Home
News

BSNL பிராட்பேண்ட் சேவையை ஆன்லைன் மற்றும் SMS மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பெரும்பாலான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை ஆன்லைனில் வழங்குகிறார்கள். ஆன்லைன் மூலம் தேவைப்படும் சேவைக்கான விபரங்களைச் சந்தாதாரர்கள் வழங்குநர்களின் இணையதளத்தின் மூலம் பார்வையிடலாம் மற்றும் சேவைகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு நடத்தும் சேவை வழங்குநரான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) வேறுபட்டதல்ல. BSNL நிறுவனமும் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் சேவையை வழங்குகிறது.

BSNL UDAAN போர்ட்டல்

BSNL UDAAN போர்ட்டல்

கடந்த 2000 ஆம் ஆண்டில் BSNL ஆன்லைன் சேவையை வழங்கத் துவங்கியது. இது புதிய இணைப்பைப் பெறுவதற்கு, லேண்ட்லைன், மொபைல், பிராட்பேண்ட், FTTH சேவைகள் முதல் டேட்டா சென்டர் சேவைகள் வரை பலதரப்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலம் சேவைகளைப் பெற அனுமதிக்கிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் பல தொலைத்தொடர்பு சேவைகளைத் தடை இல்லாமல் வழங்குகிறது. சந்தாதாரர்கள் BSNL UDAAN போர்ட்டல் மூலம் BSNL சேவைகளைப் பெறலாம்.

BSNL அலுவலகம் செல்லாமல் பிராட்பேண்ட் சேவையை எப்படிப் பெறுவது?

BSNL அலுவலகம் செல்லாமல் பிராட்பேண்ட் சேவையை எப்படிப் பெறுவது?

ஆன்லைன் சேவையை தவிர, BSNL நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக விண்ணப்பிக்கும் விருப்பத்தையும் இப்போது வழங்குகிறது. அரசாங்கத்திற்குச் சொந்தமான பிராட்பேண்ட் சேவைக்கு ஆன்லைனிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்திவிட்டோம். அடுத்தபடியாக, இந்த சேவைகளை ஆன்லைனிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பார்ப்போம். இதனால் நிறுவல் சேவைகள் வீட்டு வாசலில் வழங்கப்படுகின்றன.

பிஎஸ்என்எல் பிராட்பேண்டிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

பிஎஸ்என்எல் பிராட்பேண்டிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

  • பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்க, வாடிக்கையாளர் பிஎஸ்என்எல் போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உள்நுழைவு பக்கத்திற்குச் செல்ல www.selfcare.bsnl.co.in/tungsten/UI/facelets/udaanRegistrationPageBeforeLogin.xhtml ஐப் பார்வையிடவும்.
  • அந்தந்த கீழ் தோன்றல்களில் இருந்து மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • போர்ட்டல் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம் மற்றும் மாவட்டத்தில் கிடைக்கும் BSNL சேவைகளை 'சேவை வகை' என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடும்.
  • 48 மணி நேரத்திற்குள் இணைப்பு கிடைக்குமா?

    48 மணி நேரத்திற்குள் இணைப்பு கிடைக்குமா?

    • காட்டப்பட்டுள்ள பட்டியலில் இருந்து வாடிக்கையாளர் விரும்பிய சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (புதிய லேண்ட்லைன், புதிய லேண்ட்லைன் & பிராட்பேண்ட் , ஏற்கனவே உள்ள லேண்ட்லைனில் புதிய பிராட்பேண்ட், பாரத் ஃபைபர் மற்றும் புதிய பாரத் ஏர் ஃபைபர்).
    • கீழே உள்ள இடங்களில் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும் (பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் STD குறியீட்டுடன் கூடிய லேண்ட்லைன் எண்) இருப்பிடம், துணை வட்டாரம் உள்ளிட்ட முகவரி விவரங்களை நிரப்பவும்.
    • BSNL பிராட்பேண்ட் சேவைகளுக்கான நிர்வாகி உங்கள் இடத்திற்கு வருவார்

      BSNL பிராட்பேண்ட் சேவைகளுக்கான நிர்வாகி உங்கள் இடத்திற்கு வருவார்

      • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
      • புதிய பிராட்பேண்ட் இணைப்புக்கான படிவத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் 48 மணி நேரத்திற்குள் நிலையான அழைப்பைத் திரும்பப் பெறுவதாக BSNL உறுதியளிக்கிறது. BSNL பிராட்பேண்ட் சேவைகளுக்கான ஆவணங்களைச் சேகரிக்க ஒரு நிர்வாகி உங்கள் இடத்திற்கு வருவார்.
      • எஸ்எம்எஸ் மூலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

        எஸ்எம்எஸ் மூலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

        இப்போது, ​​ஆன்லைன் படிவத்தைச் சமர்ப்பிப்பது சிரமமாக இருந்தால், BSNL ஒரு மாற்று வழங்குகிறது. இனி நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் சேவையை SMS மூலம் விண்ணப்பிக்க முடியும். BSNL பயனர்களுக்கும் மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கும் குறியீடுகள் வேறுபடுகின்றன. பிராட்பேண்ட் இணைப்புக்கு விண்ணப்பிக்க, BSNL வாடிக்கையாளர் BSNL எண்ணிலிருந்து 54141 என்ற எண்ணுக்கு 'உங்கள் இடத்தின் BB*STD குறியீடு' எனச் செய்தி அனுப்பலாம்.

        Airtel, Vodafone Idea, Reliance Jio பயனர்கள் எப்படி SMS அனுப்பி விண்ணப்பிப்பது?

        Airtel, Vodafone Idea, Reliance Jio பயனர்கள் எப்படி SMS அனுப்பி விண்ணப்பிப்பது?

        நீங்கள் Airtel/Vodafone Idea/Reliance Jio/etc போன்ற பிற சேவைகளை வழங்குபவர்களாக இருந்தால், உங்கள் மொபைலில் இருந்து 9400054141 என்ற எண்ணிற்கு 'BB*STD Code of your place' என மெசேஜ் செய்யவும். இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து வெறும் SMS அனுப்புவதன் மூலம் உங்களுக்குத் தேவையான பிராட்பேண்ட் சேவையைப் பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.

Best Mobiles in India

English summary
How to Apply for BSNL Broadband Online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X