நம்ப முடியாத விலையில் OnePlus 9 5G வாங்க வாய்ப்பு.. ரூ.12,000க்கு மேல் தள்ளுபடி.. இப்படி செய்தால் உடனே வாங்கலா

|

ஒன்பிளஸ் நிறுவனத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 9 தொடரின் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றான OnePlus 9 5G ஸ்மார்ட் போன், இப்போது நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், நிறுவனம் பட்டியலிட்டுள்ள புதிய விலையைப் பார்த்தால், நீங்களே ஷாக்காவீர்கள். ஆம், நம்ப முடியாத அளவிற்கு இப்போது ஒன்பிளஸ் 9 5ஜி சாதனத்தின் விலை குறைந்துள்ளது. இந்த புதிய சலுகையின் மூலம் ரூ.12,000திற்கும் மேலாக நீங்கள் மிச்சம் பிடிக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சிறந்த ஒப்பந்தத்தை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.

நம்ப முடியாத விலையில் OnePlus 9 5G

நம்ப முடியாத விலையில் OnePlus 9 5G

இந்த சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது அதன் இணையதளத்தில் வெறும் ரூ. 37,999 என்ற விலைக்குப் பட்டியலிட்டுள்ளது. இந்த சாதனம் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ​​இதன் அடிப்படை மாடலின் விலை ரூ.49,999 என்ற விலைக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய அப்டேட் விலையின் படி, இந்த சாதனம் அதன் அசல் விலையை விட ரூ.12,000 தள்ளுபடி உடன் கிடைக்கிறது. சரி, இப்போது இந்த சலுகையுடன் கிடைக்கும் சில கூடுதல் சலுகையையும் எப்படி பெறுவது என்று தெரிந்துகொள்ளலாம்.

கூடுதல் சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கூடுதல் சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்தியாவில் OnePlus 9 5G விலை மற்றும் சிறந்த சலுகையை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள், OnePlus 9 5G இப்போது இந்தியாவில் ரூ. 37,999 என்ற விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. ஆனால், பயனர்கள் சிட்டி கார்டு வைத்திருந்தால், அவர்கள் வாங்கியதில் இருந்து கூடுதலாக 10% தள்ளுபடி பெறவும் தகுதியுடையவர்களாகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கா எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கு 10% கேஷ்பேக் சலுகையும் பொருந்தும். பஜாஜ் ஃபின்சர்வ் EMI கார்டுகளுடன், பயனர்கள் ஆறு மாதங்கள் வரை கட்டணமில்லா EMIஐப் பெறலாம்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

ரூ. 30,000க்குள் புதிய OnePlus 9 வாங்க என்ன செய்ய வேண்டும்?

ரூ. 30,000க்குள் புதிய OnePlus 9 வாங்க என்ன செய்ய வேண்டும்?

இந்தச் சாதனத்தில் 10% தள்ளுபடி (ரூ. 3799) என்றால் அதன் விலை இன்னும் கணிசமாகக் குறைந்து ரூ. 35,000 என்ற விலைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. இதற்கு மேல், ஒன்பிளஸ் பயனர்கள் தங்கள் பழைய சாதனங்களை புதிய சாதனங்களுக்கு மாற்றவும் அனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. எனவே, உங்களின் தற்போதைய ஸ்மார்ட்போன் செயல்படும் நிலையில் இருந்தால், OnePlus 9 இன் விலையை ரூ. 30,000க்குள் குறைக்க நீங்கள் நிச்சயமாக அதை மாற்றிக்கொள்ளலாம். OnePlus 9 ஐ வாங்கும் போது பயனர்களுக்கு ஆறு மாத Spotify பிரீமியம் இலவசமாகக் கிடைக்கிறது.

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..

இதுவரை கிடைக்காத மிகக் குறைந்த விலையில் OnePlus 9 5G

இதுவரை கிடைக்காத மிகக் குறைந்த விலையில் OnePlus 9 5G

OnePlus 9, தற்போது ரூ.37,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் உங்களுக்கு ஒன்பிளஸ் 9 5ஜி சாதனத்தின் 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் வாங்குவதற்குக் கிடைக்கிறது. அதேபோல், ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி மற்றும் 256ஜிபி மாடல் இப்போது வெறும் ரூ.42,999 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. இத்துடன், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகையை நீங்கள் பயன்படுத்தினால், இதுவரை கிடைக்காத மிகக் குறைந்த விலையில் OnePlus 9 5G போனை நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

ஏன் OnePlus 9 5G இன்னும் நல்ல ஒப்பந்தமாக உள்ளது?

ஏன் OnePlus 9 5G இன்னும் நல்ல ஒப்பந்தமாக உள்ளது?

OnePlus 9 நான்கு ஆண்டுகளுக்கு மூன்று முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகளைப் பெறும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன் பொருள் இது எதிர்கால ஆதார சாதனம் என்பதாகும். மேலும், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. இது இன்னும் பயனர்களுக்கு ஒரு முதன்மை ஆற்றல் அனுபவத்தை வழங்க கூடியது. OnePlus 9 தொடரின் கேமராவை Hasselblad சிறப்பாக அமைத்துள்ளது. ரூ. 30,000 விலைக்குள் இந்த சாதனத்தை நீங்கள் பெற முடிந்தால், நீங்கள் உண்மையிலேயே ஒரு நட்சத்திர ஒப்பந்தத்தைப் பெறுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Buy OnePlus 9 5G Under Rs 30000 With Best Deals : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X