Home
News

WhatsApp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? இதோ முழு விவரம்.!

வாட்ஸ்அப் செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதேபோல் பல முக்கிய சேவைகள் வாட்ஸ்அப் இல் கிடைப்பதால், டெலிகிராம் செயலியை விட வாட்ஸ்அப் செயலியைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் (சிஎம்ஆர்எல்) சேவையைப் பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த புதிய வசதி கண்டிப்பாக பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

WhatsApp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? இதோ முழு விவரம்

அதேபோல் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை எடுப்பது எப்படி எனச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் போனின் திரையில் தோன்றும், அதாவது பயனர்கள் டெபிட் கார்டு, கிரெடிட்டி கார்டு, கூகுள் பே போன்ற சேவைகளைப் பயன்படுத்தி எளிமையாகப் பணம் செலுத்தலாம். குறிப்பாக இந்த வசதியின் மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது எப்போதாவது பயணம் செய்பவருக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

WhatsApp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? இதோ முழு விவரம்

மெட்ரோ ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின்பு ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது இந்த வரிசையில் வாட்ஸ்அப் இ-டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மேலும் கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ-டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல் வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் ஒரு புதிய அம்சத்தை வழங்க உள்ளது. அதாவது WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. குறிப்பாகக் கூகுள் பிளே திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், இதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த புதிய அம்சம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பயனர்கள் எளிமையாகச் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டுத் தேட முடியும்.

WhatsApp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? இதோ முழு விவரம்

தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த புதிய அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் கூட வெளியாகி உள்ளன. அதாவது பயனர்கள் செட்டிங்ஸ் பகுதியின் மேற்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் உங்களின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். மேலும் பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்ந்தும் ஐகான் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to book Metro Rail ticket through WhatsApp? Here is the full details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X