உங்களுக்கான சரியான Laptop எது? பிராசஸர் CODE பார்த்து எப்படி வாங்குவது? இது மட்டும் தெரிஞ்சா போதும்.!
எந்த ஒரு சாதனத்தையும் நாம் வாங்கும் போது, நம்முடைய தேவை என்ன என்பதனை கண்டறிந்து அவற்றை வாங்க வேண்டும்.. நமது தேவையை பூர்த்தி செய்யும் அம்சங்கள் அதில் உள்ளதா என்பதை நன்கு ஆராய வேண்டும்.. இப்படி பார்த்து-பார்த்து வாங்குவது தான் பயனளிக்கும்.
பார்த்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் நம்மிடம் அதிகமாக இருந்தாலும் கூட, எதைப் பார்த்து வாங்க வேண்டும் என்ற புரிதல் நம்மிடம் குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நமது மனம் தயக்கம் காட்டினாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மை இது தான். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூச்சப்படாமல், ஆர்வம் இருந்தால் போதும், நாம் நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

எப்படி உங்களுக்கான சரியான லேப்டாப் சாதனத்தை தேர்வு செய்வது? சூட்சுமம் இது தான் மக்களே.!
புதிய ஒரு தகவலை புரிந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு பதிவு தான் இந்த கட்டுரை, இதை நீங்கள் முழுமையாக படித்து முடிக்கும் போது, எப்படி சரியான ஒரு லேப்டாப்பை (Laptops) தேர்வு செய்வதென்ற ஞானத்தை நீங்கள் பெற்றுவிடுவீர்கள். இனி உங்கள் வட்டாரத்தில் யாராவது புது லேப்டாப் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், இந்த பயனுள்ள தகவலை நீங்கள் அவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். அடுத்து உங்களை ஒரு ப்ரோ நபராக எல்லாம் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் வேலைக்கு செல்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு மின்னணு சாதனம் என்றால் அது லேப்டாப் (Laptop) தான். முந்தைய காலத்தில் IT துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே லேப்டாப்பை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போதோ பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் லேப்டாப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.
ஆனால், ஒவ்வொருவரின் தேவையும் இங்கு வேறு மாதிரியாக இருப்பதனால், லேப்டாப்கள் பல வகைகளில் (Laptop types) வாங்க கிடைக்கின்றன. இதில் உங்களுக்கான சரியான லேப்டாப் சாதனத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் (How to select best laptop) என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம். உதாரணமாக, பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு (How to select best laptops for students), ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பதற்கும், பாடம் தொடர்பான ஆவணங்களை உருவாக்குவதற்கும் லேப்டாப்கள் தேவைப்படுகிறது.

எந்த பிராசஸர் லேப்டாப்பை வாங்குவது சிறந்தது? லேப்டாப் பிராசஸர் CODE விபரம் என்ன சொல்கிறது?
அதுவே திரை மற்றும் மீடியா துறையில் வேலை செய்பவர்களுக்கு, எடிட்டிங் செய்வதற்கான சாஃப்ட்வேர்களை பயன்படுத்த லேப்டாப் தேவைப்படுகிறது (how to choose best laptop for media profession). அத்தகைய சாப்ட்வேர்களை இயக்க மேம்பட்ட அம்சங்கள் கொண்ட லேப்டாப்புகள் தேவைப்படும். இன்றைய காலகட்டத்தில் யூட்யூப் (Youtube) மூலம் பாமர மக்களும் வருமானம் ஈட்ட ஆரம்பித்து விட்டனர். பல மேம்பட்ட கேம்களை (Game) விளையாடி அதனை வீடியோவாக பதிவு செய்து, யூட்யூபில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பலர் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அதேபோல மேம்பட்ட சாஃப்ட்வேர்களை (Software) இயக்கவும் அட்வாண்ஸ்டு (Advanced) லேப்டாப்புகள் தேவைப்படும். இவ்வாறு ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப, வெவ்வேறு அம்சங்கள் கொண்ட பல வித்தியாசமான லேப்டாப்களை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இவை ப்ராசசரை (Processor) வடிவமைப்பதன் மூலம் வேறுபடுகின்றன. அதாவது உங்கள் லேப்டாப்பின் CPU-வின் தன்மையைக் கொண்டே அதன் திறன் எப்படி உள்ளது என்பதை நாம் கண்டறிய முடியும்.
பொதுவான விண்டோஸ் லேப்டாப்புகளின் ப்ராசசர் இன்டெல் (Intel) நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும். ஒவ்வொரு லேப்டாப்பிற்கும் அதன் சிபியு வின் திறனைப் பொறுத்து ஒரு கோட் (Code) ஒதுக்கப்பட்டிருக்கும். அதன் கோடில் உள்ள i3, i5, i7 போன்றவை அதன் ஜெனரேஷனை (Generation) குறிக்கும். அதனை தொடர்ந்து வரும் ப்ராசஸரின் கோடில் XXXXY (Eg. 1234U) CPU என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

