கூகுள் பே UPI பின் நம்பர் மாற்றுவது எப்படி? என்னென்ன தேவை.. இதோ சிம்பிள் டிப்ஸ்..
இந்தியா முழுவதும் அதிக மக்கள் கூகுள் பே (Google Pay) செயலியைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேடிஎம், போன்பே போன்ற செயலிகளைப் பல அசத்தலான சேவைகளை வழங்குகிறது கூகுள் பே. எனவே தான் இந்த செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
அதேபோல் கூகுள் பே, பேடிஎம், போன்பே செயலிகளில் யுபிஐ பின் நம்பர் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பாகப் பணப்பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பாக மற்றவருக்குப் பணம் அனுப்பும் முன் இந்த யுபிஐ பின் (upi pin) நம்பர் கொடுத்தால் தான் பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை உங்கள் கூகுள் பேவின் யுபிஐ பின் நம்பர் மறந்துவிட்டால், கூகுள் பே ஓப்பன் செய்து பேங்க் அக்கவுண்ட்டை தேர்வு செய்தபின் forgot upi pin எனும் விருப்பம் தெரியும், அதை கிளிக் செய்து உங்கள் டெபிட் கார்டின் விவரங்களைக் கொடுத்து கூகுள் பே பின் நம்பரை ரீ-செட் செய்யலாம். அதேசமயம் உங்களுக்கு யுபிஐ பின் நம்பர் தெரியும், ஆனால் அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் ஒரு சில வழிமுறைகள் உள்ளன.
வழிமுறை-1: முதலில் கூகுள் பே ஓப்பன் செய்து ப்ரொபைல் ஐகான் கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து Bank Account எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது பேங்க்
அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3: அதன்பின்பு கூகுள் பே வலது மேல் பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஆப்ஷனை தேர்வு செய்யவும். அங்கு Change UPI PIN எனும் விருப்பம் தெரியும். அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-4: அதன்பின்னர் உங்களது பழைய யுபிஐ பின் நம்பர் கொடுக்க வேண்டும். அடுத்து நீங்கள் மாற்ற நினைக்கும் புதிய யுபிஐ பின் நம்பர் கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் இப்போது உங்கள் புதிய பின் நம்பர் கொடுத்து மற்றவர்களுக்குப் பணத்தை அனுப்ப முடியும்.
அதேபோல் கூகுள் பேவில் தற்போது யுபிஐ லைட் வசதியை அதிக மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த யுபிஐ லைட்-ல் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து ரீச் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக இதில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வங்கி சர்வர் சரியில்லை என்றாலும் இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கொள்ள முடியும். அதுவும் இந்த UPI lite வசதியில் அதிகபட்சமாக ரூ.2000 வரை ரீச் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு தடவைக்கு 2000 என ஒரு நாளைக்கு 4000 வரை உபயோகம் செய்து கொள்ள முடியும்.

குறிப்பாக இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் 500 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்டு பின் தர தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பணப் பரிமாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. குறிப்பாக இந்த யுபிஐ லைட் சேவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் கூகுள் பே செயலியில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 9 லட்சம் வரை கடன் வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கப் பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூகுள் பே. இதன் மூலமாகக் கடன் பெறலாம். அதுவும் கூகுள் பே நேரடியாகக் கடன்களை வழங்காது. எனவே இதனால் வாடிக்கையாளர்கள் கடன் பெறும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடன்பெற விருப்பம் உள்ள பயனர்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் கடன் (get loan) என்ற விருப்பம் இருக்கும் அதை தேர்வு செய்து தேவையான விவரங்களைக் கொடுத்து கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications








