Home
News

உங்கள் WhatsApp மெசேஜிற்கு தானாக ChatGPT-ஐ ரிப்ளை செய்ய சொல்வது எப்படி?

இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் சாட்ஜிபிடி (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது.. சாட்ஜிபிடி இதை செய்யும்.. ChatGPT அதை செய்யுமென்று.. லிஸ்ட் நீண்டுக் கொண்டே போகிறது. இப்போது, ChatGPT உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கும் தானாக ரிப்ளை செய்யேமென்று செய்தி வெளியாகியுள்ளது.

எது.! வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்கிறதா? என்று சிலர் ஷாக் ஆகலாம். உண்மையை சொல்ல போனால், ஆம், ChatGPT இப்போது வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு மனிதர்களை போலவே ரிப்ளை மெசேஜ் அனுப்புகிறது. இது சிலருக்கு திகிலாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாக தெரிகிறது. சரி, இந்த அம்சத்தை நீங்கள் ட்ரை செய்து பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவை படியுங்கள்.

உங்க WhatsApp மெசேஜிற்கு தானாக ChatGPTஐ ரிப்ளை செய்ய சொல்வது எப்படி?

ChatGPT-ஐ வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைத்து பயன்படுத்த முடியுமா?

ChatGPT தனியாக இயங்கும் ஒரு AI ஆச்சே.. அதை எப்படி வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி சிலருக்கு எழுந்திருக்கும். ChatGPTஐ இப்படி வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைத்து பயன்படுத்த முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கும். உண்மையை சொல்ல போனால், பைதான் ஸ்கிரிப்ட் உதவியுடன் இது சாத்தியமாகும் மக்களே. என்னப்பா பைதான் ஸ்கிரிப்ட் பற்றி எல்லாம் பேசுறீங்க.! நங்கள் யாரும் கோடர் இல்லையே.. என்று யோசிக்க வேண்டாம்.

இந்த மேட்டர் மிகவும் சிம்பிள் ஆனது. பைதான் ஸ்கிரிப்ட் மூலம், ChatGPT ஆனது வாட்ஸ்அப் பயனர்களின் சார்பாக, வாட்ஸ்அப் இல் வரும் மெசேஜ்களுக்குப் பதிலளிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாடு, டெவலப்பர் டேனியல் கிராஸின் மூலம் சாத்தியமாகியுள்ளது. பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளத்தில், டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கு பதிலளிக்க AI- அடிப்படையிலான ChatGPT இன் உரையாடல் திறன்கள் பயன்படுத்துகிறது.

உங்க WhatsApp மெசேஜிற்கு தானாக ChatGPTஐ ரிப்ளை செய்ய சொல்வது எப்படி?

எப்படி சாட்ஜிபிடியை WhatsApp உடன் இணைப்பது?

இருப்பினும், இந்த அம்சம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான பொருள், OpenAI அல்லது Meta ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் தளங்களில் AI- அடிப்படையிலான மெசேஜ்ஜிங் ரிப்ளை ஆதரவை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த முறைப்படி, வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளுக்கு ChatGPT பதிலளிக்க முடியும்.

வாட்ஸ்அப்பில், புதிய ChatGPT பேட்ச் ஆனது டெவலப்பர் டேனியல் கிராஸின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புதிய ஜாவா ஸ்கிரிப்டை மூலம் செயல்படுகிறது. இது பயனர்கள் வாட்ஸ்அப் செய்திகளுக்கு பதிலளிக்க AI- இயங்கும் சாட்போட்டைப் பயன்படுத்த உதவுகிறது. இந்த அதிகாரப்பூர்வமற்ற ஒருங்கிணைப்பு, மனிதனைப் போன்ற முறையில் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்குப் பதிலளிக்க ChatGPTயின் உரையாடல் திறன் மற்றும் துல்லியமான தகவல் வழங்கல் திறன்களைப் பயன்படுத்துகிறது.

உங்க WhatsApp மெசேஜிற்கு தானாக ChatGPTஐ ரிப்ளை செய்ய சொல்வது எப்படி?

ஈஸியான வழிமுறை இது மட்டும் தான்.. ஆனா நல்லா யோசிச்சிட்டு ட்ரை செய்யுங்க.!

இதைச் செய்ய, தேவையான பைல்களைக் கொண்ட வலைப்பக்கத்திலிருந்து லாங்குவேஜ் லைப்ரரி (Langugae library) பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு, பயனர்கள் "WhatsApp-gpt-main" பைலை ஓபன் செய்து "server.py" ஆவணத்தை இயக்க வேண்டும். இது வாட்ஸ்அப்பில் ChatGPT அமைப்பை துவக்கும். சர்வர் இயங்கும் போது, ​​ஒருவர் "Is" என டைப் செய்ய வேண்டும். பிறகு என்டர் அழுத்தி "python server.py" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இது OpenAI சாட் பக்கத்தில் கணக்கின் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணை எடுத்துக்கொள்ளும். பின்னர், சரிபார்க்க "Confirm I am a human" பெட்டியைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் தொடர வேண்டும். இணைக்கப்பட்ட WhatsApp கணக்கில் OpenAI ChatGPTஐக் காணலாம். மேலே உள்ள இந்த WhatsApp + ChatGPT ஒருங்கிணைப்பு செயல்முறை எங்களால் சோதிக்கப்படவில்லை.

எனவே பாதுகாப்பு அம்சங்களை பற்றிய விபரங்கள் எதையும் எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. உங்களுடைய சொந்த விருப்பத்தில் இதை ட்ரை செய்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
How to ask ChatGPT to automatically reply to your WhatsApp messages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X