Home
News

ஓ.. இப்படி தான் Instagram-ல மியூசிக் நோட்ஸ் போடுறாங்களா? ரொம்பா ஈஸியா இருக்கே!

இந்தியாவின் மக்கள் தொகையில் 17% பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர். இதில் 73% பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அம்சத்தை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் (Instagram) தொடர்ந்து பல புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்காக அறிமுகம் செய்து வருகிறது. இன்னும் பல புதிய அம்சங்களை நிறுவனம் சத்தமில்லாமல் பரிசோதிப்பதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது அதன் நோட்ஸ் அம்சத்தில் மியூசிக்கை ஆட் செய்ய அனுமதிக்கும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஓ.. இப்படி தான் Instagram-ல மியூசிக் நோட்ஸ் போடுறாங்களா? ரொம்பா ஈஸியா?

அதாவது, இன்ஸ்டாகிராமில் இருக்கும் நோட்ஸ் அம்சத்தில் இதுவரை டெக்ஸ்ட் தகவலை மட்டுமே பதிவிட முடிந்து வந்தது. ஆனால், நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய அம்சத்தின் படி, இசையைச் சேர்க்கும் திறன் நோட்ஸ் அம்சத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, உங்கள் DM இன்பாக்ஸில் தனி டேபிள் தோன்றும் நோட்ஸ் நிலை அப்டேட்களைச் சேர்க்க Instagram உங்களை அனுமதிக்கிறது.

புதிய அம்சம் நோட்ஸ்களுக்கு கூடுதல் சேர்தலை வழங்குகிறது. காரணம், இனி உங்களால் இன்ஸ்டாகிராம் நோட்ஸ் இல், உங்களுக்கு பிடித்தமான பாடல் மற்றும் இசை தகவலை பதிவிடலாம். இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் லைப்ரரியில் கிடைக்கும் எந்தவொரு பாடலின் வரியையும் 30 வினாடி அளவை சேர்க்க உங்களை அனுமதிக்கிறது. நோட்ஸ் இல் நீங்கள் தோன்ற விரும்பும் பாடலின் பகுதியையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

பாடல் துணுக்குடன் கூடிய உங்கள் Instagram நோட்ஸ் உங்களைப் பின்தொடர்பவர்களின் DM இன்பாக்ஸில் தோன்றும். அவர்கள் அதைக் கேட்க ஜஸ்ட் கிளிக் செய்தால் போதுமானது. டெக்ஸ்ட் நோட்ஸ்களை போலவே, இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாடல் நோட்ஸ்களையும் இனி அணுக முடியும். இதுவும் உங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போல 24 மணிநேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.. இப்படி தான் Instagram-ல மியூசிக் நோட்ஸ் போடுறாங்களா? ரொம்பா ஈஸியா?

சரி, எப்படி இந்த புதிய அம்சத்தை பயன்டுத்தி, உங்கள் இன்ஸ்டாகிராம் நோட்ஸ் இல் ஒரு பாடலை பதிவிடலாம் என்று தெரிந்துகொள்ளலாமா? வாருங்கள் எளிய செயல்முறை பற்றி பார்க்கலாம்.

Instagram ஆப்ஸை ஓபன் செய்து, உங்கள் DM ஏரியாவிற்குச் செல்லவும்.
இங்கே, உங்கள் ப்ரொபைல் படத்தின் மேலே பிளஸ் (+) ஐகானை காண்பீர்கள்.
இந்த ஐகானைத் தட்டி இசை பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
லைப்ரரியில் இருந்து நீங்கள் விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் நிலை புதுப்பிப்பாக நீங்கள் பகிர விரும்பும் பாடலின் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களைப் பின்தொடர்பவர்களுடன் அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்கள் பட்டியலுடன் பகிரவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
நீங்கள் சேர்த்த பாடலை இயக்க நோட்ஸ் அம்சத்தை தட்டலாம்.
உங்கள் நோட்ஸ் அம்சத்திற்கு மற்றவர்கள் பதிலளிக்கலாம்.

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த அம்சத்தை நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் சேனல் மூலம் அறிவித்திருந்தார். இது ஒரு பெரிய அப்டேட் அல்ல, இருப்பினும், நோட்ஸ் நிலைப் அப்டேட்களைப் பகிர்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், இசையைச் சேர்ப்பதையும் நீங்கள் விரும்பலாம். உங்கள் நோட்ஸ் உரை புதுப்பிப்புகளைப் பகிர்வதைத் தொடரலாம். மேலும் இவை 60 எழுத்து வரம்பைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Add Music And Songs To Instagram Notes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X