ரேஷன் கார்டு அட்டை உங்களிடம் இல்லையா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!

|

இந்தியாவில் ஆதார் கார்டு அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ரேஷன் கார்டு அட்டைகளும் மிக முக்கியமானது. ரேஷன் கார்டு அட்டைகள் முக்கிய அடையாள ஆவணமாக செயல்படுகிறது. அதேபோல் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி மக்கள் மாதாந்திர ரேஷன் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். உங்களிடம் ரேஷன் கார்டு அட்டையில்லை என்றால் அதை எப்படி ஆன்லைனில் வாங்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ரேஷன் கார்டு அட்டை

ரேஷன் கார்டு அட்டைகள் இல்லாதவர்கள் எளிதாக புதிய ரேஷன் அட்டைகளை விண்ணப்பிக்க அனைத்து மாநில அரசு தரப்பில் ஆன்லைன் வலைத்தளங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஏற்ப, அந்த மாநில வலைத்தளத்தின் கீழ் சென்று உங்களுக்கான புதிய ரேஷன் கார்டு அட்டையை விண்ணப்பிக்கலாம்.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை

மேலும் பல இடங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை (One nation one card) பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் வைத்துள்ளது. இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் நீங்கள் எந்த மாநிலத்திலிருந்தாலும் நீங்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்! விலை என்ன தெரியுமா?நோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்! விலை என்ன தெரியுமா?

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க

நீங்கள் முதலில் உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க உங்களின் ஆதார் அடையாள அட்டை , வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் விபரம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதில் எந்த ஆவணமும் உங்களிடம் இல்லை என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஹெல்த் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

ரேஷன் கார்டு

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து ரேஷன் கார்டு விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அனைத்து சரிபார்ப்பும் முடிந்தவுடன் நீங்கள் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ரேஷன் அட்டை உங்களுக்கு வழங்கப்படும். இதேபோல், நீங்கள் நேரடியாக பொதுச் சேவை மையம் சென்றும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இப்படி நீங்கள் உங்களுக்கான புதிய ரேஷன் கார்டு அட்டைகளை விண்ணப்பிக்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to apply for a new ration card through online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X