பிப்ரவரி 15 கடைசி தேதி.. UAN ஆக்டிவேட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்..
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு நெருங்குகிறது.
அதன்படி இந்த கட்டாய செயல்முறை முடிக்க ஊழியர்களுக்கு பிப்ரவரி 15 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. முன்பு இதற்கான காலக்கெடு ஜனவரி 15 என நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. கடைசியாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

UAN செயல்படுத்தல் அவசியம் என்ன?
அதாவது யுனிவர்சல் கணக்கு எண் (UAN) என்பது ஒரு EPFO இன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண்ணாகும். குறிப்பாக இந்த யுனிவர்சல் கணக்கு எண் ஒரு பணியாளரின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். பின்பு பல்வேறு EPFO சேவைகளை அணுக UAN ஐ செயல்படுத்துவது மிக முக்கியம் ஆகும்.
மேலும் UAN செயல்படுத்தப்பட்டதும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்குகளை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்கலாம். அதாவது ஆன்லைனில் PF பாஸ்புக்கைப் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யலாம். அதன்பின்பு ஆன்லைனில் பிஎஃப் முன்பனத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உங்கள் கோரிக்கையின் நிலையை தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற பல நன்மைகள் இதில் உள்ளன.
அதேபோல் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும். குறிப்பாக ஈபிஎப்ஓ தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் - யுஏஎன் (Universal Account Number - UAN) மூலம் மட்டுமே திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே நடப்பாண்டில் பணிக்கு சேர்ந்த் தொழிலாளர்கள் அவர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை பெறுவதற்கு அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஏஎன் ஆக்டிவேட் செய்ய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம் (How to Activate UAN):
வழிமுறை-1: முதலில் unifiedportal-mem.epfindia.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தை பார்வையிடவும்.
வழிமுறை-2: அடுத்து லிங்குகள் (Important Links) பக்கத்தின் கீழ் இருக்கும் ஆக்டிவேட் யுஏஎன் (Activate UAN) எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
வழிமுறை-3 அதன்பின்பு உங்களது ஈபிஎப்ஓ விவரங்கள் கேட்கப்படும். அதில் யுஏஎன் நம்பர், ஆதார் நம்பர்,உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி கொடுக்கப்பட வேண்டும். இதுதவிர உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரும் கொடுக்க வேண்டி இருக்கும்.
வழிமுறை-4: அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர்'Get Authorization PIN' என்பதைக் கிளிக் செய்யவும் அதன்பின்பு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். OTP ஐ உள்ளிட்டு அதைச் சரிபார்க்கவும்.

வழிமுறை-5: அனைத்தும் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் UAN எண் ஆக்டிவேட் செய்யப்படும். அதன்பின்பு EPFO சேவைகளை அணுக பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லையும் (பாஸ்வேர்டு) பெறுவீர்கள்.
குறிப்பாக ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகள் அல்லது பிற EPFO சேவைகளை அணுகுவதில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க இந்த செயல்முறையை உடனே முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








