ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

|

உங்களுக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கிறதா? ஒரு முறையாவது ஐபோனின் அனுபவத்தை அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், இந்த ஆண்டு தான் உங்களுக்கான மிகச் சரியான நேரம். காரணம், இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் Amazon Great India Festival Sale விற்பனையில் மிகவும் குறைந்த விழியில் புது iPhone 12 மாடல்களை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிரடியாக விலை குறைக்கப்பட ஐபோன் 12 மாடல்கள்

அதிரடியாக விலை குறைக்கப்பட ஐபோன் 12 மாடல்கள்

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 தொடரை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் விலையை நிறுவனம் இப்போது குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, தற்போது, ஐபோன் 12 மாடலின் ​பேஸ் வேரியண்ட் மாடலான 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலை நீங்கள் ரூ.59,900 என்ற விலையில் வாங்கலாம். இதேபோல், 128ஜிபி ஸ்டோரேஜ் மாடளை ரூ.64,900 விலையில் வாங்கலாம். இது ஆப்பிள் அறிவித்துள்ள பொதுவான விலையாகும்.

Amazon Great India Festival sale மூலம் நம்ப முடியாத வாய்ப்பு

Amazon Great India Festival sale மூலம் நம்ப முடியாத வாய்ப்பு

ஆனால், அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் Amazon Great India Festival sale மூலம் முதல் ஐபோனை வாங்க சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் படி, ஐபோன் 12 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் மாடலின் மீது மிகப்பெரிய விலை வீழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் உள்ள ஒரு போஸ்டர் ஐபோன் 12 மாடலை ரூ. 40,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் என்பதைப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், சரியான விலை விவரங்கள் தெளிவாக இல்லை.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

ரூ. 30,000 விலையில் நீங்கள் புது ஐபோன் 12 வாங்க முடியுமா?

ரூ. 30,000 விலையில் நீங்கள் புது ஐபோன் 12 வாங்க முடியுமா?

செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ​​இ-காமர்ஸ் தளம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன் 12 மாடலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றக்கூடிய கூடுதல் விற்பனை சலுகைகளை அறிவிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட சில வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன், iPhone 12 மாடலின் 128GB வேரியண்ட்டை ரூ. 30,000 விலையில் நீங்கள் வாங்க முடியும்.

ஐபோன் 12 சாதனத்தின் 64ஜிபி மாடலை ஏன் வாங்க கூடாது?

ஐபோன் 12 சாதனத்தின் 64ஜிபி மாடலை ஏன் வாங்க கூடாது?

ஐபோன் 12 சாதனத்தின் பேஸ் வேரியண்ட் மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றாலும் கூட, இது ஒரு சிறந்த தேர்வாக இருக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 2022 இல் 64 ஜிபி ஸ்டோரேஜ் உண்மையில் போதுமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆப்பிள் நிறுவனமே அதன் சமீபத்திய தலைமுறை ஐபோன் தொடர்களில் 64ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 12 மாடலை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

iPhone 12 மாடலை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

ஆனால், வாடிக்கையாளர்கள் இரண்டு வருடப் பழைய iPhone 12 மாடலை நம்பி வாங்கலாமா என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஐபோன் 12 மாடலை வாங்குவது சிறந்ததா அல்லது புதிய iPhone 13 / iPhone 14 ஐ வாங்க வேண்டுமா என்று பல கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். இன்னும் சிலர் iPhone SE (2022) மாடலை கூட வாங்க ஆசைப்படலாம். எளிமையாகச் சொன்னால், iPhone SE (2022) ஒரு சக்திவாய்ந்த சிப்செட்டைக் கொண்டுள்ளது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

புதிய ஐபோன் 14 இல் உள்ள அனைத்தும் ஐபோன் 12 இல் உள்ளதா?

புதிய ஐபோன் 14 இல் உள்ள அனைத்தும் ஐபோன் 12 இல் உள்ளதா?

ஆனால், இது மிதமான தேவைகளைக் கொண்ட பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது. இது நார்மல் யூசர்கள் அல்லது வயதான பெற்றோருக்கு ஒரு சிறந்த டிவைசாக அமையும். ஐபோன் 12 சற்றே அதிக தேவை உள்ள பயனர்களுக்கு போதுமானது. ஆனால், இது இரண்டு ஆண்டுகளில் புதிய iOS அப்டேட்டை நிறுத்திவிடும் என்பதனால் சிலர் தயக்கம் கொள்கிறார்கள். இருப்பினும், இதில் 5G, OLED டிஸ்ப்ளே, டூயல் கேமரா, MagSafe சார்ஜிங் என்ற புதிய ஐபோன் 14 இல் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Buy iPhone 12 Under Rs 40000 During Amazon Great India Festival Sale September 23 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X