உங்களது Aadhaar கார்டு கிழிந்துவிட்டதா? புதிய ஆதார் அட்டையை வாங்கும் முன்பு இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..
ஆதார் கார்டு (Aadhaar Card) ஆனது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டு எதிர்பாராத சூழ்நிலை காரணமாக கிழிந்துபோனாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அதை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
அதாவது இதற்கு மாற்றாக நீங்கள் ஆன்லைன் மூலம் பிவிசி ஆதார் கார்டு (PVC Aadhaar card) பெற முடியும். குறிப்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பிவிசி ஆதார் அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. சரி இப்போது இந்த பிவிசி ஆதார் கார்டு அம்சங்கள் என்னென்ன மற்றும் இதை எப்படி ஆன்லைன் மூலம் வாங்குவது என்பதை இப்போது பார்க்கலாம்.

பிவிசி ஆதார் கார்டு (PVC Aadhaar card) அம்சங்கள்
முதலில் ஆதார் லெட்டர் என்பது UIDAI அஞ்சல் மூலம் அனுப்பிய அசல் ஆதார் ஆகும். அதன்பின்பு இ-அதார் என்பது டிஜிட்டல் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் ஆவணம் ஆகும். அடுத்து வந்த பிவிசி ஆதார் என்பது நீடித்த பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ஆதார் அட்டை ஆகும். குறிப்பாக இந்த பிவிசி ஆதார் கார்டு ஆனது ஒரு ஏடிஎம் கார்டு போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் பிவிசி ஆதார் கார்டை நீங்கள் ஃபர்ஷ் அல்லது பாக்கெட்டில் வைத்து அனைத்து இடங்களுக்கு எளிமையாகக் கொண்டு செல்ல முடியும். அதேபோல் இது நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் விரைவில் இது சேதமடையாதது என்பது தான் இதன் முக்கிய சிறப்பு ஆகும். மேலும் அனைத்து சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த பிவிசி ஆதார் அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 50 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்ய முடியும் இதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
வழிமுறை 1: முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து து மை ஆதார் (My Aadhaar) என்ற டேப் ஐ கிளிக் செய்யவும். அதன்பின்பு ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு (Order Aadhaar PVC Card) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்
வழிமுறை 2: அடுத்து உங்களது ஆதார் எண் (Aadhaar number) மற்றும் கேப்ட்சாவை (Captcha code) உள்ளிடவும். அதன்பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்கவும்.

வழிமுறை 3: இப்போது திரையில் உங்கள் ஆதார் தொடர்பான தகவல்கள் தெரியும். இதைச் சரிபார்த்த பிறகு next என்பதைக் கிளிக் செய்து, ரூ. 50 செலுத்தி செயல்முறையை முடிக்கவும். குறிப்பாக பணம் செலுத்திய பிறகு, உங்கள் ஆர்டர் உறுதிப்படுத்தப்படும். மேலும் PVC ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். அதுவும் உங்கள் PVC ஆதார் கார்டு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ள ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








