Just In
- 9 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 11 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 12 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- News
கம்மி 'சீட்'.. நாம தான்யா காரணம்.. அவங்கள குறை சொல்லி யூஸ் இல்ல - ப.சிதம்பரம் சுளீர் பேச்சு
- Movies
ஓய்வின்றி உழைக்கிறேன்...தலைவிக்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கங்கனா
- Finance
எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!
- Sports
ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
- Automobiles
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது சுங்கச்சாவடியில் நீண்ட வரிசைகளில் நீங்கள் காத்திருப்பது என்பது சற்று எரிச்சலை உருவாக்கக்கூடிய விஷயம் தான். அதுவும், குறிப்பாக நீங்கள் வார இறுதி பயணத்தில் இருக்கும்போது இந்த எரிச்சல் இரட்டிப்பாக மாறக்கூடும். இந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்திய அரசு சமீபத்தில் கட்டாய ஃபாஸ்டேக் பயன்முறையை அறிமுகம் செய்தது.

ஃபாஸ்டேக் என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இப்போது இந்த சேவையை இந்தியாவின் ஒவ்வொரு பெரிய வங்கியும்
வழங்கிவருகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணத்தைச் செலுத்தி டோல் கேட்டை எளிதாகக் கடந்து செல்ல முடியும். மேலும், கட்டணம் உங்கள் ஃபாஸ்டாக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

இதுவரை நீங்கள் ஃபாஸ்டாக் எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுத்துவிடுவது நல்லது. அதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை, வீட்டில் உட்கார்ந்துகொண்டே அதை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி இந்த அசத்தலான வசதியை தொடங்கியுள்ளது.
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?

வாட்ஸ்அப் செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். பல வங்கிகள் தங்களது வங்கிச் சேவைகளை வாட்ஸ்அப்-ல் கொண்டுவந்துள்ளன. அதன்படி இப்போது ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் ஆப் மூலம் ஃபாஸ்டாக் வாங்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. இதை வாங்கும் வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் உங்களது வாட்ஸ்அப் செயலியில் இருந்து 8640086400 என்ற எண்ணுக்கு hi என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

வழிமுறை-2
அடுத்து அதில் வரும் ஆப்சன்களில் 3 என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ICICI Bank FASTag servicesஎன்பதைக் குறிக்கும்.

வழிமுறை-3
அதன்பின்னர் மீண்டும் ஒருமுறை 3 என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இது Apply for a new tag என்பதாகும்.

வழிமுறை-4
உடனே உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும், அது ஐசிஐசிஐ ஃபாஸ்டாக் அப்ளிகேசன் பக்கத்துக்குச்
செல்லும். அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வழிமுறை-5
அதன்பின்பு பாஸ்டாக்குக்கான கட்டணத்தைச் செலுத்தினால் உங்களது ஆர்டர் ஏற்கப்பட்டு, உங்களது முகவரிக்கு ஃபாஸ்டாக் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் நீங்கள் ஃபாஸ்டாக் வாங்கிய பிறகு நெட் பேங்கிங் யூபிஐ போன்றவற்றின் மூலமாக அதற்கான தொகையை எளிமையாக செலுத்தலாம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190