லக்கு அடிச்சாச்சு.. தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் இலவச Smartphone.. ஆன்லைனில் உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
தமிழக அரசு தற்போது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் (Smartphone) வழங்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மை தானா? என்று சிலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினாலும், பலர் தமிழக அரசு வழங்கும் இலவச ஸ்மார்ட்போனை பெற என்ன செய்ய வேண்டும்? எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்? இந்த இலவச ஸ்மார்ட்போனை தமிழக அரசு யாருக்கெல்லாம் இலவசமாக வழங்கப்போகிறது என்று பல தகவல்களை இப்போதே கூகுளில் சர்ச் செய்து தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட தகவலை தேடும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இப்பதிவு உங்களுக்கானது.
தமிழக அரசு உண்மையிலேயே இலவசமாக ஸ்மார்ட்போன் (Tamil Nadu Government Provides Free Smartphone To Tamil Nadu People) தரப்போகிறதா? என்ற கேள்விக்கு முதலில் உண்மையான பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆமாங்க, அது உண்மை தான். தமிழக அரசு, தமிழக மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் (Free Smartphone For TN People) வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த இலவச ஸ்மார்ட்போன்களை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியுமா?

லக்கு அடிச்சாச்சு.. தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் இலவச Smartphone:
அல்லது அருகில் உள்ள அரசு மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டுமா என்ற கேள்வி அடுத்து அதிகமாக கேட்கப்பட்டிருந்தது. தமிழக அரசு வழங்கும் இலவச ஸ்மார்ட்போனை பெற, தகுதியுடைய தமிழக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை எளிமையாக்குவதற்காக தமிழக அரசு பிரத்தியேக ஆன்லைன் போரட்டலை (Apply Through Online To Get Free Smartphone) அறிமுகம் செய்துள்ளது.
இந்த இலவச ஸ்மார்ட்போனை தமிழக அரசு யாருக்கெல்லாம் வழங்கப்போகிறது? இதை பெறுவதற்கான நிபந்தனைகள் என்னென்ன? என்ற கேள்விகள் அடுத்தபடியாக அதிமாக இணையத்தில் தேடப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், இந்த இலவச ஸ்மார்ட்போன் சாதனங்களை தமிழக அரசு குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கவிருக்கிறது. எல்லாத்தரப்பிலும் உள்ள அணைத்து பொதுமக்களுக்கும் இது கிடைக்கப்போவதில்லை. இந்த உண்மை சிலருக்கு கசப்பாக இருக்கலாம்.
தமிழக அரசு (Tamil Nadu Government) தனது பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சில நலத்திட்டங்களை அறிமுகம் செய்து, அவற்றறை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக, பார்வையற்றவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவி திறன் குறைபாடு உள்ளவர் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கென்று பிரத்தியேகமாக வங்கி மூலம் சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன்களை அரசு இப்போது வழங்கி வருகிறது.
ஆன்லைனில் உடனே இப்படி விண்ணப்பியுங்கள்.. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?
இதற்கு அடுத்தபடியாக, அரசு கொண்டுவந்துள்ள மற்றொரு சிறப்பு திட்டம் தான் இந்த இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டமாகும். தமிழக அரசு தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன்களை (Free Smartphone For Disabled People) வழங்கவுள்ளது. இதற்காக தான் தமிழக அரசு இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் எங்கும் அலைந்துதிரியாமல் எளிமையாக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் முறையையும் தமிழக அரசு இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் இலவச ஸ்மார்ட்போனிற்காக விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? மற்றும் அதற்கான விண்ணப்பிக்கும் முறை எத்தகையது என்பது இங்கே.
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
- மருத்துவ சான்றிதழ்
- ஆதார் அட்டை (Aadhaar card)
- முதுகலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை கல்வி சான்று
- பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் அடையாள சான்று
போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இலவச ஸ்மார்ட்போனை பெற தமிழக மக்கள் இ-சேவை மையத்தின் வாயிலாக
https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்நுழைந்து உங்கள் தகவலை அதில் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








