உங்கள் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா? புது ரேஷன் கார்டு வேண்டுமா? இப்படி ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!
உங்களுடைய ரேஷன் கார்டை தொலைத்துவிடீர்களா? அல்லது உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? இனி அதிக சிரமமின்றி, மிகவும் எளிதாக வீட்டில் இருந்தபடியே, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மூலம் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
ரேஷன் கார்டு (ration card) என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். மாதாந்திர ரேஷன் பொருட்களை வாங்குவதை தவிர, தமிழக அரசால் வழங்கப்படும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளை பெற இந்த ரேஷன் கார்டு கட்டாயமானது. இத்தகைய முக்கியமான ஆவணத்தை தெரியாமல் தொலைத்துவிட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ஒருவேளை உங்களிடம் பழைய ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்றாலோ, அல்லது உங்கள் குடும்பத்திற்கான தனி புது ரேஷன் கார்டை (ration card) வாங்கவோ உங்களுக்கு ஐடியா இருந்தால், இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள். தொலைந்த ரேஷன் கார்டுக்கு பதிலாக, மீண்டும் ஒரு நகல் ரேஷன் கார்டை விண்ணப்பிக்க நீங்கள் ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம்.
உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், உடனே https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு உடனே செல்லுங்கள். இது தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமாகும். இந்த இணையதள பக்கத்தை உங்கள் போனில் அல்லது லேப்டாப் இல் ஓபன் செய்து, உங்கள் பயனர் ID விபரணங்களை உள்ளிடவும்.
உங்கள் பயனர் ஐடி விவரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP மெசேஜ் அனுப்பப்படும். அந்த OTP விபரத்தை உள்ளிட்டு லாகின் செய்யவும். அடுத்தபடியாக, TNPDS ஸ்மார்ட் கார்டு டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்வதற்கான பக்கத்தை காண்பீர்கள். உங்கள் ரேஷன் கார்டு உடன் தொடர்புடைய தகவலை பதிவு செய்ய வேண்டும்.

இதை செய்த பிறகு PDF பைல் ஆக அந்த டாக்குமெண்ட்டை சேவ் செய்துகொள்ளுங்கள். இந்த PDF ஃபைலை பிரிண்ட் செய்து, உங்கள் முகவரிக்கு உட்பட ரேஷன் கடைக்கு சென்று இந்த நகலை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு, உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்த சேவை தொடர்பான கூடுதல் தகவலுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
சரி, இது தொலைந்துபோன ரேஷன் கார்டை மீண்டும் பெருக்குவதற்கான முறையாகும். ஒருவேளை உங்களுக்கு புதிதாக ரேஷன் கார்டு தேவைப்படுகிறது என்றால், கீழே உள்ள இங்க செயல்முறையை பின்பற்றவும்.இதற்கு முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவேண்டும். பிறகு, 'புதிய ஸ்மார்ட் கார்டு (Smart Card) விண்ணப்பிக்க' என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் அடையாள ஆவணங்களுடன் கூடிய விபரங்களை இந்த பக்கத்துடன் இணைக்க வேண்டும். பின்னர் குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை இணைக்க வேண்டும். இறுதியில் சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இறுதியாக உங்களுக்கு ரெப்ரன்ஸ் நம்பர் வழங்கப்படும்.இதை வைத்து உங்கள் புதிய ரேஷன் கார்டு ஸ்டேட்டஸை அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications