அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவில் புது ரூல்ஸ்.. இன்று முதல் அமல்.. சிறப்பு பரிசு.. புக்கிங் செய்ய வழிமுறைகள்!
வெளியூருக்கு செல்ல நினைக்கும் மக்களின் முதல் விருப்பம் ரயில் என்றால், இரண்டாவது விருப்பம் பஸ் தான். ஆனாலும் ஆம்னி தனியார் பேருந்துகளில் செல்ல கட்டணம் அதிகமாக இருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் (TNSTC) பயணம் செய்ய மக்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்த அரசு பேருந்துகளுக்குக் கடைசி நேரத்தில் டிக்கெட்டிற்காக நிற்காமல் முன்னரே பதிவு செய்துகொள்ளலாம்.
அதாவது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல 60 நாட்களுக்கு முன்பு தான் புக் செய்ய முடியும். ஆனால் தற்போது இந்த 60 நாட்கள், 90 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாற்றம் இன்றிலிருந்து மதியம் 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது அரசு பேருந்து டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது என்ற வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து எங்கிருந்து கிளம்ப வேண்டும்? மற்றும் எங்கு செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
வழிமுறை-2: அதன்பின்பு எந்த தேதியில் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது திரும்பவருகிறீர்கள் என்பதையும் பதிவு செய்து 'Search Bus' கிளிக் செய்யவும். அடுத்து உங்களுக்குத் தகுந்த கட்டணம், கிளம்பும் நேரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தோதான பேருந்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
வழிமுறை-3: அடுத்து சீட் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மொபைல் எண், மெயில் ஐடி, அடையாள அட்டை எண் ஆகியவற்றை கொடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் கார்டு பேமெண்ட் அல்லது யுபிஐ பேமெண்ட் என இரண்டில் எதாவது ஒன்றைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தி எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக வார நாட்களில் பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமான புக்கிங் செய்து செல்லும் பயணிகளுக்கு மாதம் தோறும் குலுக்கல் முறையில் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
அதாவது மாதாந்திர குலுக்கலில் முதல் மூன்று பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக நவம்பர் 21 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை அரசு பஸ்சில் முன்பதிவு செய்யப்படும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் முதல் பரிசாக பைக், இரண்டாவது பரிசாக எல்.இ.டி ஸ்மார்ட் டிவியும், மூன்றாவது பரிசாக ஃபிரிட்ஜும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிநவீன பேருந்துகளை தங்களின் சேவையில் இணைத்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை மேலும் கவரும் விதமாக தற்போது குலுக்கல் பரிசு திட்டத்தையும் அறிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








