உங்கள் ஆதாரில் கட்டணமின்றி முகவரி மாற்றுவது எப்படி? இதோ வழிமுறைகள்..
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவையைப் பெற ஆதார் (Aadhaar) அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. குறிப்பாக வங்கி சேவை முதல் புதிய சிம் கார்டு வாங்குவது அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுகிறது. இந்நிலையில் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டில் உங்கள் தகவல்கள் தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 10 வருட பழமையான ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள், சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது. அதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் உங்களுடைய விவரங்கள் மாறி இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய செல்போன் நம்பர் மாறி இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் இன்னொரு வீட்டிற்கு மாறி இருப்பீர்கள். அப்போது உங்களின் முகவரி மாறி இருக்கும். எனவே தான் UIDAI பத்து ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் இருக்கும் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறது.

அதேபோல் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஆதாரில் பிழைகள் இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சில சலுகைகள் மற்றும் உதவிகள் கிடைக்காது. இந்நிலையில் ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை டிசம்பர் 14-ம் தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் இப்போது ஆதாரில் முகவரியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் myaadhaar.uidai.gov.in என்ற ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதன்பின்பு உங்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து உள்நுழையவும். அடுத்து உங்கள் ஆதாரில் பிழை அல்லது மாற்றம் செய்ய வேண்டியது இருந்தால் அவற்றை மாற்றலாம். உதாரணமான வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறி இருந்தால், முகவரியை மாற்றி கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணத்தை JPEG, PNG மற்றும் PDF ஃபார்மேட்டுகளில் அப்லோட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீங்கள் அப்லோட் செய்ய வேண்டிய பைல்கள் 2எம்பிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். அதாவது ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும்.
அதேபோல் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், அதன்பின்பு வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், இதுதவிர உங்கள் பான் கார்டு வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








