ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? ஆன்லைனில் மாற்ற முடியுமா? இதோ முழு விவரம்..
அரசாங்க உதவித்தொகை பெறுவது முதல் பேங்க் பரிவர்த்தனை வரை என அனைத்திற்கும் தேவைப்படுகிறது ஆதார் கார்டு (Aadhaar Card). குறிப்பாக உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் உடனே அப்டேட் செய்து அதை மாற்ற வேண்டும்.
ஆதார் கார்டில் அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். எனவே ஆதார் கார்டில் எப்போதுமே சரியான தகவல்கள் இருக்க வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பாக UIDAI ஆன்லைனில் மொபைல் நம்பரை புதுப்பிக்கும் (அப்டேட்) வசதியை நிறுத்தி உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இதனை நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை மாற்ற விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
வழிமுறை-1: முதலில் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும். அங்கு பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் முடிந்த பின்பு, ஆதார் திருத்தம் செய்வதற்கான படிவத்தைப் பெற்று சரியான விவரத்துடன் பூர்த்தி செய்யவும்.
வழிமுறை-2: அடுத்து ரூ.50 சேவை கட்டணம் செலுத்தி, அந்த படிவத்தை நிர்வாகியம் சமர்பிக்கவும். அதன்பின்பு ஆதார் புதுப்பிப்பு தொடர்பான URN நம்பரைக் கொண்ட ஒப்புகைச் சீட்டை பெறுவீர்கள். அதிலிருந்து சரியாக 90 நாட்களுக்குள் உங்கள் ஆதாரில் மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும். இதை நீங்கள் UIDAI இணையதளத்திற்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
வழிமுறை-3: ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டதா என்ற ஸ்டேட்டஸை சரிபார்க்க UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று "Check Aadhaar Status" என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் ஆதார் திருத்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட URN நம்பரை என்டர் செய்யவும். அதன் பிறகு கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "Submit" செய்தால் உங்களுடைய மொபைல் நம்பர், ஆதார் உடன் இணைக்கப்பட்ட விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
மேலும் பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இந்த பழைய ஆதார் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் அனைத்தும் தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும்.

அதேபோல் உங்கள் ஆதார் அட்டையில் வரும் 2025 ஜூன் 14-ம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்தால் ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதல் செலவாகலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
முன்பு ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் கடைசி தேதி என்று இதற்கு 2024 டிசம்பர் 14- ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதாவது தற்போது ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள 2025 ஜூன் 14-ம் தேதி தான் கடைசி நாள் ஆகும்.


Click it and Unblock the Notifications








