எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது.! அட்டகாசமான திட்டம் அறிமுகம்.!

|

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள சேவையை கொண்டுவந்த வண்ணம் உள்ளது இந்த எஸ்பிஐ வங்கி. சிலர் பொதுவாக எதிர்கொண்டு வரும் பிரச்சனை என்னவென்றால்,சொந்த ஊர் ஒன்றாக இருக்கும், ஆனால் பணிபுரிவது ஒரு இடமாக இருக்கும். குறிப்பாக வங்கி கணக்கு மற்ற பரிவர்த்தனைகளை சொந்த ஊரிலேயே வைத்திருப்பார்கள்.

 ஆனால் அதன் டெலிவரி

இந்த சூழ்நிலையில் கையில் உள்ள செக் லீப் முடிந்து விட்டால், வங்கிககளில் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து விடுவோம்.ஆனால் அதன் டெலிவரி சொந்த ஊரில் தான் செய்யப்படும், இதற்காக நாம் அலைய வேண்டி இருக்கும்.

ஸ்பிஐ வங்கி இப்படியானவர்களுக்கு ஒரு

தற்சமயம் எஸ்பிஐ வங்கி இப்படியானவர்களுக்கு ஒரு அருமையான திட்டம் கொண்டுவந்துள்ளது, அது என்ன திட்டம் என்று சற்று விரிவாகப் பார்ப்போம், அதாவது உங்களுக்கு தேவையான முகவரிக்கு இந்த செக்புக்கினை பெறுவது எப்படி என்றும் பார்ப்போம்.

மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!

வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்திற்காக

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்திற்காக பதிவு செய்யும் போதே, எங்கு டெலிவரி செய்ய வேண்டும் என்ற முகவரியையும் பதிவு செய்யலாம். அது வங்கியில் கொடுத்த முகவரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, வாடிக்கையாளர்ககள் எந்த முகவரியை கொடுக்கிறாரோ அங்கு டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!பாஸ்வோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!

இந்த புதிய வசதியை குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெளிவான விளகம் கொடுத்துள்ளது எஸ்பிஐ. அதில் வாடிக்கையாளர்கள் தங்களதுஇணைய வங்கியில் செக் புத்தகத்திற்காக விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்காக சவுகரியமான முகவரியினையும் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது

 விண்ணப்பிக்கும் வழிமுறை

விண்ணப்பிக்கும் வழிமுறை

  • இந்த புதிய வசதியை பயன்படுத்த முதலில் உங்கள் நெட் பேங்கிக் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
    • அடுத்து லாகின் செய்த பின்பு புதிய பக்கம் ஓபன் ஆகும், அங்கு Request & enquiries என்ற விருப்பத்தைதேர்வு செய்யவும்.
      • பின்னர் கீழ்புறமாக ஸ்க்ரோல் செய்தால் அங்கு Cheque book Request option இருக்கும். அதை தேர்வு செய்துஎந்த கணக்கிற்கு செக் புக் வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதோடு எத்தனை செக் லீப்கள் வேண்டும்என்பதனையும் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
      • முகவரி விருப்பம்

        முகவரி விருப்பம்

        நீங்கள் கடைசியாக எத்தனை செக் லீப்கள் என்பதை சப்மிட் செய்தபின்பு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் டெலிவரிசெய்யும் முகவரியினை கேட்கும், அங்கு 3 விருப்பங்கள் இருக்கும். அதில் பதிவு செய்யப்பட்ட முகவரி, கடைசியாக அனுப்பப்பட்டமுகவரி, புதிய முகவரி என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான முகவரியை கொடுத்துக் கொள்ளலாம்.

        முகவரி சார்ந்த தகவல்களை கொடுத்துவிட்டு சப்மிட் செய்யவும், சப்மிட் செய்தவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அந்த ஒடிபி-யினை கொடுத்து உங்களது பதிவினை உறுதி செய்யவும்.

        ஆல்ஃப்ர்டு நோபல் பற்றி தெரியுமா? இவர் பெயரில் நோபல் பரிசு எப்படி உருவானது தெரியுமா?ஆல்ஃப்ர்டு நோபல் பற்றி தெரியுமா? இவர் பெயரில் நோபல் பரிசு எப்படி உருவானது தெரியுமா?

        மொபைல் பேங்கிங்க், எஸ்எம்எஸ்

        குறிப்பாக மொபைல் பேங்கிங்க், எஸ்எம்எஸ் பேங்கிங்க், மிஸ்டுகால் பேங்கிங்க் அல்லது அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று கூட செக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் செக் புக்கிற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
How to apply SBI cheque book online: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X