புது Laptop வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!
இதில் X எண்களாகவும் இறுதியில் இருக்கும் Y எழுத்தாகவும் இருக்கும். அந்த Yல் உள்ள எழுத்துதான் உங்கள் லேப்டாப்பின் செயல்திறனை குறிக்கும் கோடாகும். பொதுவாக இன்டெலின் ப்ராசசர்களில் U, P, H என்று மூன்று விதமான எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றில் U என்ற எழுத்து கொண்ட ப்ராசஸர்களால் உருவாக்கப்பட்டுள்ள லேப்டாப்கள் மைக்ரோசாப்ட் வேர்ட் (Word), எக்ஸெல் (Excel), அடோப் பிடிஎஃப் (Adobe PDF), இன்டர்நெட் மாதிரியான சாதாரண செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் வேரியண்டாகும்.
இந்த வகை லேப்டாப்புகளை மேம்பட்ட சாஃப்ட்வேர்களின் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். அடுத்ததாக P என்ற எழுத்து கொண்ட பிராசசர்களால் உருவாக்கப்பட்டுள்ள லேப்டாப்கள் போட்டோஷாப் (Photoshop), ப்ரோக்ராமிங் (Programming), சாதாரண வீடியோ எடிட்டிங் போன்ற பயன்பாடுகளுக்கான திறன்களைக் கொண்டவை. என்ன தான் இந்த P ரக ப்ராசஸர்கள் மேம்பட்ட திறனைக் கொண்டிருந்தாலும், இதனைப் பயன்படுத்தி அதிநவீன சாஃப்ட்வேர்களை இயக்க முடியாது.

U, P, H பிராசஸர் மாடல்களில் எது சிறந்தது? எது தரமானது? எது உங்களுக்கு சிறந்தது? இதோ உண்மை.!
இறுதியாக, H பிராசஸர்களால் உருவாக்கப்பட்டுள்ள லேப்டாப்புகள் அதிநவீன சாஃப்ட்வேர்களை சுலபமாக இயக்க பயன்படுபவை ஆகும். இந்த லேப்டாப்புகளை கேமிங் (Gaming), வீடியோ எடிட்டிங், கிராபிக் டிசைனிங் (Graphic Designing) மாதிரியான அதிக செயல்பாடுகள் கொண்ட அதிநவீன சாஃப்ட்வேர்களை இயக்க பயன்படுத்தலாம்.
உங்கள் லேப்டாப்பின் கோடை கண்டுபிடிக்க கண்ட்ரோல் பேனலின் (Control Panel) சிஸ்டம் அண்ட் செக்யூரிட்டி (System and security) என்ற தேர்வினுள் சென்று, சிஸ்டம் (System) என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ஆப்ஷன்களில் (Options) இறுதியாக இருக்கும் அபௌட் (About) என்பதனை செலக்ட் (Select) செய்தால் டிவைஸ் ஸ்பெசிஃபிகேஷன் (Device Specification) என்பதன் கீழ் உங்கள் ப்ராசசர் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
புதிதாக லேப்டாப் வாங்கத் திட்டமிட்டு இருப்பவர்கள், உங்களது தேவையை அறிந்து அதற்கான லேப்டாப்பை கண்டறிந்து பின்னர் வாங்கி பயனடையவும். புதிய தகவலைக் கற்றுக்கொள்வது மட்டும் சிறந்த விஷயமில்லை. அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் உண்மையிலேயே சிறந்த ஞானம் (Knowledge) ஆகும். ஆகையால், இந்த பதிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








