எல்லாமே வீட்டில் இருந்து- புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம், பெயர் இணைப்பு, நீக்கம் செய்வது எப்படி?

|

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி பிரதான நடவடிக்கையாக தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கொரோனா நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழக அரசின் கொரோனா உதவித் தொகை

தமிழக அரசின் கொரோனா உதவித் தொகை

கொரோனா உதவித் தொகையாக முதல் தவணையாக ரூ.2000 எனவும் இரண்டாவது தவணையாக ரூ.2000 என மொத்தம் ரூ.4000 தமிழ அரசு வழங்கி வருகிறது. இதில் இரண்டாவது தவணை வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல் தவணை ரூ.2000 98.4% குடும்ப அட்டை தாரர்கள் நிவாரண தொகை பெற்றுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் தொகுப்பு

நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் தொகுப்பு

குடும்ப அட்டை தாரர்கள் ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணை தொகை ரூ.2000 உடன் 14 வகை அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதி வரை கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இந்த மாத இறுதி வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பிரதான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு

பிரதான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு

இதுபோன்ற பல்வேறு தேவைகளுக்கும் குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) என்பது முக்கிய ஆவணங்களில் பிரதான ஒன்று. அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்ட்கள் மூலம் ரேஷன் பொருட்கள் உட்பட அரசு திட்ட நன்மைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக மணமுடித்த தம்பதிகளுக்கான குடும்ப உறுப்பினர்கள் அட்டை, அவர்களது பெயர்கள் நீக்குவது, புதிய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயர் சேர்ப்பது உட்பட பல்வேறு தேவை ஏற்படும்.

புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம் செய்வது எப்படி

புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம் செய்வது எப்படி

அதேபோல் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்காதவர்கள் வரும் காலக்கட்டத்தில் அரசு வழங்கும் சலுகை வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிபப்பது கட்டாயமாகும். அதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மின்னணு அட்டை சேவை என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

விவரங்கள் சரியாக உள்ளிட வேண்டும்

விவரங்கள் சரியாக உள்ளிட வேண்டும்

புதிய விண்ணப்பம் என்பதை தேர்வு செய்தவுடன் அதில் குடும்ப உறுப்பினர் தலைவர் பெயர் என்ற பாக்ஸ் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் தங்களது பெயரை பிழையின்றி பதிவிட வேண்டும். பின் அதில் காட்டப்படும் முகவரி, மாவட்டம், கிராமம், தாலுகா, அஞ்சல் குறியீடு, மொபைல் எண் உள்ளிட்ட தகவலை சரியாக பதிவிட வேண்டும். இந்த தகவல் அனைத்தையும் பிழையின்றி சரியாக பதிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை சரியாக பதிவிட வேண்டும்

உறுப்பினர் சேர்க்கை சரியாக பதிவிட வேண்டும்

எந்தவகை அட்டை என்பதை தேர்வு செய்து உறுப்பினர் சேர்க்கைகளை பதிவிட வேண்டும். அதன்பின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும், சேமிப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆவணம் இருந்தால் அப்லோட் செய்யவும் இல்லையென்றால் பிறப்பு சான்றிதழ் போதுமானது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மேற்கொள்ளும் போதும் புதிய ரேஷன் கார்ட்கள் பதிவு செய்யும் போதும் முன்னதாக இருந்து ரேஷன் கார்ட்களில் பெயர்கள் நீக்கப்படுவது கட்டாயமாகும்.

அனைத்து தகவல்கள் சரிபார்ப்பு

அனைத்து தகவல்கள் சரிபார்ப்பு

இதை அனைத்தையும் பதிவிட்ட பிறகு தாங்கள் பதிவிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்கவும் இதை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் சரிதான் என்ற தேர்வை உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அதிகாரிகள் ஒப்புதல் உடன் ரேஷன் கார்ட்

அதிகாரிகள் ஒப்புதல் உடன் ரேஷன் கார்ட்

இந்த விண்ணப்பம் அனைத்தும் சமர்பிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் குறிப்பு எண் குறித்து வைத்துக் கொள்ளவும். காரணம், இந்த குறிப்பு எண் வைத்து தங்களது புதிய அட்டை நிலையை அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி இதன்பின் ஆதார்கார்ட், போட்டோ உள்ளிட்ட சான்றிதழ்களை தாலுகா அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவை அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு ஆவண சரிபார்ப்பில் தொடங்கி துறை வாரியாக அதிகாரி ஒப்புதல் வழங்கப்படும் இதன்பின் தங்களகுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். பெயர் திருத்தம் உள்ளிட்ட விவகாங்களுக்கு பயனர்கள் முதலில் ஆதார் அட்டையில் சரி செய்ய வேண்டும். இதன்பின் ஆதார் அட்டையை உணவுத்துறை அதிகாரியிடம் சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to apply ration card, Add New Member and Remove Name Through Online?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X