் தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Change Old Photo Of Your Aadhaar Card With The New Photo In Few Steps : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X