Home
News

Jio ரயில் செயலி மூலம் கன்பார்ம் டிக்கெட்.. முன்பதிவு செய்வது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்..

ஜியோ நிறுவனத்தின் ஜியோ ரயில் செயலி (Jio Rail App) ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இதன் மூலம் கன்பார்ம் (உறுதிப்படுத்தப்பட்ட) ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சேவையைப் பெறலாம்.

அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், இந்த ஜியோ ரயில் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு உடனே டிக்கெட் புக் செய்ய முடிகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த செயலி கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Jio ரயில் செயலி மூலம் கன்பார்ம் டிக்கெட்.. முன்பதிவு செய்வது எப்படி?

குறிப்பாக ஜியோபோன் பயனர்கள் இந்த செயலி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் PNR எண்ணை உள்ளிட்டு உங்கள் ரயில் டிக்கெட்டின் நிலையைப் பார்க்கலாம். இதுதவிர ரயிலின் தற்போதைய இருப்பிடம், வருகை மற்றும் புறப்படும் நேரம் மற்றும் தாமதங்கள் போன்ற தகவல்களைச் செயலி காண்பிக்கும்.

அதேபோல் இந்த ஜியோ ரயில் செயலி மூலம் நீங்கள் ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களையும் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். பின்பு இந்த செயலியில் உங்கள் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பயண வரலாற்றைப் பார்க்கலாம். தற்போது இந்த ஜியோ ரயில் செயலி ஆனது இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளை ஆதரிக்கிறது. விரைவில் இதில் தமிழ் மற்றும் பல மொழிகள் சேர்க்கப்பட்டால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Jio ரயில் செயலி மூலம் கன்பார்ம் டிக்கெட்.. முன்பதிவு செய்வது எப்படி?

மேலும் ஐஆர்சிடிசி (IRCTC) உடன் இணைந்து செயல்படும் ஜியோ ரயில் செயலி ஆனது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ Money மற்றும் யுபிஐ மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த உங்களை அனுமதிக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த ஜியோ ரயில் செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் ஜியோ பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஜியோ ரயில் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்து உங்களது ஜியோ மொபைல் நம்பரை உள்ளிட்டு ஓடிபி (OTP)-ஐ உறுதிப்படுத்த வேண்டும்.

வழிமுறை-2: அதன்பின்பு கணக்கு உருவாக்கப்பட்டவுடன் ஜியோ ரயில் செயலியில் சில அடிப்படைத் தகவல்களை வழங்க வேண்டும். அதன்பின்பு நீங்கள் இந்த செயலில் போர்டிங் ஸ்டேஷன் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு நீங்கள் பயணத் தேதியைத் தேர்வுசெய்ய வேண்டும். அனைத்து விவரங்களும் நிரப்பப்பட்டவுடன் கட்டணம் செலுத்தி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

Jio ரயில் செயலி மூலம் கன்பார்ம் டிக்கெட்.. முன்பதிவு செய்வது எப்படி?

அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, டெலிகாம் நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மக்களவை தேர்தலுக்குப் பிறகு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தேர்தலுக்குப் பிறகு 25 சதவீதம் ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த 25 சதவீதம் கட்டண உயர்வு என்பது உண்மையிலேயே அதிகமானது தான். ஆனாலும் கிராமப்புற பயனர்கள் நிர்வகிக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக இதன் அடிப்படையில் ஏர்டெல்லின் (airtel) சராசரி கட்டணத்தில் 29 ரூபாயும், ஜியோவின் (jio) சராசரி கட்டணத்தில் 26 ரூபாயும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to book confirmed train tickets through Jio Rail App? Here are the simple steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X