டைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுபானக் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் என்ற எண்ணிக்கையோடு பெவ்க்யூ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெவ் க்யூ ஆப்
கேரள மாநிலத்தில் பல நாட்கள் காத்திருப்புக்கு பிறகு பெவ் க்யூ ஆப் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கேரளாவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களிலேயே 10000 பதிவிறக்கங்களை கடந்தது. இருப்பினும் பலர் ஓடிபி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செயததால் ஓடிபி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.

டோக்கன் வழங்கப்படுகிறது
பலருக்கு வாட்ஸ்அப் கிடைத்தாலும் பதிவை முடிக்க முடியவில்லை. OTP ஐப் பெறுவதற்கான தொழில்நுட்பத் தடையே இதற்குக் காரணம். காலை ஆறுமணி முதல் மதுபானம் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டது.

ஆன்லைனில் ஆல்கஹால் ஆர்டர்
பெவ்க்யூ வரிசை பயன்பாட்டின் மூலம் ஆன்லைனில் ஆல்கஹால் ஆர்டர் செய்வது வீட்டிற்கு வராது. இது ஒரு டோக்கன் அமைப்பு மட்டுமே. விற்பனை நிலையங்களில் நெரிசலைக் குறைக்க இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த செயலி 23 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது
பெவ்க்யூ ஆப் மூலம் விக்யூஎம் என்ற சிஸ்டம் முறையில் பதிவு செய்து இடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயலியானது மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் பெவ்க்யூ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
பெவ்க்யூ என்பது நம்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் போல் அங்கிருக்கும் டாஸ்மாக் நிறுவனமாகும், கொச்சியை தளமாகக் கொண்ட ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் BevQ ஆப்பை உருவாக்கியுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம்
இந்த ஆப் மூலம் 35 லட்சம் பேர் முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் வாங்க முடியும். மேலும் இந்த செயலி மூலம் 5 பேர் மட்டுமே மதுபானக் கடையில் வரிசையில் நிற்க வைக்க முடியும், அதேபோல் 1 மணி நேரத்துக்கு 50 பேர் மட்டுமே மதுக்கடையில் நிற்க வைக்க முடியும்.

ஐஓஎஸ் ஆப் குறித்து எந்த தகவலும் இல்லை
BevQ பயன்பாடு இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் நேரலையில் உள்ளது, இருப்பினும், அதை Google Play Store இல் 'ksbcvirtualq' என்ற முக்கிய சொல்லை தட்டச்சு செய்தபிறகு தோன்றும் மூன்றாவது விருப்பத்திற்குச் செல்லுமாறு மனோரமா ஆன்லைன் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் இது ஐஓஎஸ் ப்ளே ஸ்டோரில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இ டோக்கன் இருந்தால் மட்டுமே மதுபானம்
இந்த ஆப் ஓபன் செய்தவுடன், அதன்பின் பின்கோட், பெயர் மற்றும் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும், அதன்பின் பதிவிட்ட நம்பருக்கு ஓடிபி வரும் அதை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் இடோக்கன், நேரம் மற்றும் க்யூ ஆர் கோட் வரும், அதை காண்பித்து மதுபானக் கடைகளில் அந்த நேரத்திற்கு சென்று மதுவாங்கலாம். இதில் 551 பார்கள், 260 பீர் மற்றும் ஒயின் பார்லர்களுக்கு அரசு பானங்கள் கழகம் (பெவ்கோ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
source: indiatvnews.com


Click it and Unblock the Notifications








