இனி ரயில் டிக்கெட் கேன்சல் செய்வது ஈஸி.. பணம் திரும்ப கிடைக்கும்.. யூடிஎஸ் செயலி இருக்கா? இதோ வழிமுறைகள்..
இந்தியாவில் யூடிஎஸ் செயலி (UTS App) மூலம் பிளாட்பாம் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட், மாதாந்திர டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் ஆகியவற்றை உடனே பெறமுடியும். இதுதவிர யூடிஎஸ் செயலி மூலம் எடுத்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்துகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது யூடிஎஸ் செயலியில் ரயில் டிக்கெட் எப்படி கேன்சல் செய்ய முடியும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தைப் பயன்படுத்தித் தொலை தூரங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறோம். அதேபோல் முன்பதிவில்ல டிக்கெட்டுகளை இந்த யூடிஎஸ் செயலி மூலம் பயணிகள் எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த செயலியில் லோக்கல் ரயிலுக்கான டிக்கெட்டுகளை (rail ticket) எடுக்க முடியும் என்பதால் அதிக மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

முன்பு நீண்ட நேரம் வரிசையில் நின்றே மக்கள் ரயில் ஓபன் டிக்கெட்களை வாங்கும் நிலைமை இருந்தது. ஆனால் தற்போது அந்த அவசியம் இல்லை. அதாவது வீட்டில் இருந்தபடியே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு நேராக ரயிலில் ஏறி சென்று விடலாம். அதேபோல் இந்த யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச தூர வரம்பு 20 கி.மீ இருந்தது. ஆனால் தற்போது இந்த லிமிட் எல்லாம் கிடையாது எங்கிருந்தும் வேண்டுமானாலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
குறிப்பாக இந்த யூடிஎஸ் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இரண்டு வகையில் எடுக்கலாம். அதன்படி பேப்பர்லெஸ் டிக்கெட், பேப்பர் டிக்கெட் என இரண்டு வகைகள் உள்ளன. அதன்படி பேபபர்லெஸ் (paperless) டிக்கெட் என்றால் டிக்கெட்டை எடுத்த பின்பு தனியாக பிரிண்ட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது யுடிஎஸ் செயலியை ஓபன் செய்தால் டிக்கெட்டை பார்க்க முடியும். இந்த டிக்கெட்டை டிடிஆர் கேட்க்கும் போது காண்பிக்கலாம்.
பேப்பர் டிக்கெட் (paper ticket) என்றால் யூடிஎஸ் செயலியில் டிக்கெட் எடுத்தாலும்கூட ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கு உள்ள தனியாங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்திலோ அல்லது கவுண்டரிலோ காட்டி டிக்கெட் பிரண்ட் செய்துகொள்ளலாம். எனவே இப்படி பிரிண்ட் செய்த டிக்கெட் கைவசம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதைக் கவனமாக வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல் பேப்ர்லெஸ் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. ஆனால் பேப்பர் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். அதாவது நீங்கள் இந்த செயலியில் டிக்கெட் புக் செய்துவிட்டு வேண்டாம் என்று நினைத்தால், மெஷினில் பிரிண்ட் செய்யும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளலாம்.
ஒருவேளை டிக்கெட்டை இயந்திரத்தில் பிரிண்ட் செய்து விட்டால் ஒரு மணி நேரத்திற்குள் கவுண்டரில் கொடுத்து கூட ரத்து செய்து கொள்ளலாம். ஆனால் இந்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் கையில் கிடைக்காது. ரயில்வே வேலட்டில் தான் ரிஃபண்ட் செய்யப்படும்.

குறிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்த, யூடிஎஸ் செயலியில் பேப்பர் டிக்கெட் புக் செய்த பயணிகள் கேன்சல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நீங்கள் எடுத்த டிக்கெட் கேன்சல் செய்ய உகந்ததா என்பதைக் காட்டும். அதாவது ரூ.30-க்கு குறைவான விலையில் டிக்கெட் எடுத்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.
எனவே ரூ.30 ரூபாய்க்கும் மேல் உள்ள டிக்கெட் என்றால் மட்டுமே கேன்சல் செய்ய முடியும். கேன்சல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் பாப் அப் ஒன்ற திரையில் தோன்றும். அதில் எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்ற விவரம் தெரிய வரும். குறிப்பாக இந்த வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








