Home
News

அவசரப்படாதீங்க.. கொடைக்கானல், ஊட்டி செல்ல ePass வாங்குவது எப்படி? ஆன்லைனில் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

கொடைக்கானல் (Kodaikanal), ஊட்டி (Ooty) செல்ல திட்டமிடுகிறீர்களா? வரும் மே 7, 2024 முதல் ஜூன் 30, 2024 வரை இந்த சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இ-பாஸ் (e-pass) கட்டாயமென்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும் மக்களுக்கு எந்தத்தளத்திலிருந்து இ-பாஸ் பெறுவதென்று தெரியவில்லை.

அவசரப்படாதீர்கள் மக்களே, இந்த பதிவை நாங்கள் எழுதிய நேரம் வரை தமிழக மின் ஆளுமை (TN e-governance) அமைப்பு கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் மக்களுக்கான இ-பாஸ் (ePass ) பதிவு செய்யப்படும் வலைத்தள பக்கத்தை லைவ் செய்யவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இருப்பினும், சுற்றுலாச்செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கும் மக்கள் இணையம் முழுக்க இ-பாஸ் பதிவு செய்யப்படும் வலைப்பக்கத்தை தேடி வருகிறார்கள்.

அவசரப்படாதீங்க.. கொடைக்கானல், ஊட்டி செல்ல ePass வாங்குவது எப்படி?

கொடைக்கானல், ஊட்டி செல்ல ePass வாங்குவது எப்படி? எந்த இணையத்தள பக்கத்தை அணுகுவது?
உண்மையை சொல்ல போனால், இன்னும் எங்கு சரியாக இந்த இணையதளம் திறக்கப்படும் என்பதில் மக்களுக்கு குழப்பமிருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, தமிழக மின் ஆளுமை அமைப்பு, serviceonline.gov.in/tamilnadu என்ற இந்த இணையதள பக்கம் அல்லது tnega.tn.gov.in என்ற இந்த இரண்டாவது இணையதள பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்ல தேவையான இ-பாஸ் பதிவு சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வீணாக மக்கள் பல இணையதள பக்கங்களை ஓபன் செய்து, அதில் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்குக்கொள்ளப்படுகிறது. இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வலைத்தள பக்கங்களில் ஏதேனும் ஒரே பக்கத்தில் தான் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்ல தேவையான இ-பாஸ் பதிவு சேவை துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, இப்போது இ-பாஸ் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

கொடைக்கானல் மற்றும் ஊட்டி இ-பாஸ் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
- ஆதார் அட்டை (Aadhar Card)
- ரேஷன் அட்டை (Ration Card)
- டிரைவிங் லைஸன்ஸ் (Driving License)
- பாஸ்போர்ட் (Passport)
- வாகன விபரங்கள் (Vehicle details)
- பயண தேதி (Trip days)
- எத்தனை நாட்கள் தங்கப்போகிறீர்கள் என்ற விபரம் (How long you stay)

அவசரப்படாதீங்க.. கொடைக்கானல், ஊட்டி செல்ல ePass வாங்குவது எப்படி?

சரி அடுத்தபடியாக ePass படிவத்தில் நீங்கள் என்னென்ன தகவல்களை நிரப்ப வேண்டியதிருக்கும் என்று பார்க்கலாம்.
- பெயர் (Name)
- வீட்டு முகவரி (Home Address)
- தங்கும் இடத்தின் முகவரி (Destination Address)
- பயண வகை (Type of Travel)
- மாவட்டங்களுக்கு இடையேவா அல்லது மாநிலங்களுக்கு இடையேவா (Inter-District or Inter-State)
- பயண நாள் மற்றும் தேதி (Travel date and time)

- பயணிகளின் எண்ணிக்கை (Number of passengers)
- வாகன விவரங்கள் (Vehicle details)
- அடையாளச் சான்று (Identification proof)
- பயணத்தின் நோக்கம் (Purpose of travel)
- ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எவ்வளவு காலம் தங்கவிருக்கிறீர்கள் (How long you stay in Ooty & Kodaikanal)

இறுதியாக ஊட்டி மற்றும் கொடைகானலுக்கான இ-பாஸ் (ePass) விண்ணப்பம் எத்தனை நாட்களில் ஒப்புதல் கிடைக்கும் என்ற சந்தேகமும் எல்லோரிடத்திலும் உள்ளது. சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பொழுது, ஒரு சில மணி நேரங்களில் உங்கள் இ-பாஸ்க்கு ஒப்புதல் கிடைத்துவிடும். அதிகபட்சமாக 1 நாள் வரை ஆகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to apply online epass for Kodaikanal or Ooty via Tamil Nadu e-Governance web portals details on documents needed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X