Home
News

வீட்டிலிருந்தபடி பாஸ்போர்ட் எடுக்கலாமா? இது தெரியாமல் வீணாக அலைய வேண்டாம் மக்களே!

பாஸ்போர்ட் (Passport) ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்தியாவைவிட்டு வெளியே செல்ல பாஸ்போர்ட் மிக-முக்கியமான விஷயமாகும். பாஸ்போர்ட் உங்கள் குடியுரிமையை உறுதிப்படுத்துவதோடு, நீங்கள் எந்த நாட்டின் குடிமகன் என்பதை இந்த ஆவணம் கூறுகிறது. ஆகையால், இது உலகளவில் மிகவும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய முக்கியமான ஆவணம் உங்களிடம் இல்லையா? இன்னும் நீங்கள், உங்களுக்கான ஒரு தனி பாஸ்போர்ட் ஆவணத்தை உருவாக்கவில்லையா? இதற்காக அதிக நேரம் செலவளிக்க வேண்டும் என்று மலைப்பாக இருக்கிறதா? பாஸ்போர்ட் (Passport) வாங்க அதிக பணம் செலவிட வேண்டுமா? பாஸ்போர்ட் வாங்க தேவையான மற்ற ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகமா? இதில் எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

வீட்டிலிருந்தபடி பாஸ்போர்ட் எடுக்கலாமா? வீணாக அலைய வேண்டாம் மக்களே!

உங்களிடம் இப்போது வரை பாஸ்போர்ட் இல்லை என்றால், நீங்கள் பீதி அடைய வேண்டாம். பாஸ்போர்ட் பெறுவது உண்மையில் மிகவும் எளிது. உண்மையை சொல்ல போனால், ஆதார் கார்டை பெறுவதை விட இது மிகவும் சுலபமான காரியமாகும். அதுவும், இந்த ஹை-டெக் காலத்தில், நீங்கள் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆம், வெளியில் சென்று அலைய வேண்டியதில்லை.

சரி, எப்படி புது பாஸ்போர்ட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (How to apply Passport online) என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். mPassport Seva செயலி மூலம் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக நீங்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். போலீஸ் சரிபார்ப்பிற்கு பிறகு, ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும். எம்பாஸ்போர்ட் சேவா (mPassport Seva Apps) என்ற மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் நீங்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டையின் அடிப்படையில் மட்டுமே பாஸ்போர்ட்டை உருவாக்க முடியும். பாஸ்போர்ட் வாங்க மிகவும் முக்கியமான ஆவணமாக உங்கள் ஆதார் கார்டு (Aadhaar card) தேவைப்படுகிறது. mPassport Seva ஆப்ஸ் மூலம் நீங்களே ஆன்லைனில் வெறும் ரூ.1500 செலுத்தி, புது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கலாம். சரி, ஆன்லைனில் எப்படி விண்ணப்பித்து, புது பாஸ்போர்ட்டை பெறுவதென்று பார்க்கலாமா? வாங்க..

வீட்டிலிருந்தபடி பாஸ்போர்ட் எடுக்கலாமா? வீணாக அலைய வேண்டாம் மக்களே!

எம்பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் மொபைலில் mPassport Seva மொபைல் ஆப்ஸை டவுன்லோட் செய்யவும்.
இப்போது ஆப்ஸைத் திறந்து, புதிய பயனர் பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் முகவரியின் அடிப்படையில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு, பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை உள்ளிடவும்.
இப்போது தனிப்பட்ட உள்நுழைவு ஐடியை உள்ளிடவும். (இது மின்னஞ்சல் ஐடியாகவும் இருக்கலாம்)

இதற்குப் பிறகு வலுவான பாஸிவ்வ்ர்டை உருவாக்கவும்.
பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருவேளை பாஸ்வோர்டை நீங்கள் மறந்துவிட்டால், மீட்டெடுக்க இது அவசியம்.
கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சப்மிட் (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சரிபார்ப்பு இணைப்பு அனுப்பப்படும்.
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

மேலும் சரிபார்ப்பிற்காக உங்கள் உள்நுழைவு ஐடியை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
கணக்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, ஆப்ஸை கிளோஸ் செய்துவிட்டு மீண்டும் லாகின் செய்யவும்.
இப்போது விண்ணப்பதாரர் ஏற்கனவே உள்ள பயனர் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
உள்நுழைவு ஐடி, பாஸ்வோர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
இப்போது அப்ளை ஃபார் ஃப்ரெஷ் பாஸ்போர்ட்டை கிளிக் செய்யவும்.

கேட்கப்பட்ட தகவலை நிரப்பி, பயன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றவும்.
அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்போது அப்பாயிண்ட்மெண்ட்டைச் சரிசெய்து, பாஸ்போர்ட் மையத்திற்குச் சென்று ஆவணங்களைச் சரிபார்க்கவும்.
சரிபார்ப்பு நடந்த பிறகு, போலீஸ் விசாரணை நடத்தப்படும்.
பிறகு ஒரு வாரத்தில் தபால் மூலம் உங்கள் பாஸ்போர்ட் வீடுதேடி நேரில் வரும்.
இதேபோல், காலாவதியான பாஸ்போர்ட்டை நீங்கள் ஆன்லைனில் அப்டேட்டும் செய்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Apply Passport Online By Sitting At Home Through mPassport Seva Mobile Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X