லக் இருந்தா இது உங்களுக்கு தான்: ரூ.50,000 கீழ் குறைந்த விலையில் iPhone 13 வாங்குவது எப்படி?

|

ரூ.69,900 என விற்கப்பட்டு வந்த ஐபோன் 13 தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ரூ.56,990 என விற்பனைக்கு கிடைக்கிறது. இது தற்போதைய நிலவரம் தான், இந்த விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. காரணம் நேற்றைய நிலவரப்படி பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் இந்த ஐபோன் 13 ரூ.50,990 என விற்கப்பட்டது.

ஐபோன் 13 தள்ளுபடி விலை

ஐபோன் 13 தள்ளுபடி விலை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை 2022இல் ஐபோன் 13 மாடலுக்கான தள்ளுபடி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

ஐபோன் 13 மாடல் நேற்றே இரண்டு வெவ்வேறு விலையில் விற்கப்பட்டது. ரூ.50,990 என்ற விலையில் விற்கப்பட்டதற்கு முன்னதாக ரூ.47,990 என விற்பனைக்கு கிடைத்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மீண்டும் ஐபோன் 13 விலை குறையலாம்..

மீண்டும் ஐபோன் 13 விலை குறையலாம்..

ஐபோன் 13 தள்ளுபடியில் பிளிப்கார்ட் சற்று விளையாட்டுக்காட்டி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஆம், பிளிப்கார்ட்டில் ரூ.47,990 என்ற விலைப்பிரிவில் ஐபோன் 13ஐ வாங்க திட்டமிட்டால் நீங்கள் பிளிப்கார்ட் தளத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

காரணம் மீண்டும் ஐபோன் 13 விலை ரூ.47,990 என குறையலாம். குறையாமலும் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விலை குறையாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்வி வரலாம், பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தும், வங்கி சலுகைகளை பயன்படுத்தியும் ஐபோன் 13 மாடலை குறைந்த விலையில் வாங்கலாம்.

சிறந்த தள்ளுபடியில் வாங்குவது எப்படி?

சிறந்த தள்ளுபடியில் வாங்குவது எப்படி?

ரூ.47,990க்கு ஐபோன்13 விலை குறைக்கப்படும் பட்சத்தில் இதன் ஸ்டாக் விரைவில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலையை சோதித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இது கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. மறுபுறம் அமேசானும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022ஐ நடத்தி வருகிறது. இதில் ஐபோன் 13 மாடலுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில்..

பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில்..

இரண்டு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் பண்டிகை கால விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைவருக்கும் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன், ஐபோன் மட்டுமில்லை ஸ்மார்ட்டிவிகள், லேப்டாப்கள், டேப்லெட் என கேட்ஜெட்களில் தொடங்கி பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன.

இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது.

வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது.

எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது.

நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

சிறந்த பேட்டரி ஆதரவு..

சிறந்த பேட்டரி ஆதரவு..

ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது.

ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
How to Buy iPhone 13 at Rs.47,990 in Flipkart Big Billion Days sale?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X