ஆதார் செயலியில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி? இதோ வழிமுறைகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் ஆதார் (Aadhaar) என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் வங்கிச் சேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஆவணமாக உள்ளது. குறிப்பாக அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் முன்பு நாம் ஆதார் அப்டேட் செய்யவேண்டும் என்றால் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இனி ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் செயலியை (Aadhaar app) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஆதார் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக இந்த ஆதார் செயலி ஆனது பாதுகாப்பானதாகவும், நாம் அன்றாடம் எளிமையாகப் பயன்படுத்துவதற்குத் தகுந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் எண், முகவரி அப்டேட் தவிர பல்வேறு முக்கிய வசதிகளும் இந்த ஆதார் செயலியில் உள்ளன. அதாவது ஹோட்டல்கள் போன்ற இடங்களுக்கு நாம் ஆதார் நகலை வழங்குகிறோம். இனி இந்த ஆதார் செயலி வாயிலாகவே, உங்களது ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளும் வகையில், இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் ஆதார் செயலியில் உங்கள் ஆதார் தகவல்களை யாரெல்லாம் அணுகலாம் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் எந்தெந்த தகவல்களை மட்டும் நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்பதை இனி நீங்களே முடிவு செய்யலாம். மேலும் இதில் உள்ள பிரைவசி கண்ட்ரோல் என்ற சேவையைப் பயன்படுத்தி என்னென்ன தகவல்களை யாரிடம் பகிரலாம் என்பதை நீங்கள் லாக் செய்து கொள்ள முடியும்.
இந்த ஆதார் செயலி ஆனது உங்கள் கண் கருவிழி, கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை எந்தெந்த சேவைகளுக்கு வழங்கலாம் எதற்கெல்லாம் வழங்கக் கூடாது என்பதையும் லாக் செய்யக்கூடிய வசதியை வழங்குகிறது. குறிப்பாக இந்த செயலியில் பயோமெட்ரிக் லாக் என்ற வசதி உள்ளது. இதை எப்போது வேண்டும் என்றாலும் லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் இந்த ஆதார் செயலி வாயிலாக நீங்கள் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக ஒரே ஆதார் செயலிக்குள் பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சரி இப்போது இந்த ஆதார் செயலியில் முகவரி, மொபைல் எண் மாற்றுவது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை-2: அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும்.
வழிமுறை-3: அடுத்து ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க வேண்டுமா அல்லது முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் தோன்றும்.

வழிமுறை-4: இப்போது நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்
வழிமுறை-5: ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும். இதே போன்று தான் முகவரி மாற்றுவதும், முகவரி மாற்றுவதற்கான சான்றை உள்ளிட வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








